Wednesday, May 20, 2015

மழை


உறங்கிக் கிடந்தவளைத் தட்டி எழுப்பினாய்
          உற்சாகம் பெருகவே                                    
சிறகு விரித்திடவே வானம் துலக்கினாய்    
          சிலிர்ப்பித்தாய் உயிர்க்கவே                    
திறந்த முகிலினின்று கொட்டும்  அழகினில்
          திகட்டாமல் மயக்கினாய்                  
பறந்த நினைவுகளில் பாடல் கருவென        
            பட்டென்று வந்திறங்கினாய்
48 comments:

 1. இந்த மாதிரி உணர்வு இங்க வரணும்னு பாத்தா மழையே வர மாட்டேங்குது.... :(

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம் ஆமாம்..
   சீக்கிரம் வந்துடும் :)

   Delete
 2. திறந்த முகிலினின்று கொட்டும் ,,,,,,,,,
  அழகிய வார்த்தைகள்.
  சுவாசித்தேன். நன்றி.

  ReplyDelete
 3. கவிதை அருமை ..
  இன்னும் ஒரு நாள் இருக்கே...
  அதற்குள்ளே ஸ்டார்ட் மியுசிக் ...?
  தம +

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா.
   ஹாஹா ஆமாம், ஆனால் படிப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடிந்தது. :)

   Delete
 4. அன்புள்ள சகோதரி,

  பாடல் கருவென பட்டென்று பாடிய பாடல் அருமை.

  த.ம. 4.

  ReplyDelete
 5. நலம் தானே தேன்?.அடிக் கடி காணாமல் போகிறீர்கள் ம்..ம்.ம் மழை பற்றிய விருத்தம் அருமைம்மா. ரசித்தேன். மேலும் தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. நலமே தோழி. ஆமாம், எதெதுவோ வந்து கொஞ்சம் வழிமாற்றம் செய்கிறது தோழி..இனி இடைவெளி வரக் கூடாதென நினைக்கிறேன்.
   பாராட்டும் கருத்துரைக்கு நன்றி தோழி

   Delete
 6. அட்லாண்டா மழையில் நாங்களும் நனைஞ்சுடோம் டியர்:)

  ReplyDelete
  Replies
  1. நன்றி டியர்..இப்போ வெயில் அனுப்பவா? :) :)

   Delete
 7. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 8. கோடைக் காலத்திற்கேற்ற நல்ல மழை. நன்றி.

  ReplyDelete
 9. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. சூப்பர் கிரேஸ்.. அருமையான கவிதை

  ReplyDelete
 11. மழையில் நனைந்து...மகிழ்ந்தேன்...சகோ அசத்தல்

  ReplyDelete
 12. மழையை பற்றி யோசித்தால், முகிலினின்று கொட்டும் மழை போல எழுதிக் கொண்டே இருக்கலாம். அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  ReplyDelete
 13. நனைந்தேன்(கவிதை) மழையில்!

  ReplyDelete
 14. தமிழ்நாட்டில் இப்போது கோடைமழை வெளுத்துக் கட்டியது. கவிதையின் ஈரத்தைப் பார்த்தால், இந்த மழைக்கு இங்கு அண்மையில் மதுரைக்கு வந்து நனைந்தாற் போல் இருக்கிறது.
  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
   மதுரை வரவில்லை, இங்கும் கோடை மழை தான் ஐயா

   Delete
 15. என்னையும் நனைத்தது கவிமழை...

  ReplyDelete
 16. ஆஹா... அழகுப்பா... அழகு பா... பட்டென்று வந்திறங்கினாய் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது கிரேஸ். .

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி தோழி.
   அட, ஆமாம் நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது.
   எப்பொழுதும் மழை கவிதை எழுத வைப்பதால் அப்படி எழுதிவிட்டேன். வந்திறங்கினாய் என்பது மற்ற வரிகளுக்குப் பொருந்துகிறது

   Delete
 17. ஆஹா! என்ன அழகான ஒரு கவிதை...வாசிக்கும் போதே குளிர்விக்கின்றது....

  கேரளாவில் கோடை சீசன் மழை பெய்து குளிர்வித்துவிட்டது....

  தமிழ் நாட்டிலும்....ஆனால் சென்னையில் இல்லை சென்னைக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்களேன்......

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ. சென்னைக்கு அனுப்ப ஆசைதான்.. :)

   Delete
 18. கவிதையை படித்ததும்...

  " என் அறைக்குள் மழை ! "

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.
   கண்டிப்பாகத் தங்கள் தளம் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி.

   Delete
 19. மழை! அது சுகம் தரும் சுகந்தம்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம +10

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். உங்கள் கருத்திற்கு நன்றி சகோ.

   Delete
 20. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!
  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
  http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
  மற்றும்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   ஓராண்டு நிறைவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் சிறக்க வாழ்த்துக்கள்! தளம் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி சகோ.

   Delete
 21. வானம் துலங்கதமிழ் கானம் நிறையு மனம்

  மோனம் கலைத்து வருக!

  தேனின் இனியமொழி தேக்கும் அமுதுவடித்

  தாக்கிப் படைத்துத் தருக!  மேகம் அனுப்பமழைப் பிள்ளை புறப்படுக

  மின்னல் விரல்கள் அசைய!

  தாகம் கொண்டபுவித் தாயும் அரவணைக்கத்

  தங்கிப் பயிர்கள் வசிய!  நீரின் மொட்டுதிர நிலத்தின் மலருமழை

  நின்று போன இங்கு!

  சீரில் சுவைநிறைத்துச் சொல்லும் இக்கவிதை

  வென்று போன தங்கு!

  கவிதை சொட்டும் கவிதை.

  அருமை சகோ.

  தொடருங்கள். வாழ்த்துகள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அண்ணா..சிலிர்த்துவிட்டேன். மிக அருமை அண்ணா..விஜூ அண்ணாவாச்சே :)
   உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மனம் நிறைந்த நன்றி. இப்பொழுதே இன்னும் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது..மிக்க நன்றி அண்ணா

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...