என்னை வசப்படுத்தி

கிடைத்தப் பொழுதில் குசியாய் அமர்ந்தேன்
புடைத்ததோர் சீரியப் புத்தகம் தூக்கி
இருபக்கம் வாசித்த வேளை 
அருகினில் வந்தாய் அழகாய்க் கவர்ந்தே 



விதையொன்றைக் கவ்வி விருட்டென்றுச் செல்லாமல்
எதையெண்ணிப் பார்க்கிறாய் என்னைக் குருவியே
வித்தையில் என்னை வசப்படுத்தி
வைத்ததில் சென்றது  வேகமாய் நேரமே





27 கருத்துகள்:

  1. ஆஹா புகைப்படங்கள் அத்துனையும் அருமை, என்ன சொன்னார்கள் தங்கள் பார்வையில் விதைக்கொண்டு,,, வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "கதைக்க வந்தால்
      விதைக்கு என்கிறாயே"
      என்று சொன்னார்கள் :)
      நன்றி மகேஸ்வரி

      நீக்கு
  2. குருவிப்படங்களும் அதற்கேற்ற ஆக்கமும் வாசிக்கும் எங்களையும் வசப்படுத்திவிட்டன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. மூன்று படத்திலும் குருவிக்கு 3 வித நிறங்கள்.
    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? நடுவில் இருக்கும் இரண்டும் ஒரு பறவையே - சிட்டுக்குருவி. ..முதலிலும் கடைசியிலும் இருப்பது ஒன்று - northern cardinal.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி

      நீக்கு
  4. பறவைகளின் செய்கைகளை இரசித்துக் கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது. அருமையான படைப்பு. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    எனது புகைப்பட வலைப்பூவில் சில வகை பறவைகளின் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளேன். தங்களது கருத்துக்களை சொல்லுங்களேன்.

    http://natureelegance.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தோழி ,நன்றி.
      உங்கள் படங்களைக் கண்டிப்பாகப் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி

      நீக்கு
  5. படங்களும்
    படங்களுக்கேற்ற பாவும்
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  6. குருவி கண்டு பொழிந்த கவிதையை
    மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
    (குசிக்குப் பதில் மட்டும்
    வேறு வார்த்தை இருந்திருக்கலாமோ )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா.
      ஆமாம் ஐயா வேறு வார்த்தை போட்டிருக்கலாம், யோசித்தேன், பிறகு விட்டுவிட்டேன். முடிந்தால் மாற்றுகிறேன் ஐயா.

      நீக்கு
  7. அட தேனு ஆஹா குருவிகளும் வசப்பட்டு விட்டனவே தங்களிடம் கதை பேச வந்திச்சா.ம்..ம் படங்கள் அருமை! சொல்லாடல் சுவையாக இருந்ததும்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இனியா, நலமா?
      நீங்க தேனு னு கூப்டுறது நல்லா இருக்கு :)
      ஆமாம் குருவிகளிடம் பேசினால் நேரம் போவதே தெரிவதில்லை.
      பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி..

      நீக்கு
  8. குருவியிடம் பேசும் கோதையே என்னிடம் பேசினால் என்ன.? ஹஹ சும்மா எனக்கும் உங்கள் வரிகள் படிக்கும் போது எழுதத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னிடம் பேச உவகைதான் தோழியே
      உன்வரி இங்கே உளம்தனை ஈர்த்ததே

      ரசித்தேன் தோழி, மிக்க நன்றி :)

      நீக்கு
  9. படமும் அதற்கேற்ற கவிதையும் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  10. பறக்கும் “சிறுவுலகம்”! பார்த்தபடி தன்னை
    மறக்கும் பொழுதில் மயங்கப் - பிறக்கும்‘உம்
    எண்ணம் நறுங்கவிதை! எம்மை வசப்படுத்தும்
    வண்ணம் அளித்தீர் வரைந்து!

    அருமையான கவிதைப் பதிவு.

    தொடர்கிறேன் சகோ.

    த ம 7.....தமிழ் மணத்திற்கு.

    நன்றி

    பதிலளிநீக்கு
  11. ஓஹோ கவிதை வரணும்னா ஒரு பறவை வரணுமோ...?
    நிறைய பறவைகளை அனுப்பி வைக்கிறேன்...
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அனுப்புங்க அண்ணா , முடிஞ்சா ஆட்களை அனுப்புங்க , குடும்பத்தோடு நீங்களே வந்துடுங்க :-)
      நன்றி அண்ணா

      நீக்கு
  12. குருவியை ரசிப்பதா இல்லை கவிதையை ரசித்திடவா?
    இரண்டுமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு முதல் நன்றி. இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ

      நீக்கு
  13. குருவி என்று சிறியவர்களிடம் சொன்னால் விஜய்தான் அவர்கள் நினைவுக்கு வருகிறார் என்ன சொல்ல....ம்ம்ம் குருவிகள் மறைந்து, மறந்து வரும் காலத்தில் குருவியுடன் அருமையான கவி நடையில் கதைக்க நினைக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! மிகவும் ரசித்தோம்....குருவியையும், அருவியாய் கொட்டும் உங்கள் கவிதையையும்....குருவிக்கு இது புரிந்திருக்கும் மிகவும் சந்தோஷத்துடன் தனது சகாக்களையெல்லாம் கொண்டுவந்து விடும் பாருங்கள்.....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...