துளிர் விடும் விதைகள் - திரு.தமிழ் இளங்கோ ஐயாவின் பார்வையில்

எனது எண்ணங்கள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் திரு.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் என்னுடைய 'துளிர் விடும் விதைகள்' நூலைப் படித்து தன் தளத்தில் அறிமுகம் செய்துள்ளார். தனக்குப் பிடித்த கவிதைகளைச் சொல்லி, அருமையானதொரு எம்.ஜி.ஆர். பாடலையும் இணைத்துப் பகிர்ந்திருக்கிறார்..
அவருக்கு என் உளமார்ந்த  நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அவர் பதிவை இங்கே பகிர்கிறேன்.

ஐயா அவர்களின் பதிவைப் படிக்க, இணைப்பு இதோ,

வி.கிரேஸ் பிரதிபா – துளிர் விடும் விதைகள் (நூல் அறிமுகம்).




அவர் தன் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் முத்துநிலவன் அண்ணாவின் புத்தக வெளியீட்டில் ஐயாவைச் சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  அப்பொழுது எடுத்தப் படம் மேலே.

என் உளமார்ந்த நன்றி திரு.தமிழ் இளங்கோ ஐயா..


14 கருத்துகள்:

  1. உங்கள் நூல் பற்றி திரு.தமிழ் இளங்கோ அவர்களின் விமர்சனத்தைப் படித்தேன். வாழ்த்துக்கள் சகோதரி. ஐங்குறு நூற்றிற்கும் உரை எழுதியிருக்கிறீர்களாமே! படிக்க ஆவலாக இருக்கிறது. உங்கள் வலைத்தளத்திற்கு வருவது இதுவே முதல் முறை. இனிதான் உங்கள் பழைய பதிவுகளைப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே! உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. ஆமாம் சகோ, மேலே ஐங்குறுனூறு என்பதைச் சொடுக்கினால் அனைத்தும் வந்துவிடும்..
      உங்கள் கருத்திற்கும் அன்பான வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி

      நீக்கு
  2. படித்தேன் அருமையாக எழுதியிருந்தார்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    சகோதரி..

    இளங்கோ ஐயாவின் பக்கம் பார்த்தேன் மிகஅருமையாக சொல்லியுள்ளார்.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அருமை!.. உங்கள் பெருமையை இனிக்க இனிக்கக் கேட்டுக் கொண்டே இருப்போம்!

    இளங்கோ ஐயா அவர்களுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. ஐயா அவர்களின் தளத்தில் நேற்றே படித்துவிட்டேன்! நூல் புத்தகச்சந்தையில் (சென்னையில்) கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  6. தங்கள் நூல் அறிமுகம் பற்றிய, எனது பதிவை தங்களது பதிவினில் சுட்டிக் காட்டிய சகோதரிக்கு நன்றி. நண்பர்களுக்கு பரிசளிக்கும் நூல்கள் வரிசையில் உங்களின் இந்த நூலையும் சேர்த்துள்ளேன். தஞ்சைக்கு செல்லும்போது அகரத்தில் சில பிரதிகளை வாங்கி வைத்துக் கொள்வேன்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
  7. அருமையான விமர்சனம் + பிடித்த பாடலுடன்....

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...