உள்ளதில் நீயுமடா



காடழித்துக் கானகம் நாடாக்கி
நாகரிக மனிதன் நானென்று  
மார்தட்டி மயங்கும் மனிதா பார்
மார்புவற்றிப் பூமித்தாய் தவிப்பதை



பிள்ளைபல இழந்து விட்டேன்
உள்ளதைக் காக்க வழியுண்டோ
என்றவள் ஏங்கித் துடிக்கிறாள்
உள்ளதில் நீயுமடா மனிதா

29 கருத்துகள்:

  1. உள்ளதைக் காக்க வழியுண்டோ
    என்றவள் ஏங்கித் துடிக்கிறாள்
    அருமை சகோதரியாரே அருமை
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி வருகை :)) மகிழ்ச்சி அண்ணா.
      கருத்துரைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையான பதிவு சகோ நாளை அனைத்து மனிதனிடமும் பணம் இருக்கும் ஆனால் உணவு ?
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதப்பத்தி நமக்கு என்ன? இன்று எனக்கு இருக்கில்ல?
      இப்படிப்பட்ட எண்ணம் தான். :-(

      கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ

      நீக்கு
  3. தாயின் தவிப்பை புரிந்திட்டாய் எம்பாயும்
    நோயினில் வீழ்ந்திடுமே நொந்து !

    தேனு வேதனையாகவே உள்ளது. அருமைம்மா! நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பா இனியா
      ஆமாம், இங்கு என் வீட்டருகே ஐம்பது ஏக்கர் மரங்கள் வெட்டி இடம் தயார் செய்யப்படுகிறது வீடுகள் கட்டுவதற்கு. :-(
      நன்றி இனியா

      நீக்கு
  4. வாவ்! என்ன ஒரு அருமையான வரிகள்! சிறியதாய் பெரிய கருத்து..ஒன்றைச் சொல்லி விட்டீர்கள்! அருமை சகோ!!!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    சகோதரி
    கேட்ட கேள்விகள் நன்றாக உள்ளது.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன். இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

      நீக்கு
  6. அருமை.

    நாளை பற்றி கவலை இல்லாது பூமித்தாயை பாழ் படுத்திக் கொண்டிருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  7. கானகம் அழித்து கானல் நீர் காட்சியாக்கி விட்டார்கள்! அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கானகம் அழித்துக் கானல் நீர்காட்சி - அருமை சகோ
      கருத்திற்கு நன்றி

      நீக்கு
  8. மனித இனம் தனக்கும் சேர்த்துத் தான் அழிவைத் தேடிக் கொள்கின்றது..

    ஆனால் - யாராவது கேட்பார்கள் - என்கின்றீர்கள்!?..

    பதிலளிநீக்கு
  9. நம்மை நாமே தின்றுகொண்டு இருக்கிறோம். வேதனையே.
    தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பது தொடர்பான எனது முதல் பதிவை http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html இணைப்பில் காண அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நிகழ்வை நின்று காண்பாரும் இல்லை
    கேட்பாரும் இல்லை.
    நல்ல விழிப்புணர்வுக் கவிதை தோழி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. இன்று நமக்கு இருக்கு நாளை ?
    மனிதன் விழித்துக் கொள்ளவேண்டும்.
    அருமையான கருத்தைச் சொல்லும் கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்,
    மார்பு வற்றி பூமித்தாய் ,,,,,,,,
    அருமையான வரிகள்,
    உண்மை தானே,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தாமத வருகைக்கு மன்னிக்கவும் பா.
    படமும் பாடலும் சிந்திக்க வைத்தது.
    சிந்திக்கவும் நேரமின்றி ஓடும் மானுடம்.

    பதிலளிநீக்கு
  14. ஒரு தாயின் வேதனை... உணர்ந்து திருந்துவோர் எத்தனைப் பேரோ?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...