ஐங்குறுநூறு 33 - குளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்?

நன்றி: இணையம்
 உன்னைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறாரடி  உன் புருஷன்.

இதக் கேளுடி, நீ நல்லாருப்ப.. அந்தக் குளக்கரையில் மருத மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துருக்கில்ல, அது பரந்து விரிந்து குளக்கரை எங்கும் பூக்களைச் சொரிந்திருக்கிரதடி. அங்க, இவரோடக்  குளிர்ந்த மாலை அணிந்த அகலமான நெஞ்சைத் தெப்பமாகத் தானே கொள்ளவேண்டும் என்று  தலைக்குத் தலை  போட்டிப் போட்டுப் பெண்கள் வருகிறார்களாம்.
அவர்கள் அனைவருடனும் இவர் குளத்தில் ஆடியிருக்காராம். பிறகு எதற்கடி இங்கே வர வேண்டும்? அங்கேயே போகச் சொல்லு. 

Please click here for the English translation.

மருதமரம் பரந்து விரிந்து பூக்களைச் சொரிவது போல, இவனும் அங்க இங்க சுத்திட்டு இங்க ஏன் வரணும் என்றும் தலைவி நினைக்கலாம். தலைவியைக் காண வாயில் வேண்டி வந்த தலைவன் கேட்குமாறு தோழியிடம் சொல்கிறாள் தலைவி.


ஐங்குறுநூறு 33 - பாடியவர் ஓரம்போகியார் 
தலைவி தோழிக்குச் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக.

அம்ம வாழி தோழி மகிழ்நன் 
மரு(து) உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப் 
பெண்டிரோடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே 

சொற்பொருள்: அம்ம - கேளு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படும், வாழி தோழி  - வாழ்க தோழி, மகிழ்நன் - மருத நிலத்தலைவன், மருது  - மருத மரம், விரி பூம் - விரிந்து பூக்களைச் சொரியும், பெருந்துறை - பெரிய நீர் நிலை, பெண்டிரொடு - பரத்தையரோடு, ஆடும் - விளையாடுவான், தண் - குளிர்ந்த, தார் - மாலை, அகலம் - பரந்த மார்பு, தலைத்தலைக் கொளவே  - தனக்குத் தானே கொள்ளவே


வாழ்க தோழி நான் சொல்வதைக் கேளு என்தலைவன்
ஓங்கி உயர்ந்த மருதமரம் விரிந்து பூக்கள் சொரியும்
குளத்தில் குளிர்ந்த மாலை அணிந்த தன் மார்பைத் 
தழுவப் போட்டியிடும் பெண்களோடு ஆடினார் என்பர்

33 கருத்துகள்:

  1. சங்க காலத்திற்கு ரசனையோடு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடலும், விளக்கமும். பாடலை வாசித்ததும் ஓரளவு புரிந்தது என்றாலும் நீங்கள் சொல்லி இருக்கும் விளக்கம் படித்ததும் நன்றாகவே பாடல் புரிந்துவிட்டது . அதை விட அதற்கு நீங்கள் தந்திருக்கும் பாடல் எளிமையாக இருப்பதை வாசித்ததும் இன்னும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது சகோதரி.

    விஜு ஆசான், உங்கள் தளம் எல்லாம் படிக்கும் போது ஒவ்வொரு நாளும் தோன்றுவது ஏன் இவர்களைக் கொண்டு நம் தமிழ்நாட்டி தமிழ் பாட நூல் திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என்று. அதே போன்று டிடி அவர்களின் திருக்குறள் விளக்கங்கள்..இப்படி எளிமையாக நம் மாணவர்கள் தமிழ் கற்க முடிந்தால் தமிழ் அழியாது அல்லவா அந்த ஒரு ஆதங்கத்தால் தான்....

    மிக்க நன்றி தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.
      விஜு அண்ணா, டிடி அண்ணா இருவரும் மிக அருமையாய் எழுதுகிறார்கள். என்னையும் அவர்களுடன் சேர்த்துக் குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி அண்ணா. மனமார்ந்த நன்றி. எளிமையாக்கி எடுத்துச் சென்றால் கண்டிப்பாக மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள்.

      நீக்கு
  3. அரே மேம் சாப் எங்கே ஆங்கில வடிவம்...
    தம +
    நறுந்தமிழ் அறிமுகத்திற்கோர் நன்றி..

    பதிலளிநீக்கு
  4. இப்படியெல்லாம் எனக்கு யாரவது விளக்கி சொல்லி இருந்தால் 10 ஆம் வகுப்பு பாஸாகி இருப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க சகோ..உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
      ஹாஹா அப்டியும் பத்துக்கு மேல பாசாயுட்டிங்களே, நீங்கள் திறமைசாலி :)
      உங்கள் கருத்திற்கு நன்றி சகோ

      நீக்கு
  5. அதானே...? ஏன் இங்கு வர வேண்டும்...? பொய்க் கோபத்தை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.
      ஆனால் அது பொய்க் கோபமா? உண்மையாக இருக்கும் , இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  6. வணக்கம்,
    ஓங்கி உயர்ந்த மருதமரம் விரிந்து பூக்கள் சொரியும்//-
    ஓங்கி உயர்ந்த மரம் சொரியும் பூக்கள் சிதறி கிடப்பது போல், அவரின் மனம் தலைவியை விட்டு, பல பெண்களிடம் சென்று,,,,,,,,,,
    தங்கள் விளக்கம் அருமை,
    பொருள் விளக்கம் தந்ததும் அருமை,
    வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மகேஸ்வரி. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வேலை செய்யவில்லையே...

      நீக்கு
    3. வேலை செய்கிறது சகோ, மீண்டும் முயற்சித்துப் பார்த்துச் சொல்கிறீர்களா? நன்றி.

      நீக்கு
    4. மீண்டும் முயற்சித்து தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. அந்த மருத மரமும் மலர்கள் ததும்பும் குளமும் கண்முன்னே - காட்சியாய்..
    அத்துடன் அன்றைய பழந்தமிழனின் பல்துறை வாழ்க்கைக்குச் சாட்சியாய்!..

    ஆனாலும் - அதற்கப்புறமாக...

    பல்துறையாடிய மகிழ்நன் மீதில் -
    மட்டூர் மலராள் மையல் கொண்டனளே!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா.

      ஆமாம், அப்படித்தான் அன்று சில பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பது வருத்தம்.

      நீக்கு
  10. எழுத்துப் பிழையாகி விட்டதே.. அதனால் நீக்கினேன்!..

    பதிலளிநீக்கு
  11. அட..சங்கத்தமிழ் பாடலுக்கு, நடைமுறை தமிழ்ல விளக்கம், எளிய தமிழில் கவிதை என தமிழின் பல பரிமாணக்களை ஒரு பதிவில் காட்டீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி..
      எப்போதும் போல இல்லாமல் மாற்றிப் பார்த்தேன். :)

      நீக்கு
  12. சங்க காலப் பாடலும் எளியஇனிய விளக்கமும் கண்டு ரசித்தேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  13. ரசனையாய் சொல்லியிருக்கீங்க...
    அருமை.

    பதிலளிநீக்கு
  14. நல்ல விளக்கம். பாடலும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்,,,

    பதிலளிநீக்கு
  15. இந்த முறை விளக்கம் நடைமுறைத் தமிழில் நச்சுனு இருக்கு டியர்:)
    இதுபோலும் பாடல்கள் ஆண்களின் பெருமையை போற்றுவதாக, அதாவது அத்தனை பெண்கள் விழுந்துவிழுந்து ஒருவரை நேசிக்கும் பராக்கிரமத்தை நினைத்திருக்கிறார்கள் இல்லையா!! இப்போ இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்:( அழகான விளக்கம் டியர்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. நம்ம ஆத்துக்கு வராம இந்தப் பாழாப்போனவன் குளத்துக்குப் போறான்.

    அங்கேயே போய்த் தொலையட்டும்!!!

    என்கிறாளோ தலைவி..?


    ஹ ஹ ஹா

    பதிவின் தலைப்பும் அதை நீங்கள் விளக்கிய விதமும் அருமை.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...