Thursday, August 27, 2015

கண்சிமிட்டல் பார்



மழையில்உன் கண்பார்த்து மோனித் திருக்க
விழைகையில் என்குரல் கேளென்றும் என்முகம்
பாரென்றும் மின்னி முழங்கின  மேகங்கள்
பார்க்கவில்லைப்  பாவையும் எண்ணமெலாம் நீநிறைக்க

சோர்ந்தனவோ? சீற்றத்தில்  இவ்விடம் விட்டகன்று
யாரவன் கள்வனென்று உன்னிடம்  வந்தனவோ?
இம்மழையில் ஏன்வந்தாய் எனநான் பதற 
கண்டாயா எம்மைஎன்று கண்சிமிட்டல் பார் 

32 comments:

  1. கவிதை மழை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இம்மழையில் ஏன்வந்தாய்!..
    (கடும் மழை உடலுக்கு ஒத்துக் கொள்ளாதே!...)

    அன்பின் முகவரி தேடி வந்தேன்!..
    (காணவில்லை எனில் கண்களும் தூங்காதே!..)

    - கவிதையே மழைச்சாரலாக இருக்கின்றது...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! உங்கள் வரிகளும் அருமை ஐயா!
      மிக்க நன்றி ஐயா

      Delete
  3. அழகான கண்சிமிட்டல் கண்டேன் தோழி.

    ReplyDelete
  4. பாடல் குறுந்தொகை! நன்று!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  5. ஆஹா! சில்லென்று ஒரு காதல்!!! கவிதை!! அருமை சகோதரி...

    ReplyDelete
  6. உள்ளம் வருடிச் சென்றது சாரலாய் உங்கள் கவிதை!

    அருமை தோழி! வாழ்த்துக்கள்!

    த ம 5

    ReplyDelete
  7. ரசிக்க வைக்கும் கற்பனை! அருமை!

    ReplyDelete
  8. வணக்கம்! தங்கள் தளத்திற்கு புதியவன்! கவிதைகள் நன்று நன்றி!!

    அன்புடன் கருர்பூபகீதன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.
      வருக! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  9. குளுமை தந்தது கவியே நின்கவி.

    ReplyDelete
  10. உங்கள் கண் சிமிட்டலைப் பார்த்து நான் கண் சிமிட்ட மறந்துவிட்டேன் தேனு. ஹா ஹா ...அருமைம்மா தேனு அசத்துங்கள் மேலும் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா மனமார்ந்த நன்றி அன்பு இனியா :)

      Delete
  11. அருமையான .,மழைக்கவி நனைந்தேன்.

    ReplyDelete
  12. மழை என்றாலே இனிமை. பின்பு மழைக்கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா. அருமை தோழி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி, மழை இனிமைதான்! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  13. மழையும் கவிதையும் இணைந்தால் அதற்கிணையேது.

    ReplyDelete
  14. கவி மழையில் நனைந்தோம்...

    ReplyDelete
  15. நானும் தங்கள் கவி மழையில்
    நனைந்து நனைந்து நாழி கரைவதும்
    தெரியாமல் தொலைந்து போக என்னுடல்
    தொட்டது உம்மழை கவி
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. செம்ம ..என்ன ஒரு தமிழ் புலமை.

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...