விதையின்றிக் காடா

கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார் குழந்தாய்
மடிந்தவர் கோடி மனதில் இருத்து
உயிர்நீத்த அந்த உயர்ந்தோர் உணர்வை 
உயிரினில் நீயும் நிரப்பு




விதையின்றிக் காடா இதைநீ உணர்ந்தே
கதையெல்லாம் கேட்டு விடுதலை போற்று
கலகம் விளைக்கும்  கயவர் அழித்தே
உலகினில் தாய்நாட்டை ஏற்று 

29 கருத்துகள்:

  1. தேசபக்தி வெண்பாக்கள் அருமை . சுதந்திர தின நல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோ இனிய சுதந்திர தின வாழ்த்துகள் நலம்தானே... சகோ ?
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ , உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

      நலமே சகோ, நீங்கள்? உங்கள் தளம் வந்து நாளாயிற்று, மன்னியுங்கள். விரைவில் வருவேன்

      நீக்கு
  3. அருமையான வெண்பாக்கள்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  5. தேச பக்தி கொண்ட வெண்பாக்கள் அருமைம்மா தேனு !

    பதிலளிநீக்கு
  6. அருமை கிரேஸ்.. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அருமை. குழந்தையிலேயே சொல்லிக் கொடுக்கப்பட வேண்டியவை.

    பதிலளிநீக்கு
  8. இந்த முறையும் புத்தக வெளியீடுயுடன் சந்திப்பு நடைபெற விரும்புகிறோம்...

    புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

    பதிலளிநீக்கு
  9. வெண் பா அருமை
    சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம+1

    பதிலளிநீக்கு
  10. குழந்தைகள் மட்டுமல்ல அனைவருடைய மனதிலும் பதிய வேண்டியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. உளம் நிரப்ப வேண்டியதைச் சொன்னீர்கள்!
    மிக அருமை தோழி!

    நாள் கடந்தாலும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
    த ம +

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்,
    அருமையான பா

    பதிலளிநீக்கு
  13. அருமை.

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. ஆஹா அருமையான பாக்கள். பள்ளியில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்...வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  15. வெண்பா முயற்சி அருமை. உன்போலும் கணினி கற்றவர்கள் வெண்பா எழுதுவதுதான் பெருமை. சொற்களை இன்னும் கொஞ்சம் செதுக்கலாம். உதாரணமாக, ஈற்றடியை ...“உலகில்உன் நாட்டை உயர்த்து” என்று அமைக்கலாம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். ஆனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய இடம் கவித்துவம்! வெறும் கவி ஆன்மா அற்ற வெறும் இலக்கணக் கூடுகளை யாரும் ஏற்க மாட்டார்கள்...அந்த வகையில் உன் கவியை தேசபக்த ஆன்மா அலங்கரிப்பது போற்றுதற்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா.
      கண்டிப்பாகச் செதுக்கக் கற்றுக்கொள்கிறேன் அண்ணா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...