Wednesday, September 30, 2015

மனிதம் வாழ்தல் பண்பாடென்றால்


பிறரை மதித்தல்  பண்பாடென்றால்
    பெரிதும் தேவை இன்றைக்கு
பயங்கர வாதம் ஒழிந்திடவே
     பாரினில் பண்பாடு மிகத்தேவை

அலையும் நுரையும் கடலல்ல   சுற்றுலா என்று மலைப்பிரதேசத்திற்கும் கடற்கரைக்கும் செல்கிறோம். பசுமையைப் பார்த்து பரவசமாகிறோம். அலைகளைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறோம். ஆனால் இவ்விடங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசிப்பதில்லை. நம் தாத்தா பாட்டன் காலத்திலும் அதற்கு முன்னும் எப்படி இருந்திருக்கும்? வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்

Tuesday, September 29, 2015

இளையோர் நீர்தாம் நம்பிக்கை

தம்பி தங்காய் கேட்டிடுவாய்
      தரணி நிலையைப் பார்த்திடுவாய்
இம்மண் வறட்சித் தடுத்திடுவாய்  
      இன்றே செயலில் இறங்கிடுவாய்  
தும்பக் கொடுமை எதிர்த்திடுவாய் 
      துள்ளி எழுந்தே அழித்திடுவாய் 
நம்பி அழைத்தோம் உனைத்தானே
      நாளை உலகம் நீர்தாமே

Sunday, September 27, 2015

கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை


தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தோன்றிய காலத்தில் (1855) இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (1942) தமிழ் உயர்ந்துநின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு என்று கி.வா.ஜகநாதன் அவர்கள் திரு.உ.வே.சா. அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘என் சரித்திரம்’ நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பார். தமிழ்த் தாத்தா தோன்றிய காலத்தில் புலவர்களுக்கும் பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த சங்க இலக்கியங்கள் பின்னர் தமிழ்த்தாத்தா மறைந்ததற்குப் பின்னான காலத்தில் பள்ளிக்கூடங்களிலும் கற்றுக்கொடுக்கப் படுகின்றன என்று சொல்லியிருப்பார்.

Monday, September 21, 2015

வேண்டாவும் வேண்டும் - பெண் சமத்துவம்
நிமிர்ந்த நல்ல நடையும் நேர்கொண்ட பார்வையும் வரையும் கலையில் அதிஅற்புதத் திறமையும் கொண்ட அந்தப் பெண்ணிடம், “ரொம்ப அழகா வரைஞ்சுருக்க, உன் பேரென்ன?” என்று கேட்டேன். அவள் பதில் என்னைச் சில நொடிகள் திகைக்க வைத்தது. அந்த சில நொடிகளில் என் மூளையில் ஏற்பட்ட எண்ணப் பிரளயமோ  மிகப்பெரிது.

Friday, September 18, 2015

பூமியும் பூக்குதிங்கே சோலையாக

படம்: நன்றி இணையம்

பண்பாடு பண்பாடு பண்ணிசைத்து நீபாடு
பண்பெல்லாம் சொல்லியேப் பண்ணிசைத்து நீபாடு
நம்மினம் நம்மொழி நம்பெருமை என்றுபாடு
இம்மண்ணின் பெருமை போற்றிநீ  பண்பாடு

Wednesday, September 16, 2015

எட்டுப்பட்டி கிராமம் எங்கிலும் போஸ்டர் ஒட்டியாச்சே

படம்: இணையத்திலிருந்து

கண்ணம்மா, விழாவுக்கு இன்னும் ஒரு மாசம்கூட இல்லை. சொல்றவங்களுக்கெல்லாம் சொல்லியாச்சுல்ல?

சொல்லியாச்சு தங்கம்மா, நம்மகுடும்பத்துல எல்லோருமே கூவி கூவி சொல்லிட்டு இருக்கோமே...

ஆமாமா! எட்டுப்பட்டி கிராமம் எங்கிலும் போஸ்டர் ஒட்டியாச்சே!

Tuesday, September 15, 2015

கட்டுக்குள் வருமாக் கரிமக் கால்தடம்?


மனிதனின், விலங்குகளின், பறவைகளின், செடிகொடிகளின் - பூமியின் வாழ்வாதாரம் சுற்றுச்சூழல். நாம் பார்க்கும், உணரும், சுவாசிக்கும், கேட்கும், நுகரும் அனைத்துமே நம் சுற்றுச்சூழல் தான். உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என்று அனைத்தும் சுற்றுச்சூழலிருந்தே அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச் சூழலுக்கு நாம் என்ன செய்கிறோம், நம் செயல்களால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு நமக்குக் கண்டிப்பாக வேண்டும்.

Sunday, September 13, 2015

கட்டுரை எழுதப் போறேன், காசு வாங்க போறேன்


இதனால் நம் அன்புத் தமிழ் வலைப்பதிவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால்... திருமயக்கோட்டை நாட்டுக்காரங்க , அதாகப் பட்டது புதுக்கோட்டைப் பதிவர்கள், பதிவர் திருவிழாவிற்கு நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார்கள். இது நாம் அறிந்ததே! இப்போ நம்ம வலைத்தளத் தமிழ் திறமையைச் சோதிக்கப் போட்டி வைக்கிறாங்களாம். கட்டுரையாம், கவிதையாம்...பரிசு..ஒன்றல்ல! இரண்டல்ல! ஐம்பதாயிரம்! ஐம்பதாயிரம்! யாருக்கோ இல்லை, நமக்கே நமக்குத் தான்.

Monday, September 7, 2015

தமிழ் வலைப்பதிவர் கையேடு - குறிப்பு அனுப்பிட்டீங்களா?


 


 வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில்! விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும்  தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.

Saturday, September 5, 2015

போகுமிடம் களைகட்டுது


ஊரெல்லாம் ஒரே பேச்சு
ஊர் ஊராய்க்  குழு சேருது
ஒன்னாச் சேந்தும் போகலாம்
தனியாப் போயும் சேந்துக்கலாம்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...