Friday, December 19, 2014

நிலா ஒரு அழகிய மலர்

thanks Google

பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடம் சென்றேன். விலைப்பட்டியல் போட்ட பெண்மணி அணிந்திருந்த அடையாள அட்டையில் 'Nila' என்று பெயர் இருந்தது. எனக்கு ஒரே ஆர்வம், எந்த மொழி, என்ன அர்த்தம் என்று அறிந்துகொள்ள. அவரிடம் கேட்டேன், "நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் ஒன்று கேட்கவா?".

அவர், "தாராளமாய்" என்றார். "உங்கள் மொழியில் உங்கள் பெயரின் அர்த்தம் என்ன என்று சொல்வீர்களா? ஏனென்றால் என் மொழியிலும் உங்கள் பெயரின் உச்சரிப்பில் பெயர் இருக்கிறது, அதனால் கேட்கிறேன்" என்றேன். "ஓ உண்மையாகவா?" என்று வியந்துகொண்டே, "ஸ்வஹிலி' என்ற என் மொழியில் 'அழகிய மலர்' என்று அர்த்தம்" என்றார். அழகாய் இருக்கிறது, நன்றி என்றேன். "மகிழ்ச்சி", என்றவர், "உங்கள் மொழியில்?" என்றார். 

"தமிழ் என்பது என் மொழி, அதில் 'Nila' என்றால் மூன் என்றேன். "ஓ வாவ்! நன்றி, இன்று புதியதாய் ஒன்று கற்றுக்கொண்டேன்" என்றார். "நானும்" என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன். அவர் ஆப்பிரிக்க பெண்மணி. தன் நாட்டின் பெயரை அவர் சொல்லவில்லை. கூகிள் குருவிடம் கேட்டு 'ஸ்வஹிலி' என்பது தான்சானியா, கென்யா, மற்றும் உகாண்டாவில் பேசப் படும் மொழி என்று அறிந்துகொண்டேன்

23 comments:

 1. ஸ்வஹிலி - அழகான பெயர்... உச்ச்ச்ச்சரிப்பதற்குத் தான்... க்கும்...! ஹிஹி...

  ReplyDelete
 2. நிலா - ஒரு அழகிய மலர்..
  மலர் - ஒரு அழகிய நிலா!..

  நிலா மலரும்!.. மலரும் நிலா!..

  நிலவும் மலரும் பாடுது!.. என் நினைவில் தென்றல் வீசுது!..
  - என்ற இனிமையான பாடல் நினைவில் மலர்கின்றதே!...

  ReplyDelete
 3. ஆஹா! அருமையான புதியதாய் ஒன்றை நாங்களும் கற்றுக் கொண்டோம். ஆம் ஸ்வஹிலி நீங்கள் சொல்லி இருக்கும் நாடுகளில் பேசப்படும் மொழி. கென்யாவில் உறவினர் இருந்ததால்....அறிந்தது....மிக்க நன்றி பகிர்விற்கு..

  ReplyDelete
 4. ஆகா... நிலா நல்ல பெயர்...
  ஒரு புதிய மொழியை அறிந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அன்புள்ள சகோதரி,

  ‘நிலா’ பற்றி ஆப்பிரிக்க பெண்மணியிடம் அழகிய மலர் கேட்டு அறிந்து கொண்டதை அறிந்து மகிழ்ந்தேன்.
  இதைத்தான் ‘நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்’ என்று கமல் ஒரு படத்தில் பாடியிருப்பாரோ?
  நன்றி.

  ReplyDelete
 6. இரவின் மலர் நிலவு என்றொரு கவிதை எழுதலாம் போலிருக்கிறதே.....!
  த ம 3

  ReplyDelete
 7. இரவில் மலர்நிலவு இன்பவான் பூக்க
  வரவேற்கும் வண்டாக விண்மீன்! - மரந்தேட
  வானளவு கற்பனைகள் வாசல் திறக்கிறதே,
  மானெனத்தான் துள்ளும் ‘மதி‘!

  எழுதியே விட்டேன்.
  நன்றி.

  ReplyDelete
 8. கிரேஸ் ஆஹா உரைநடையில் ஒரு கவிதை!! அழகு! அழகு!!

  ReplyDelete
 9. வணக்கம் சகோதரி..! நிலா...என்பதும் வானச் சோலையில் பூக்கும் ஒரு மலர்தானே..!இதை நான் சொல்லவில்லை.பாரதிதாசன் சொல்லியிருக்கிறார்!
  "நீல வான ஓடைக்குள்ளே முகம் மறைத்து
  நிலவென்று காட்டுகிறாய் ஒளி முகத்தை!.....என்ற பாடலில் (புரட்சிக்கவி..காப்பியத்தில்)........
  "வானச் சோலையிலே பூத்த தனி பூவோ?
  சொக்கவெள்ளிப் பாற்குடமோ..?".....என்று.
  படமும் பதிவும் அருமை..!.மாப்பிள்ளை,குழந்தைகள் அனைவரின் நலனுக்கு வேண்டுகிறேன்.!..
  "எண்ணப்பறவை"..தங்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறது!.

  ReplyDelete
 10. இன்று நானும் ஒன்றைப் புதிதாய்க் கற்றேன். நன்றி கிரேஸ். என் மகள் வெண்ணிலாவை ஆஸியில் அனைவரும் வெனிலா என்றே அழைக்கின்றனர், புரிந்துகொள்கின்றனர். அதனால் எப்போதும் ஸ்பெல்லிங் குழப்பம் வரும். :)))

  ReplyDelete
 11. பெயருக்குப் பொருள் என்பதானது மிகவும் சிறப்பாக சிலருக்கு அமைந்துவிடுகிறது. தாங்கள் கேட்ட கேள்வியும், அவரது பதிலும் பகிர்வும் அருமை. ஓர் அறிஞர் என்னிடம் ஜம்பு என்பதற்கு ஐந்து பொருள்கள் உள்ளன, உனக்குத் தெரியுமா? என்றார். ஓரிரண்டு தெரிந்தாலும் பின்னர் அகராதியைப் பார்த்து முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.

  ReplyDelete
 12. நிலா என்னும் சொல் பிற மொழிகளிலும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்
  சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 13. த.ம.5
  மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 14. கவிதை போன்ற உரைநடை... அதற்க்கேற்ற அற்புதமான படம் !

  கடந்த ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருதேன்... புரியாத பெயர்களில் அறியாத பல நாடுகள்... அந்த நாட்டின் கொடிகள்...

  இத்தனை நாடுகள் இருந்தும் உலக செய்திகள் சுற்றுவதெல்லாம் அமெரிக்கா, ஐரோப்பாவின் ஐந்து நாடுகள், சீனா, இஸ்ரேல், அவ்வப்போது இந்தியா,இந்தியாவை பற்றி பேசும்போதெல்லாம் இடைசொருகலாய் பாகிஸ்தான், குண்டு வெடிப்புகளின் போதுமட்டும் ஆப்கானிஸ்த்தான், சிரியா, பாலஸ்த்தீனம்... குண்டுகள் கொன்றுகுவித்தபோதுகூட இலங்கையை கண்டுகொண்டதில்லை !!!

  " ஸ்வஹிலி " மற்றும் தான்சானியாவை படித்ததும் மீன்டும் அதே நினைவு !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
  http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

  ReplyDelete
 15. அட அழகு ... எது எல்லாம் கவனிக்குறீங்க... கவிஞர்'ன சும்மா வா :)

  ReplyDelete
 16. எப் பியில் படித்தேன்... இருப்பினும் ... பதிவு அழகு

  ReplyDelete
 17. ஆறுமனமே ஆறு ...த ம

  ReplyDelete
 18. "ஸ்வஹிலி' உகாண்டாவில் பேசப்படும் வார்த்தையே...
  வாழ்த்துகள்

  ReplyDelete
 19. தங்களனைவருக்கும் - அன்பின் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...