கண்சிமிட்டல் பார்



மழையில்உன் கண்பார்த்து மோனித் திருக்க
விழைகையில் என்குரல் கேளென்றும் என்முகம்
பாரென்றும் மின்னி முழங்கின  மேகங்கள்
பார்க்கவில்லைப்  பாவையும் எண்ணமெலாம் நீநிறைக்க

சோர்ந்தனவோ? சீற்றத்தில்  இவ்விடம் விட்டகன்று
யாரவன் கள்வனென்று உன்னிடம்  வந்தனவோ?
இம்மழையில் ஏன்வந்தாய் எனநான் பதற 
கண்டாயா எம்மைஎன்று கண்சிமிட்டல் பார் 

26 கருத்துகள்:

  1. கவிதை மழை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இம்மழையில் ஏன்வந்தாய்!..
    (கடும் மழை உடலுக்கு ஒத்துக் கொள்ளாதே!...)

    அன்பின் முகவரி தேடி வந்தேன்!..
    (காணவில்லை எனில் கண்களும் தூங்காதே!..)

    - கவிதையே மழைச்சாரலாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  3. அழகான கண்சிமிட்டல் கண்டேன் தோழி.

    பதிலளிநீக்கு
  4. பாடல் குறுந்தொகை! நன்று!

    பதிலளிநீக்கு
  5. ஆஹா! சில்லென்று ஒரு காதல்!!! கவிதை!! அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு
  6. உள்ளம் வருடிச் சென்றது சாரலாய் உங்கள் கவிதை!

    அருமை தோழி! வாழ்த்துக்கள்!

    த ம 5

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்! தங்கள் தளத்திற்கு புதியவன்! கவிதைகள் நன்று நன்றி!!

    அன்புடன் கருர்பூபகீதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ.
      வருக! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  8. குளுமை தந்தது கவியே நின்கவி.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் கண் சிமிட்டலைப் பார்த்து நான் கண் சிமிட்ட மறந்துவிட்டேன் தேனு. ஹா ஹா ...அருமைம்மா தேனு அசத்துங்கள் மேலும் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  10. அருமையான .,மழைக்கவி நனைந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. மழை என்றாலே இனிமை. பின்பு மழைக்கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா. அருமை தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, மழை இனிமைதான்! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  12. மழையும் கவிதையும் இணைந்தால் அதற்கிணையேது.

    பதிலளிநீக்கு
  13. நானும் தங்கள் கவி மழையில்
    நனைந்து நனைந்து நாழி கரைவதும்
    தெரியாமல் தொலைந்து போக என்னுடல்
    தொட்டது உம்மழை கவி
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. செம்ம ..என்ன ஒரு தமிழ் புலமை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...