மாண்டரின் மொழியில் திருக்குறள்


தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தின் உந்துதலில் தைவான் கவிஞர் யூ ஹசி திருக்குறள் முழுவதையும் பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளையும் மாண்டரின் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இப்பொழுது பாரதிதாசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்புகள் டைரக்டரேட் ஆப் தமிழ் டெவெலப்மென்ட் மூலம் வெளியிடப்படும்.இதன் மூலம் உலகப் பொதுமரையையும் பாரதியார் மற்றும் பாரதிதாசன் அவர்களின் பாடல்களையும் மாண்டரின் பேசும் மக்கள் படித்து மகிழ முடியும்.

மொழிபெயர்க்கப்பட்டதில் மகிழ்ச்சிதான். ஆனாலும் இதற்கு தமிழக அரசு சுமார் 77 இலட்சம் கொடுத்திருப்பதாக இச்செய்தி சொல்கிறது. அது எதற்கு என்று தெரியவில்லை.இந்த பணிக்காக தனக்குகொடுக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாயை பல்கலைகழகத்திற்கேத் திருப்பிக்  கொடுத்துவிட்டாராம் கவிஞர் யூ ஹசி.

கிரேக்க இலக்கியத்தில் இருந்தும் நான்கு பதிப்புகள் தமிழில் வெளியிட தமிழ் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளதாக இச்செய்தி குறிப்பு சொல்கிறது.

நாளிதழில் வந்துள்ளதை உங்களுடன் பகிர்கிறேன்.

Thanks to The Hindu, Bangalore edition (variety/northern region).

11 கருத்துகள்:

  1. இந்த செய்தியினை நானும் படித்தேன். மகிழ்ச்சி தான்!..
    ஆமாம் - அந்த எழுபத்தேழு லட்சம் எதற்கு!?..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    சகோதரி
    நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள் தேடலுக்கு எனது பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. எங்கள் தொன்மை நூல்கள் மொழி பெயர்ப்பு
    செய்யப் படுதல் கண்டு மிக்க மகிழ்ச்சி தோழி!

    அருமையான தகவல் பகிர்வு!
    அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு.. நன்றி கிரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...