Thursday, August 20, 2015

முயல் - சிறுவர் பாடல்
முயல்
பஞ்சுப் பந்து முயலொன்று
தாவித்தாவி வருகுது
காதைப் புடைத்துக் கேட்குது 
பளபளக்கும் கண்ணாலே
சுற்றும் முற்றும் பார்க்குது
மெல்லப் புல்லைத் தின்னுது
கொஞ்சி மகிழ நினைத்தாலே
அஞ்சி ஓடிப் போகுது
அன்பாய் கேரட் தருகின்றேன்
கொஞ்சம் வரச் சொல்லுங்கள்

28 comments:

 1. ஆசை ஆசையாய் அழைத்தாலும்
  அருகே அது வராதே..
  அஞ்சி அஞ்சி ஓடுமே..
  தள்ளி நின்று பார்க்குமே!

  :))))

  ReplyDelete
  Replies
  1. ஆகா! உடனடியாக வருகை தந்து இனிய பாடலும் தந்துள்ளீர்களே :-)

   அஞ்சி ஓட வேண்டாமே
   அருகே வரவும் வேண்டாமே
   தள்ளி நின்று பார்த்தாலே
   கொள்ளை இன்பம் வருகுதே :-) :-)

   நன்றி ஶ்ரீராம்

   Delete
 2. அருமையான பாடல். முயல் படம் வீட்டிற்கு அருகில் எடுத்த புகைப்படமா ? அழகு. பழைய நினைவுகளை மீட்டெடுத்து வந்தது புகைப்படம்.

  பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி.
   ஆமாம், என் வீட்டுக் கொல்லையில் தான் வசிக்கிறார். :-)

   முதலில் கதவைத் திறந்தாலே ஓடி விடுவார், இப்போ ஒரு பத்தடி தூரம் வரை அனுமதிக்கிறார் :-)

   Delete
  2. என் செடி எல்லாம் சாப்பிடுகிறார்

   Delete
 3. வாழும் வகையைக் கெடுக்காமல்
  போகும் வழியை அடைக்காமல்
  புல்வெளி நீரைச் சிதைக்காமல்
  நாளும் நன்மை அருள்வீரே!..

  கேரட் ஒன்றைத் தந்தாலும்
  கீரை தழையைத் தந்தாலும்
  நானாய் புல்நுனி மேய்வதுதான்
  நலமாய் ஆகும் என்றனுக்கு!..

  அன்பின் கவிதை நலம் வாழ்க..
  அருகில் அழைக்கும் நலம் வாழ்க..
  ஆருயிர் வாழ இசை கூட்டும்
  மதுரத் தமிழின் மனம் வாழ்க!..

  இப்படிக்கு.,
  முயல்..

  ReplyDelete
  Replies
  1. அருமை ஐயா, உண்மைதான் அதன் வழியில் விட்டுவிட்டால் போதும்.
   இனிய பாடலுக்கும் அன்பான
   வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா

   Delete
 4. குறும்பு செய்து
  என்னையுந்தான் குதித்தோட வைக்குது....
  அடடா எசப்பாட்டு எழுத வச்சிடுவிங்க போல...ஹஹ

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா எழுதுங்க எழுதுங்க உங்கள் பாடல் வாசிப்பது மகிழ்ச்சிதானே :-)
   நன்றி தோழி

   Delete
 5. காதில் விழுந்தால் தானாகவே வந்துவிடும். கவலைப்படவேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஆமாம் ஐயா, இப்போ கொஞ்சம் பயம் குறைந்துவிட்டது அவருக்கு :-)
   அவருக்கு நண்பர் ஒரு அணிலும் இருக்கிறார்
   நன்றி ஐயா

   Delete
 6. ஆமையுடன் ஓட்டப் போட்டியில்
  ஆமையைப் பார்த்து சிரித்தாயே
  ஓடிப்போய் நீ தூங்கியதால்
  ஓட்டப் போட்டியில் தோற்றாயே
  வெட்கப்பட்டு ஒளிகிறாயோ
  வெட்கம் வேண்டாம் வந்து விடு
  வெல்வது மட்டும் வாழ்க்கையல்ல
  பயமும் வேண்டாம் முயலாரே
  பதுங்கவும் வேண்டாம் முயலாரே
  அன்பாய் அணைப்போம் பயம் வேண்டாம்
  உன்னைத் தட்டிக் கொடுப்போம் முயலாரே!

  ஹஹஹ் சும்மா ஒரு முயற்சி....ஆனால் முயல் மிகவும் மென்மையான சென்ஸிட்டிவானது....

  உங்கள் பாப்பா பாடல் அழகு சகோதரி ...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! ஆஹா! உங்கள் பாடல் அருமை.வித்தியாசமான சிந்தனை. //வெல்வது மட்டும் வாழ்க்கையல்ல// - அருமை அண்ணா .

   நண்பர்களின் பாடல் பின்னூட்டங்களுக்கே நிறைய இது போல் எழுதனும் :-)

   நன்றி அண்ணா

   Delete
 7. அழகிய பாடல் கிரேஸ்! :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா ரவி.

   Delete
 8. சிறப்பான சிறுவர் பாடல்! சந்தங்களை மெருகெற்றினால் இன்னும் ஜொலிக்கும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ
   இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்காக எழுதினேன்.

   Delete

 9. மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
 10. கொஞ்சிக் கொஞ்சிப் பாடவைக்கும்
  குழந்தைப் பாடல் மிக அருமை!

  வாழ்த்துக்கள் தோழி!

  த ம 6

  ReplyDelete
 11. முயல் பாட்டு சூப்பர்...

  ReplyDelete
 12. மனிதர்களைப்பார்த்தாலே
  பயந்துமுயலும் ஓடுது
  பாவம் அந்தமுயலுமே
  பக்குவமாய்ச்சொன்னது
  காய்கறிகள் போதுமேஎனை
  கறிசமைக்கவேண்டாமே.
  ஹ...ஹ...ஹா..ஹாஹா.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...