துளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு

 நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மதுரையில் நடைபெறவிருக்கும் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பில், என் முதல் கவிதைத் தொகுப்பு - துளிர் விடும் விதைகள் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இடம்: நடன கோபால நாயகி மந்திர்,
               3, தெப்பக்குளம்
                மதுரை
நாள்: 26 அக்டோபர், ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2.30  மணியளவில்

வெளியிடுபவர்:         திரு.வி.வின்சென்ட் 
                                          கோட்டப் பொறியாளர் - ஓய்வு
                                          பி.எஸ்.என்.எல்.
                                         மதுரை
                                        (என் அன்புத் தந்தை )

பெற்றுக்கொள்பவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் 
                                           தமிழாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர்

என் நூலை வெளியிட்டும்  பெற்றுக்கொண்டும் வாழ்த்த  இசைந்த இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

வாழ்த்திப் பேச இசைந்திருக்கும் என் அன்பு அண்ணா,
                                          திரு.கஸ்தூரிரங்கன், ஆசிரியர்  (http://www.malartharu.org/) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைத்தளத்தில் என்னை ஊக்குவித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த  நன்றி.


அன்புடன்,
கிரேஸ் 

25 கருத்துகள்:

  1. துளிர் விடும் விதைகள்...புத்தகம் போல் பலபல கவிதைப் புத்தகங்கள் வெயிட வழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. மேலும் நலம் பெறவேண்டும்..
    அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    சகோதரி.

    நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது... வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      மகிழ்ந்து வாழ்த்தியதற்கு உளமார்ந்த நன்றி சகோதரரே

      நீக்கு
  4. "துளிர்விடும் விதைகள்"

    எக்காலத்திலும் இளமையுடனும், உயிரோட்டத்துடனும் இருக்கும் அழகான ஒரு தலைப்பு! :)

    வாழ்த்துக்கள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  5. “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.“

    இது கவிதை நூலை வெளியிடும் தங்கள் தந்தையார்க்கு.


    “மகன்(ள்) தந்தைக் காற்றும் உதவி இவன்(ள்)தந்தை
    என்நோற்றான் கொல்லெனும் சொல்.“

    இது நூலாசிரியையாகிய தங்களுக்கு..!

    “புலமிக் கவரைப் புலமை தெரிதல்
    புலமிக் கவர்க்கே புலனாம் “

    இது நூலைப்பெற்றுக் கொள்ளும் முத்துநிலவன் அய்யாவிற்கு.

    அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

    இது நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றும் தோழர் மது அவர்களுக்கு!

    நூல் வெளியீட்டு விழா சிறக்கவும், பயில் தோறும் தங்களின் நூல்நலம் படிப்போர்

    உணரவும் வாழ்த்துகிறேன்.

    தலைப்புத் தேர்வு அருமை.

    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      திருக்குறள் மேற்கோள் காட்டி அருமையாய்க் கருத்திட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி,

      நீக்கு
  6. தந்தையே அன்பு மகளின் நூலினை வெளியிடுகிறார்
    எந்த தந்தைக்குக் கிட்டும் இதுபோல் ஒரு வாய்ப்பு
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். நன்றி சகோதரரே

      நீக்கு
  7. வாழ்த்துக்கள்! சகோதரி அவர்களுக்கு, உங்களது இந்த பதிவினை எனது, மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு – என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி உள்ளேன். நன்றி!
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திற்கும் பகிர்விற்கும் நன்றி ஐயா.
      உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

      நீக்கு
  8. வாழ்த்துக்கள். தங்கள் புத்தகத்தை தந்தையிடம் தந்தீர்களா? "இவன்(ள்) தந்தை என்னோற்றான் கொல்" என்ற குறளுக்கேற்ப.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ, இதையே விஜூ அண்ணாவும் சொல்லியிருக்கிறார்கள்.
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  9. சகோதரியை முத்துநிலவன் அய்யா புத்தகவிழாவில் சந்தித்தேன்.
    மதுரையில் சிந்திப்போம்.
    advance வாழ்த்துகள்..!
    என் வலைப்பூவிற்கு வருகை தர வேண்டுகிறேன்.
    "எண்ணப்பறவை" . mahaasundar.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே.
      ஆமாம், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. கண்டிப்பாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். பகிர்விற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      நீக்கு
  10. அன்புள்ள கிரேஸ்

    துளிர்விடும் விதைகள் நிச்சயம் பெரு விருட்சமாக விரியும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.
      உங்கள் மனமார்ந்த வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  11. wow தோழி . தாங்களும் நூல் வெளியிடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியாய் உள்ளதும்மா. தலைப்பும் அதற்கேற்ற படமும் அசத்தல் தோழி ! அனைத்தும் சிறப்பாக நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
    தங்கள் தந்தைக்கும்
    சகோதரர் மதுவுக்கும்
    நிலவன் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் ! தோழி !
    வாழ்க வளமுடன் ...!

    பதிலளிநீக்கு
  12. உங்கள் முதல் புத்தக வெளியீட்டிற்கும், மேலும் பல புத்தகங்கள் எழுதிடவும் வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  13. தங்கள் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்! தாங்கள் மேலும் புத்தகங்கள் வெளியிடவும் வாழ்த்துக்கள்! துளிர்விடும் விதைகள் பல மரங்களாய் வளர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. கருத்துரைத்து அன்பாய் வாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...