பெண்மையை நான் மதிக்கிறேன்






எனக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் முத்துநிலவன் அண்ணா, சிறந்த இரு கவிதைகளைப் பகிர்ந்து மற்றவரும் வலைப்பின்னலாகத் தொடரலாம் என்று சொல்லியிருந்தார். பெண்மையை மதித்து மற்றவரையும் மதிக்கத் தூண்டும் அண்ணாவிற்கு என் அன்பான வணக்கங்கள். என் அன்புத்தோழி மைதிலி பெண்மையை நான் மதிக்கிறேன் என்ற தலைப்பில் அண்ணா தொடங்கிவைத்தத் தொடர்பதிவைத் தொடர்ந்தார். மைதிலிக்கும் என் அன்பு வாழ்த்துகள்!
அண்ணாவின் பதிவைப் பார்த்ததிலிருந்தே எனக்கும் தொடர வேண்டும் என்று ஆசை. ஆனால் வலைச்சரப்பணி, மேலும் பிள்ளைகளின் பள்ளியில் இந்தவாரம் பார்த்தா இத்தனை கூட்டங்கள்!! இதெற்கெல்லாம் மேலாக என் கணவர் ஊரில் இல்லை, அதனால் பிள்ளைகளைப் பள்ளியில் விடுவதில் தொடங்கி அவர் செய்யும் பணிகளையும் நானே செய்ய வேண்டியதாகப் போயிற்று. (எல்லாம் அவர்தானே செய்கிறார் என்று யாரும் கிண்டல் அடிக்கக் கூடாது, ஆமாம் சொல்லிட்டேன். :) ) பள்ளியில் ஆறு, ஏழு  வயது குழந்தைகள் "Ms.Grace, you are awesome" என்று சொன்னபொழுது எத்துனை மகிழ்ச்சி!!  இதையெல்லாம்  ஏன் சொல்கிறேன் என்றால், 'நடத்திக் காட்டுவேன்' என்று நடத்திக் காட்டிட்டேன்ல? :))
பெண்மையை நான் மதிக்கிறேன் என்று சொல்லும்பொழுது நான் மதிக்கும் ஒரு பெண் என் நினைவில் வந்தார். பெண்மையை மதித்து, குழந்தைகளை மதித்து, வறியவரை மதித்து, மனிதத்தை மதித்து அவர் செய்யும் பணிகள் ஏராளம். அவர் சென்ற ஆண்டு மகளிர் தினத்தன்று ஒரு கவிதை எழுதியிருந்தார். என் இனிய தோழி, உங்களுள் பலரும்  அறிந்த எழில் தான் அவர். 'நடத்திக்காட்டும்' அருமையான பெண்மணியின், அருமையான கவிதையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

"அருமையான மனுசிங்கதான்
ஆனாலும் அவளைக் காமத்துடன் தான்
உற்று நோக்க முடிகிறது எனும்
பதர்கள் இருக்கும் வரை......

........
.......சுயத்தை இழக்காத
எதுவும் தான் மகிழ்வு 
எனும் உள்ளுணர்வு
பெண்களிடம் தோன்றும் வரை......"
முழுக்கவிதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்

"ஒரு நாள் மட்டும் வாழ்த்துச் சொல்லி , பரிசுகள் வழங்கி, வெளியில் உணவருந்துவதில் முடிவதில்லை மகளிர் நாள்... மீதமுள்ள 364 நாட்களிலும் பெண்ணை சக உயிராய் நினைத்து ,இணைத்து, இணைந்து வாழ்வதில் இருக்கிறது...." - சரிதானே?


இதே தலைப்பில் நீங்களும் உங்களுக்குப் பிடித்த கவிதைகளைப் பகிருமாறு வேண்டுகிறேன்.

28 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனைக்குறிய விடயங்கள் அடங்கிய கவி அருமை இனிய மகளிர் தின வாழ்த்துகள் சகோ
    தமிழ் மணம் 1
    எனக்கு இம்பூட்டு பக்குவம் போறா ஆகவே ஜூட்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ..

      பக்குவம் போதாதா? இப்டி சொன்னா எப்டி சகோ? :)

      நீக்கு
  2. பக்குவம் கிடக்குது ஒரு பக்கம்.
    நேரமிருந்தா கொஞ்சம் வாங்களேன்
    எங்க பக்கம். நீங்க சொன்னதைத்தான் நானும் சொல்ல முயற்சி பன்னேன்.
    ஆனாலும் அது நம்ம மக்க பார்வைக்கு திரியலையே. தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பக்கம் பார்த்துள்ளேன் சகோ, அன்று கருத்திட முடியவில்லை. மீண்டும் வருகிறேன்.
      மக்களுக்குப் புரியும் வரை சொல்லிக்கொண்டே இருப்போம்!
      நன்றி சகோ

      நீக்கு
  3. பெண்ணிற் பெருந்தக்க யாவுள..

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  4. ஒரு நாள் மட்டும் வாழ்த்துச் சொல்லி , பரிசுகள் வழங்கி, வெளியில் உணவருந்துவதில் முடிவதில்லை மகளிர் தினம்... எல்லா நாட்களிலும் எல்லா பெண்களையும் சக உயிராய் நினைத்து வாழ்வதில் இருக்கிறது...."

    இதத்தான நானும் சொன்னேன். ஆனா எனக்கு பைத்தியம் அப்டின்னு சொல்லிட்டாங்க

    இப்படிக்கு
    குணா (என்கிற ) கமல்ஹாசன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சரியாத்தான் சொல்லியிருக்கீங்க சகோ, அந்தக் கவிதையை நானும் பார்த்தேன். புரியாதவர்கள் சொல்வதைக் கண்டுகொள்ளாதீர்கள் சகோ.. :)

      நீக்கு
  5. சிறப்பான கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவுகள்

    பதிலளிநீக்கு
  7. பின்தொடரும்படி அழகாகவும், உண்மையான பெண்மையின் உயர்வையும் எழுதியபின் தொடராமல் எப்படி இருக்க? இவ்வளவு வேலைக்கு இடையிலும் எழுதும் உன் ஈடுபாட்டுக்கு ஒரு ராயல் சல்யூட்..அருமைம்மா...த.ம.5.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா..எல்லாம் உங்களைப் பார்த்தும், நீங்கள் மற்றும் நண்பர்கள் கொடுக்கும் ஊக்கமும் அண்ணா..
      எவ்வளவு வேலைகள் செய்கிறீர்கள், நீங்கள்!! உங்களுக்குத்தான் ராயல் சல்யூட் :)

      நீக்கு
  8. முடிவில் சொன்னதே 100% சரி...

    மகளிர் தினம் என்றுமே... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'என்றுமே' என்று வாழ்த்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி அண்ணா

      நீக்கு
  9. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  10. என் பார்வையில் நானும் சொல்லியிருக்கிறேன். தோழி நேரம் இருப்பின் வருக.

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கும் தோழி எழிலிற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதை மற்றும் பதிவு கிரேஸ்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. பகிர்ந்த கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும் கிரேஸ். மகளிர் தினம் கொண்டாடுவதால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது என்று சிலர் கேட்கிறார்கள். இருப்புகள் வெளித்தெரியாமல் அலட்சியப்படுத்தப்படும் நிலையில் தங்கள் இருப்பை எப்படிதான் நிரூபிப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதமஞ்சரி.
      ஆமாம், எத்தனைக் காலம் இதையே சொல்லிக்கொண்டிருப்பது என்றும் தோன்றும்..முழுச்சமத்துவம் கிடைக்கும் வரை, முழு மரியாதை கிடைக்கும் வரை முழங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டும்..காலம் காலமாக பெண்கள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம்..மாற்றங்களும் நிகழ்கின்றன..இன்னும் தேவையானவற்றிற்கு குரல் கொடுத்துக் கொண்டேதானே இருக்க வேண்டும்?
      நீங்கள் சொல்வது போல, அலட்சியபப்டுத்துபவர்கள் இந்த ஒரு நாளாவது சிந்திக்கட்டுமே :)

      நீக்கு
    2. நன்றி கீதமஞ்சரி.
      ஆமாம், எத்தனைக் காலம் இதையே சொல்லிக்கொண்டிருப்பது என்றும் தோன்றும்..முழுச்சமத்துவம் கிடைக்கும் வரை, முழு மரியாதை கிடைக்கும் வரை முழங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டும்..காலம் காலமாக பெண்கள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம்..மாற்றங்களும் நிகழ்கின்றன..இன்னும் தேவையானவற்றிற்கு குரல் கொடுத்துக் கொண்டேதானே இருக்க வேண்டும்?
      நீங்கள் சொல்வது போல, அலட்சியபப்டுத்துபவர்கள் இந்த ஒரு நாளாவது சிந்திக்கட்டுமே :)

      நீக்கு
    3. நன்றி கீதமஞ்சரி.
      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். அதுபோல் எத்தனை காலம்தான் இதையே சொல்லிகொண்டிருப்பது என்றும் கேட்கின்றனர், முழுச் சமத்துவம் கிடைக்கும் வரை, முழு மரியாதை கிடைக்கும் வரை முழங்கிக் கொண்டேதானே இருக்க வேண்டும்?

      நீக்கு
  15. சிறப்பான கவிதை சகோதரி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. எல்லா தினமுமே பெண்கள் தினம்தான்......

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...