புத்தக வெளியீடும் அன்பின் வெளிப்பாடும்

முத்துநிலவன் அண்ணாவின் புத்தக வெளியீடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அங்கு நடந்த மினி பதிவர் கூட்டம் பற்றியும் அறிந்திருப்பீர்கள். தெரியும், தெரியும் நீ என்ன சொல்ல வர? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. புதுக்கோட்டை சென்று இனிய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து மெய்மறந்த என் அனுபவம் இது. எழுத தாமதமாகிவிட்டது, அதுவும் நல்லதுதான் - நீங்கள் மறந்திருந்தால் நினைவூட்ட வேண்டும் அல்லவா? (சிலர், நான் வர முடியலேன்னு வருத்தப்படும்பொழுது , நீ வேற...என்று சொல்வது கேட்கிறது..இருந்தாலும்)...
 
செல்லமுடியுமா முடியாதா என்ற குழப்பத்திற்கு இடையே எப்படியோ சென்று விட்டேன், அதை நினைத்து மகிழ்கிறேன். அலைபேசியில் அன்புடன் பேசிய நிலவன் அண்ணா, மல்லிகா அண்ணி இருவரும் மகிழ்ந்து வீட்டிற்கு வந்துவிடம்மா என்று அழைத்த அன்பு! வருகிறேன் என்று தகவல் சொன்னதிலிருந்து  மகிழ்ந்து எப்போ கிளம்புகிறேன், எங்கு இருக்கிறேன் என்று அன்புடன் அலைபேசியில் விசாரித்து உற்சாகம்  காட்டிய மைதிலி, கஸ்தூரி அண்ணா  மற்றும் கீதாவின் அன்பு! புதுக்கோட்டையில்,சாலையோரச்  சுவற்றில்  அழகாய் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் மனம் கவர்ந்தன. அதனை ரசித்துப் பார்த்துக்கொண்டே நகர் மன்றம் சென்றோம். அங்கு நிலவன் அண்ணாவும் உடனிருந்தவர்களும் மகிழ்ச்சியுடனும்  அன்புடனும்  வரவேற்றனர். விழா நாயகனாய் இருந்தாலும் எங்களை உபசரிக்க வேண்டும் என்ற நிலவன் அணணாவின் அன்பு பெரியது. அவருடைய அன்பான மகள் லட்சியா இனிமையானவர், அவரைப் பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி...அண்ணனின்  இனிய துணைவியார் மல்லிகா அண்ணி எங்களை காபி அருந்த அழைத்துச் சென்றார். அதற்குள் சிட்டாய் பறந்து  வந்த கீதாவை பார்த்து மகிழ்ந்தேன்..அவரும் இணைந்து கொள்ள காபி அருந்தி வந்தோம்..மல்லிகா அண்ணியும் கீதாவும் உடனே இருந்தனர். அதற்குள் மைதிலியும், கஸ்தூரி அண்ணாவும், மகி குட்டியும் வந்துவிட அங்கு மகிழ்ச்சி நிறைந்தது. ஒருவரை ஒருவர் பார்த்த மகிழ்ச்சி, சிறு பரிசுகள் பகிர்ந்துகொண்டது, படங்கள் எடுத்துக் கொண்டது எல்லாம் இனிய நினைவாக மனதில் பதிந்துவிட்டன.



தமிழ் இளங்கோ ஐயா, சகோதரர் கரந்தை ஜெயக்குமார், சகோதரர் ஸ்டாலின் சரவணன் இன்னும் பல புதுக்கோட்டை பதிவர்களையும் எழுத்தாளர்களையும் பார்த்தது மகிழ்ச்சி. இளங்கோ ஐயாவும் என் கணவரும்  புகைப்படங்கள் எடுத்தனர். 
புத்தக வெளியீட்டிற்குப் பின்னர், நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் விழா இறுதி வரை இருக்கமுடியாமல் கிளம்பினோம்..இங்கு வந்துவிட்டு சாப்பிடாமல் எப்படி போவீர்கள் என்று கஸ்தூரி அண்ணா, மைதிலி மற்றும் கீதா எங்களை அழைத்துச் சென்று உணவருந்தவைத்தே அனுப்பினர். உணவுடன் உள்ளத்து உரையாடல்கள். நிறைகுட்டியும் மகிகுட்டியும் நெருக்கமாகிவிட்டனர், அன்பாய்ப் பேசினர். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கிளம்பினோம்.

இன்னும் தகவல்களுக்கும் படங்களுக்கும் பார்க்க இந்த இணைப்புகள்:
மைதிலியின் பார்வையில் 

தமிழ் இளங்கோ ஐயாவின் பார்வையும் படங்களும் 

மு.கீதாவின் பார்வையில் 


33 கருத்துகள்:

  1. மறக்க முடியாத தருணங்கள்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இனிமையான தருணங்கள் இல்லையா?! சகோதரி! சகோதரி மைதிலி, தோழர் கஸ்தூரி, குழந்தைகள், தங்களையும் காண மிகுந்த சந்தோஷம்! பகிர்தலுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
    2. கண்டிப்பாக சகோதரரே, மிகவும் இனிமையான தருணங்கள்! நன்றி!

      நீக்கு
  2. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!!:))))
    மறுபடி மீட் பண்ணலாம் டியர்:)

    பதிலளிநீக்கு
  3. இனிமையான நினைவுகள் உங்களுக்கு......

    இது போன்ற நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாதவை தான்....

    பதிலளிநீக்கு
  4. ****இங்கு வந்துவிட்டு சாப்பிடாமல் எப்படி போவீர்கள் என்று கஸ்தூரி அண்ணா, மைதிலி மற்றும் கீதா எங்களை அழைத்துச் சென்று உணவருந்தவைத்தே அனுப்பினர். உணவுடன் உள்ளத்து உரையாடல்கள். நிறைகுட்டியும் மகிகுட்டியும் நெருக்கமாகிவிட்டனர், அன்பாய்ப் பேசினர். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கிளம்பினோம்.***

    ஆக புதுக்கோட்டைக்காரர்களை நம்பிப் போகலாம்னு சொல்றீங்க? உப்புமா போட்டு அனுப்பிடமாட்டாஙக. நல்ல சாப்பாடு கிடைக்கும்! :) ஜஸ்ட் கிடிங், கிரேஸ்! Seems like you guys had lots of fun! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அருமையான புதுக்கோட்டை ஸ்பெஷல் சாப்பாடு, அதுவும் அன்பு கலந்து கிடைக்கும்! யோசிக்காம போகலாம் வருண்.
      I know.. :)
      Yes, Such a memorable experience! :))

      நீக்கு
  5. எத்தனை நாட்கள் ஆனாலும், ஆசிரியர் கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களது நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்வினை மறக்க இயலாது. பதிவர்கள் சந்திப்பு நடந்த மகிழ்ச்சியான அந்த புதுக்கோட்டை நாளை வலைத்தளம் பக்கம் மீண்டும் கொணர்ந்த. சகோதரிக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா..உங்களை, மற்றும் சில பதிவர்களை சந்தித்த மகிழ்ச்சியைப் பகிர்வது எனக்கும் மகிழ்ச்சியே! நன்றி ஐயா.

      நீக்கு
    2. தமிழ் அய்யா பாதியில் எஸ்கேப் ஆனவர் தாங்கள் ... வாங்க மாநாட்டுக்கு ... இருக்கு உங்களுக்கு

      நீக்கு
  6. தாமதமாகச் சொன்னாலும் அன்பும் நெகிழ்வுமான நிகழ்வுகளால் நிறைந்த விழாவைப் பற்றிய உன் பதிவு எனக்கு மகிழ்வைத் தந்தது கிரேஸ. (தாமதத்திற்கான காரணம் எனக்குத்தான் தெரியும். வெளியிடும் தனது நூலில் ஒரு பிழைகூட இருந்துவிடக் கூடாது என்பதோடு, இய்ன்றவரை நூல் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக நீ பட்ட பாட்டை, காட்டிய உழைப்பை ஒருவாரமாகப் பார்த்துக்கொண்டுதானே இருந்தேன்!) உனது வருகை எனது விழாவைப் பெருமைப் படுத்தியது மட்டுமல்ல.. நமது புதுக்கோட்டைப் பதிவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்திவிட்டது என்பதைத்தான் நீயே உணர்ந்திருப்பாயே! (பாசக்காரப் புள்ளைங்க... சாப்புடாம உடமாட்டம்ல...மதூ?) உன் அன்பு மட்டுமல்ல, இந்தச் சிறிய வயதில் உனது எழுத்துப் போலவே, பொறுப்பான வருகை மற்றும் நூல்வெளியீட்டுச்செயல்பாடுகள் தந்த மகிழ்வுடனும் நெகிழ்வுடனும்--அண்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியண்ணா. இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தேன். வேலைப்பளுவால் சுருக்கிவிட்டேன்..ஆனால் எவ்வளவு பெரிய பதிவிற்குள்ளும் அடக்கிவிடமுடியாது உங்கள் அன்பை! ஆமாம் அண்ணா, அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை அன்பாய் வெளிப்படுத்தி திக்குமுக்காடச் செய்துவிட்டனர். புத்தக வேலையில் எனக்கு உடனிருந்து உதவிய உங்கள் அன்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகைள் இல்லையண்ணா. அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி நிறைகிறது அண்ணா.
      மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

      நீக்கு
  7. தங்கள் அனைவரது சந்திப்பும் எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தருகிறது. அனைவரையும் பார்த்ததில் அன்பும் அதிகமாகிறது.
    பதிவையும் படங்களையும் பார்த்தது நேரில் அனைத்தையும் கண்டு களித்தது போலவும் தங்களோடு நானும் கலந்து கொண்டது போன்ற உணர்வே தோன்றுகிறதும்மா. பதிவுக்கு நன்றிடா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரி,

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_21.html

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ..வலைச்சர அறிமுகத்திற்கு உளமார்ந்த நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

      நீக்கு
  9. மீண்டும் மதுரையில் சந்திப்போம் சகோதரியாரே
    நூல் வெளியீட்டிற்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்போம் சகோதரரே, மகிழ்ச்சி! உங்கள் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி.

      நீக்கு
  10. வாட்... இந்திரா காந்திய சுட்டுடாங்களா ?
    ஒ. மை காட்..

    அறிவியல் செய்தி ஒன்று !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா லேட்டா சொன்னாலும் இந்திராகாந்தி சுடப்பட்டது உண்மைதானே அண்ணா? :))
      அறிவியல் செய்தியா? பார்க்கிறேன்..
      நன்றி அண்ணா

      நீக்கு
  11. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      நீக்கு
  13. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு, மதுரையில் தாங்கள் வெளியிட இருக்கும் தங்களது நூலினைப் பற்றி ஒரு முன்னோட்டமாக ஒரு பதிவினைத் தந்தால், எனது, மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு – என்ற பதிவினில் மேற்கோளாக காட்டிட உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. முத்துநிலவன் அய்யா அவர்களின் புத்தகவெளியீட்டு விழா நிகழ்வுகளை மற்ற தளங்களில் படித்தபோது என்ன தோன்றியதோ அதே தான் இந்த பதிவைபடித்த போதும்...

    நீங்களெல்லாம் இணந்த அந்த விழாவில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லையே என்ற வருத்தம் !

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைக்கு வருகிறீர்களா சகோ?

      உங்கள் வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
      தேங்காய்க்குள் பாமா??? பார்க்கிறேன் சகோ, பகிர்விற்கு நன்றி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...