Monday, November 3, 2014

வீடு-பள்ளி-அலுவலகம்-வாடகை-நான் ஹேப்பி

முகநூலில் போட்டது:
வீடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்..ஏதோ ஒரு வீடு தேர்ந்தெடுக்க முடியாது..நல்ல பள்ளியைத் தேர்வு செய்துகொண்டு பிறகே வீடு முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஏரியாவிற்கு இந்த பள்ளி என்று இருக்கும், மாற்றிச் செல்லமுடியாது. சென்ற முறை என் பையன் படித்த பள்ளிக்கு ஒரே ஒரு அபார்ட்மென்ட் தான் சேர்ந்தது..அங்கு சென்ற ஓரிரு மாதங்களில் வரிசையாகத் திருடு போயிருக்கிறது..மேலும் வாடகையும் செமையாக ஏற்றிவிட்டனர். நல்ல பள்ளி என்று பலர் தேடி வருவதால் (முக்கியமாக இந்தியர்). இதனால் நண்பர்கள் அங்குச் செல்லவேண்டாம் என்று சொல்ல, வீடு, பள்ளி வேட்டை ஆரம்பம்!
பள்ளி நன்றாக இருந்தால் வீடு இல்லை, வீடு இருந்தால் பள்ளி சரியில்லை, இரண்டும் ஒத்து வந்தால் - ஒன்று வாடகை செம உச்சத்தில், மற்றொன்று கணவர் அலுவலகத்திலிருந்து 30 மைல், வேலை நேரங்களில், பனிப்பொழிவில் போக்குவரத்து ஸ்தம்பித்தால் ஒன்றரை -இரண்டு  மணி நேரம் கூட ஆகும்..ஆக மொத்தம்...என்ன சொல்ல? நான் ரொம்ப ஹேப்பி :)))

வீடு தேடுவேனா? பள்ளி தேடுவேனா? பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பேனா? பதிவு இடுவேனா? நண்பர்கள் உபயத்தில் இரண்டு நாட்கள் சமையல் இல்லை..தொந்திரவு வேண்டாம் என்று இன்றிலிருந்து நான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன் (ஹோட்டலில் சமையலறை இருக்கிற மாதிரி எடுத்தோம்)..அதைச் செய்வேனா? எப்படியோ, சென்ற முறை மாதிரி பெற்றோர் உடன்பிறந்தோரை நினைத்து அழுதுகொண்டிருக்க வில்லை..அதற்குக் கூட நேரம் இல்லை! நான் ரொம்ப பிஸி..ஆனால் பிஸி இல்லை :)

இன்னும் அனுபவங்களை அடுத்தடுத்த பதிவில்!

41 comments:

 1. இருக்கு ஆனால் ? இல்லை அப்படினு சொல்றது மாதிரி இருக்கே.....

  ReplyDelete
  Replies
  1. உடனே வந்துட்டீங்களே சகோ? இதுதான் வலைத்தள நட்பின் வசதி.. :)
   அதேதான் சகோ..

   Delete
 2. வீடு,பள்ளி இரண்டும் உங்கள் விருப்பம் போலவே கிடைக்கும்.!
  தேடுங்கள் கிடைக்கும்.!

  ReplyDelete
 3. வீடு, பள்ளி இரண்டுமே உங்களது விருப்பத்திற்கேற்பவும், உங்களது பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்பவும் வெகு சீக்கிரத்தில் அமையும் தோழி. வாழ்த்துகள் !

  ReplyDelete
 4. வீடு பள்ளி இரண்டும் மனசுக்கு பிடித்த மாதிரி விரைவில் கிடைக்கட்டும் சகோதரி....

  ReplyDelete
 5. வீடு, பள்ளி இரண்டும் தங்கள் எண்ணம் போல் கிடைக்கும்...

  ReplyDelete
 6. நாங்கள் எல்லாம் இங்க சும்மா இருந்துகிட்டே ஒரு விளம்பரத்துல ஒரு பொடியன் சொல்வானே அந்த மாதிரி சும்மா “நா ரொம்ப பிஸி“னு ஸீன் போடுவோம். நீ என்னடான்னா... பிள்ளைகளைப் பார்த்துக்கிட்டு, அறையிலேயே சமையலையும் கொஞ்சம் பார்த்துக் கிட்டு , பசங்க பள்ளி அருகில் வீடு தேடிக்கிட்டு இவ்வளவுக்கும் மத்தியில் பதிவும் போடுற... தாயீ... உன் ஆர்வம் மலைப்பாயிருக்குப்பா... விரைவில் வினோத் அலுவலகம் அருகிலேயே நல்ல பள்ளியும் வீடும் கிடைக்க வாழ்த்துகள்பா.. ஆர அமரப் போய் வீட்டில் உட்கார்ந்து சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு வேலையைத் தொட வேண்டுகிறேன். நம் நண்பர் மதுரைத் தமிழன் இருப்பது அருகிலா தொலைவா? அவரின் வலைப்பக்கப் பார்வையாளர் பற்றிய பதிவைப் பார்த்தாயா? மலைத்துப் போனேன்... இளைய பதிவர்கள் அனைவரும் அவரைக் கவனிக்க வேண்டும். (அங்குள்ள நம் தமிழ்வலைப்பதிவர்களைத் தொடர்பு கொள்ளலாம்தானே?) சரிம்மா... நல்லபடி அமைந்து எழுத வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா..வீட்டிற்குப் போய் கொஞ்சம் அடுக்கிவைத்தவுடன் ஆரம்பித்துவிடுவேன் அண்ணா. மதுரைத் தமிழன் சகோ இருப்பது தொலைவு, அவரின் பதிவைப் பார்க்கவில்லை, பார்க்கிறேன். நண்பர்கள் சிலர் இங்கு இருக்கிறார்கள்...அவர்கள் உதவியுடன் தேடிக் கொண்டிருக்கிறோம்..இதைப் பற்றிய ஒரு பதிவு போடுவேன் அண்ணா :)

   Delete
 7. இப்போத்தான் இங்கேயிருந்து பிறந்த நாட்டுக்குப் போனதுபோல் இருக்கு. அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்களே! :) ஆனால் ஒண்ணு, ரெண்டாவது முறை திரும்பி வந்தால், அமெரிக்கா உங்களை கெட்டியாப் பிடிச்சுக்கும். திரும்பிப் போறது கஷ்டம்தான். :)

  ஆக, இந்த "பாவ பூமி"யில் எங்களோட சேர்ந்து நீங்களும் "பாவி"யாகிட்டதென்னவோ சந்தோஷம்தான்! :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஒரு வருடத்தில் திரும்பி வந்துவிட்டேன்..ஆனால் வருண், இது மூன்றாவது முறை, இருமுறை திரும்பிச் சென்றுவிட்டேன், இப்பொழுதும் திரும்பிப் போகவேண்டும் என்றே எண்ணுகிறேன்.

   Delete
 8. தேடுங்கள்.. கண்டடைவீர்கள்...
  தெய்வம் துணையிருக்கும்!..

  நலமும் வளமும் பெருக நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 9. busy ஆனால் busy இல்லை அப்ப ரொம்பக் கஷ்டம் தான்மா எனக்குப் புரியுது.
  ம்.ம்.. அட்லாண்டா ரொம்பநல்ல இடம் எனக்கு ரொம்ப பிடித்தது. என் மகள் அங்கிருந்து படித்துவிட்டு செப் ல் தான் சென்று அழைத்து வந்தோம். நல்ல இடம் பார்த்தால் போதும் ஸ்கூல் நல்லதாக அமையும். இடத்தை பொறுத்தது தானே ஸ்கூல் ஷோப்பிங்கும் ஸ்கூல்ம் கிட்டவாக வாக்கிங் distance ல் இருந்தால் தான் வசதி உடனும் கார் இருந்தால் ஷாப்பிங் ஐப் பற்றி கவலை இல்லை. எல்லாம் விருப்பம் போல அமையும் அமைய வாழ்த்துக்கள்மா..... !

  ReplyDelete
  Replies
  1. ஓ உங்கள் மகள் இங்குதான் படித்தார்களா?
   நன்றி தோழி

   Delete
 10. தென்றல் கீதாவின் வலையில் ஒரு கருத்து தங்களை மனதில் வைத்து இட்டுள்ளேன் நேரம் இருந்தால் பாருங்கள்மா.

  ReplyDelete
  Replies
  1. பார்த்துவந்தேன் தோழி, என்னை நம்பி குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது கண்டு மகிழ்ந்தேன், நன்றி.

   Delete
 11. விருப்பம் நிறைவேறும் சகோதரியாரே
  தேடுங்கள் கிடைக்காமலா போய்விடும்
  நிச்சயம் கிடைக்கும்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 12. அன்பு சகோ
  இது சுட்டதுதான் என்றாலும்
  இப்போதைக்கு
  உங்கள் சூழலுக்கு
  பொருந்தும்.?!
  இருப்பதும் இல்லாததும் தோற்றமயக்கம்
  இரண்டிலும் மகிழ்வதே வாழ்க்கைப்பாடம்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. த.ம கூடுதல் ஒன்று
  விரைவில் வீடு அமைந்து நிஜமாகவே ஹாப்பி ஸ்டேட்ஸ் போட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. பள்ளி நன்றாக இருந்தால்
  வீடு இல்லை
  வீடு இருந்தால்
  பள்ளி சரியில்லை
  இரண்டும் ஒத்து வந்தால்
  வாடகை மட்டும்
  வானுயர உயருகிறதே!
  பிள்ளைகளின் எதிர்காலமே
  முதன்மையானது என்றால்
  எதற்கும் முகம் கொடுத்தே
  ஆகவும் வேண்டும்!

  ReplyDelete
 15. சீக்கரமா ஒரு வீட்டை finalize பண்ணிடலாம்... :)

  ReplyDelete
  Replies
  1. இதுக்குமேல தேட முடியாது :) நீங்க இல்லேனா அவ்ளோதான்..நன்றி ஸ்ரீனி

   Delete
 16. நல்லதொரு கல்விக்கூடமும் நேர்த்தியாயொரு இல்லமும் அமைந்திட வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. இரண்டுமே விரைவில் கிடைத்திட எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. டியர்!!! இப்போ தான் பார்த்தது போல இருக்கு!!! அதுக்குள்ள நாள் ஓடிடுச்சு:(((((
  நலமா டியர்:)சீக்கிரம் வீட்டு ப்ராபிரஸ்து:)))) குழந்தைகள் , அண்ணா எல்லாம் நலமா?? நிறை நாளுக்கு ஒரு முறையாவது குட்டீஸ் புராணம் பாடாமல் இருப்பத்தில்லை. நாங்கள் விசாரித்த தாக அவர்களிடம் சொல்லுங்கள்:)))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.. :(
   அனைவரும் நலம், போரடித்துப் போயிருக்கின்றனர். அவர்களுக்கு பழைய நண்பர்களைப் பார்க்கச் செல்லவேண்டும்..சிலர் அழைத்தும் போகும் நிலையில் நான் இல்லை, வீட்டிற்குச் சென்றவுடன் என்று சொல்லிவிட்டேன். கண்டிப்பாகச் சொல்கிறேன்..அன்பு உள்ளங்களைச் சம்பாதித்துக் கொண்டு தொலைவு வந்துவிட்டேன் ..

   Delete
 20. வீடு கிடைத்து விட்டதா

  ReplyDelete
 21. அடடா? ரெம்ப ஸாரிம்மா! உங்கள் பதிவில் மேலே இருந்ததனால் பத்விட்ட திகதியை கவனித்தேன் வருடம் கவனிக்கவில்லை. என் பதிவை வெளியிடாமல் விட்டாலும் சரிதான்மா வெரி ஸாரி.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லைங்க நிஷா! அக்கறையான விசாரிப்புதானே? தவறொன்றும் இல்லை :)
   மனமார்ந்த நன்றி

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...