Saturday, August 9, 2014

பாத அளவும் மதிப்பீடும்

இன்று ஒரே அடிபிரதட்சினம் வீட்டில் ... :)
என் இளைய மகனுக்கு குத்துமதிப்பாகக் கணக்கிடுவதற்குச் சொல்லிக்கொடுத்தேன். இன்று அவனுடைய பாத அளவு அளவுகோலாக எடுத்துக் கொண்டேன். சோபாவின் நீளத்தை முதலில் அளந்து கொள்ளச் சொன்னேன். சோபாவின் நீளம், அவன் பாத அளவில், 13. பிறகு அடுமனையிலிருந்து வாசல் கதவு வரை எத்தனை பாத அளவு இருக்கும் என்று குத்துமதிப்பாகச் சொல்லச் சொன்னேன்.
அவன் சொன்னது 50, ஆனால் அளந்த பொழுது 36 பாத அளவு.


அளந்தது
குத்துமதிப்பாகக் கணக்கிட்டது
சரியான அளவு

டீபாயின் நீளம்
8
7

என்னிடமிருந்து சுவர் வரை
20
13

வரவேற்பறையிலிருந்து பால்கனி
20
21

கிரிக்கெட் பேட்
4
4

இன்வேர்டர்
7
6

வரவேற்பறையின் அடுத்த சுவற்றிலிருந்து பால்கனி
40
41

சாப்பாட்டு மேசையின் நீளம்
7
9முதலில் அவனுக்கு அளக்கும்பொழுது குதிகாலை கால் கட்டைவிரலோடு ஓட்டுமாறு வைத்து அளக்கத் தெரியவில்லை. தள்ளி வைத்தான், கோணலாக வைத்தான், இல்லையென்றால் பக்கத்தில் வைத்தான். ஒரு வழியாக சரியாக வைத்து அளக்கக் கற்றுக்கொண்டான்.
ஒரே தூரத்தின் அளவு என் பாத அளவில் சிறிய எண்ணாகவும், அவனுடையதில் பெரிதாகவும் வருவதையும் குறிப்பிட்டுச் சொன்னேன். நல்ல பொழுதுபோக்காகவும் கற்றலாகவும் அமைந்தது.
அடுத்து சாணளவு, முழம், ரூலர், அவனுடைய உயரம் என்று அளவுகோல்கள் வைத்து இதேமாதிரி செய்ய நினைக்கிறேன். வேறு ஏதேனும் அளவுகோல் ஐடியா இருந்தால் சொல்லுங்கள் :)

36 comments:

 1. பரவாயில்லையே கணிப்பு பெரும்பாலும் சரியாத்தான் இருக்கு.
  எனது பதிவு. ‘’Fantastic France’’

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், முதலிரண்டு தவறானவுடன் புரிந்துகொண்டான்..
   நன்றி சகோ

   Delete
 2. நேரில் கண்டு ரசித்தது போல் இருக்கிறது. இனிமை. கற்பித்தல் அழகாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி உமையாள் காயத்ரி

   Delete
 3. பாத அளவுகளையே அடி, தப்படி என இரண்டு வகை உண்டு தானே கிரேஸ்! கால்களை முடிந்தமட்டும் நீட்டி அல்லது ஒற்றை காலால் தாண்டுதல் என பொருள் வரும். கணிதப்பாடம் அருமையாக செல்கிறது போலவே!! சூப்பர் ட!

  ReplyDelete
  Replies
  1. தப்படியும் சொல்லிக் கொடுக்கிறேன் மைதிலி..எனக்குத் தோணவே இல்லை,,நன்றி டியர்.

   Delete
 4. நல்ல விளையாட்டு கிரேஸ்! கணக்கு கற்றுக் கொள்ள அருமையான வழி.

  ReplyDelete
 5. நல்ல முயற்சி தொடருங்கள் தோழி வாழ்த்துக்கள் ! அரிசி பருப்பு தண்ணீர் எல்லாம் எப்படி அளப்பது என்று எல்லாவற்றிலும் பழகட்டுமே அரிசி பருப்பில் எழுத படம் கீற விட்டால் இன்னும் சந்தோஷப் படுவார்கள் இல்ல.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி..கண்டிப்பாகச் செய்கிறேன். கொண்டைக்கடலை வைத்து பெருக்கல், place values சொல்லிக் கொடுத்திருக்கிறேன் :)

   Delete
 6. வணக்கம்
  சகோதரி

  தங்களின் செல்லக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கற்பித்தல் முறை பற்றி படித்த போது மனதில் ஒரு மகிழ்ச்சி பொங்கியது. பாடசாலையில் ஒரு கற்பித்தல் வீட்டில் தாய் தந்தையரிக் கற்பித்தல் ஒரு புறம்.. இப்படியான செயற்பாடுகள் மூலம் குழந்தைகள் தானாக சிந்திக்கும் ஆற்றல் பிறக்கும்...
  சாணளவு, முழம், ரூலர் இந்த கற்பித்தல் முடிந்த பின் ஆக்கத்தொழில் பாடம் சம்மந்தமாக கற்றுக்கொடுங்கள். தென்னை மரத்தின் பன்னாடையில் மீன்செய்தல் .கழிமண்னில் உருவங்கள் செய்தல் .கழிவுப்பொருட்களை எப்படி பயனுடைய அலங்காரப் பொருளாக மாற்றலம் என்பதை கற்றுக்கொடுங்கள் பாடசாலையில் ஒரு பாடமாக உள்ளது அதுதான் (ஆக்கத்தொழில் பாடம்)
  வீட்டில் கற்பித்துக்கொடுத்தால் பாடசாலையில் கற்பது இலகுவாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்.
   உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் ஆலோசனைகளுக்கு மகிழ்ச்சியும் உளமார்ந்த நன்றியும் சகோ. ' தென்னை மரத்தின் பன்னாடையில் மீன்செய்தல்' எனக்குத் தெரிந்திருக்கவில்லை, முயற்சி செய்து பார்க்கிறேன்.

   Delete
 7. வணக்கம்
  த.ம 2வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. தம 3
  மறந்துட்டேன்:)

  ReplyDelete
  Replies
  1. :) நன்றி தோழி..மறந்தாலும் மீண்டும் வந்து வாக்களித்ததற்கு நன்றி டியர்

   Delete
 9. இப்படி ப்ராக்டிகலா கணக்கு சொல்லித் தர்ற ஐடியா நல்லாருக்கு. மிகப் பிடிச்சிருக்கு எனக்கு. குழந்தைங்க சலிச்சுக்காம கத்துக்குவாங்க.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி சகோ.

   Delete
 10. வருங்கால எஞ்சினியர் உருவாகிக்கொண்டிருக்கிறார். அருமை கிரேஸ். தியரியை விடவும் ப்ராக்டிகலுக்கு அதிக மதிப்பு உண்டு. அழகாகச் சொல்லித்தருகிறீர்கள் நீங்கள். அழகாகக் கற்றுக்கொள்கிறார் மகன். இருவருக்கும் என் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி

   Delete

 11. வணக்கம்!

  அளவுடன் வாழும் அளவை அறிதல்
  வளமுடன் வாழும் வழி!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாவிற்கும் நன்றி ஐயா

   Delete
 12. இப்படி விளையாட்டு போல சொல்லித்தருவது நன்கு மனதில் பதியும்! நல்ல முயற்சி! பாராட்டுக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 13. அட.. எவ்வளவு அழகாக சொல்லி கொடுக்கிறீங்க ..எங்களுக்கு தெரியமா எப்பவாச்சும் B.Ed வாங்குனீர்கலா ? :)

  ReplyDelete
 14. நல்ல அருமையான முறை கணக்கு கற்றுக் கொடுக்கும் முறை.....முழம் கர்றுக் கொடுக்க நம் ஊரில் பூ அளக்க கையால் அளந்து கொடுப்பார்களே அப்படி....

  மிகவும் நல்ல முறை...யதார்த்த ரீதியாக கணக்கு கற்றுக் கொடுத்தல்.....பாராட்டுக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..கண்டிப்பாக முழம் கற்றுக் கொடுக்கப்போகிறேன்.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...