உழவாலன்றோ...


உழவின்றி உயிருண்டோ சிந்திப்பீரே
உழவரைப் போற்றவே நினைத்திடுவீரே!

எத்தொழிலும் சிறப்பாம் உலகத்தாரே
இத்தொழில் முதன்மையாம் உணர்ந்திடுவீரே!

இலைதளை கொண்டே வீடுசெய்யலாம் - உழவு
இல்லையென்றால் எதை உண்பீர் தெளிந்திடுவீரே!

அறுவடைத் திருநாளாம் பொங்கல் இன்று
அறுசுவை உணவோடு மகிழ்ந்து கொண்டாடுவீர்

உழவும் உலகமும் தழைக்கவே போற்றுவோம்
உலகம் சுற்றும் மஞ்சள்  கதிரவனை!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

26 கருத்துகள்:

  1. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  2. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    \
    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தாத்தா..
      என் கவிதையைப் பாடியிருப்பது இனிமை, மிக்க நன்றி தாத்தா..

      நீக்கு
  5. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பொங்கல் பானை கவிதையோடு நன்றாகவே பொங்குகிறது
    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    தமிழ் மணம் - 1

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதை.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கவிதை.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. உழவு போற்றும் உன்னத வரிகள். இனிய பொங்கல் வாழ்த்துகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  12. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. தங்கள் புத்தகம் குறித்து என் மனதில் பட்ட வரிகள் மனசு தளத்தில்..
    http://vayalaan.blogspot.com/2015/01/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  15. வாழ்க நலம்!..
    அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  16. எப்படி மிஸ் ஆகிப் போனது?! அருமையான வரிகள்! உழவிற்கு வந்தனை செய்வோம்!

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  18. டியர்! பொங்கலை விட சுவையா போங்கிருக்கு உங்க கவிதை :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...