Wednesday, December 31, 2014

இணைந்தே பயணிக்க


மகிழ்ச்சி பலதந்து மங்கிடா நட்பை
நெகிழவேச் சேர்த்து நிறைந்திட்ட  ஆண்டே
மகிழ்ந்தே பலநன்றி மாலையாய்ச் சூட்டி
நெகிழ்ந்தே அனுப்புகிறோம் நின்னை!இணைந்திட்ட நட்பின் இதயமெலாம் புத்தாண்டே
இணைந்தே பயணிக்க இன்னருள் தாராய்!
இணையிலா அன்பு இனிதாய் நிலைபெற
இன்முகம் என்றும்நீ   காட்டு!


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Monday, December 29, 2014

சகோதரர் கில்லர்ஜி பார்வையில் துளிர் விடும் விதைகள்

"ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று மேல்நோக்கி வர நீண்ட நேரங்களானது

முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் பார்வையில் என் நூல்

சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலினைப் பற்றி விமர்சனம் எழுதியுள்ளார்கள்.

"துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன."

Friday, December 19, 2014

நிலா ஒரு அழகிய மலர்

thanks Google

பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடம் சென்றேன். விலைப்பட்டியல் போட்ட பெண்மணி அணிந்திருந்த அடையாள அட்டையில் 'Nila' என்று பெயர் இருந்தது. எனக்கு ஒரே ஆர்வம், எந்த மொழி, என்ன அர்த்தம் என்று அறிந்துகொள்ள. அவரிடம் கேட்டேன், "நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் ஒன்று கேட்கவா?".

தலைப்பு ...தலைப்பூ - சகோ.ராம் கணேஷ் பார்வையில்

கதம்பத்தமிழ் என்ற வலைப்பூ துவங்கியிருக்கும் நண்பர் ராம் கணேஷ் அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலைப் படித்துப் புதுமையாய்த்  தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இணைப்பை இங்கேப் பகிர்கிறேன்.

புதியதாய் தளம் துவங்கியிருக்கும் அவரை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் நட்புகளே! :))

கூந்தலில் பூ இருந்தாலும் அழகு, இல்லாவிட்டாலும் தலையே அழகு என்று சொல்கிறார் சகோ ராம் கணேஷ்.  படிக்க இணைப்பைப் பாருங்கள்.

இப்பொழுது இணைப்பு தலைப்பு..தலைப்பூ.

Tuesday, December 16, 2014

துளிர் விடும் விதைகளை வாழ்த்தும் தென்றல்

பாக்களின் ராணி தென்றல் 
   பார்க்கவே கொடுத்தேன் என்நூல் 
பூக்களால் மாலை கோர்த்து 
   பூரிக்கவே வாழ்த்தி னாளே
ஆக்கவே வாழ்த்தும் நட்பே  
   ஆனந்தமாய் சொல்வேன் நன்றி

உளமெலாம் இன்பம் பூக்க 
   உன்கவி பாடி விட்டாய் 
களஞ்சிய நிறைபொன் ஈடோ 
    களிக்கிறேன் உன்பா கண்டு 
அளவிலா நன்றி யதனை 
    அன்புடன் ஏற்பாய்த் தோழி!

தோழி தென்றல் சசிகலாவிற்கு உளமார்ந்த நன்றியுடன், அவருடைய பாமாலை இணைப்பை இங்கே பகிர்கிறேன், 

Thursday, December 11, 2014

நட்பு
கதம்பச் சரடெனக்  கட்டும் உலகை
கதவெல்லாம்  தாண்டியே நட்புஎன் பள்ளித்தோழி சொல்லிய கருத்து இங்கு என் வார்த்தைகளில்!
உலகின் பல மூலைகளில் இருந்தாலும் அருகிருப்பது போல் அன்புகாட்டும் என் நட்புகள் அனைவருக்காகவும்!

Monday, December 8, 2014

கனவில் வந்த காந்தி

பாவம் காந்தி தாத்தா, கனவில் வருகிறேன் என்று முத்துநிலவன் அண்ணா மூலமாகச் சொல்லி அனுப்பினார். அவரை அப்புறம் வாருங்கள் என்று வேண்டி அனுப்பிவிட்டேன். அவரும் பொறுமையாக காத்திருந்து நேற்று என் கனவில் வந்தார். அவரும் நானும் பேசிய உரையாடல் கீழே...

1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?

என் பெற்றோருக்கே மகளாய், அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு.

Sunday, December 7, 2014

அசால்ட்டு...ஆபத்து...இழப்பு

நவம்பர் 27 அன்று என்று என் கணவரின் நண்பரின் மனைவிக்கு வளைகாப்பு. நண்பர் மனைவியின் தாயார் மட்டும் வந்திருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து விழா சிறப்பாக நடந்தது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கலவை சாதம், இனிப்பு என்று பிரித்துக்கொண்டு செய்தோம். அதற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக புதன் மாலை ஐந்தரை மணியளவில் காரை வெளியே எடுத்தேன்.
வீட்டில் இருந்து பின்னோக்கிச் சென்றதால் தெருவைப் பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே சென்ற  நான் அதிர்ந்தேன். ப்ரேக்கிட்டு, "அந்த வீட்டில் தெரிவது நெருப்பா?" என்று கணவரிடம் கேட்டேன். அவர் பார்த்து ஆம், என்றவுடன் பதறி 911 என்ற எண்ணுக்கு அழைத்தேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...