Saturday, June 14, 2014

மழையே வா ஆறை நிரப்பு

நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது என் மகன்களிடம் வெளியே பாருங்கள். மனதில் தோன்றுவதை எழுதுங்கள், நான் பரிசு தருவேன் என்றேன். இருவரும் சொல்ல சொல்ல நானே எழுத வேண்டும் என்றனர். சரியென்று எழுதினேன். சிறியவன்(ஐந்து வயது) ஏதோ பெரிய கதை சொன்னான், செய்தியாம் அது. பெரியவன்(ஒன்பது வயது) சொல்ல சொல்ல நான் எழுதியது இங்கே..அவன் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது.

மழை பெய்யுது
கோடி துளிகள் விழுகுது
ஒரு துளி கேட்டுச்சு, "என்ன ஆகும், கீழ போனவுடன்?"
இன்னொரு துளி சொல்லுச்சு, "நம்ம கீழபோய் தண்ணீர் கொடுப்போம்,
மரம் நல்லா வளரச் செய்வோம்,
நம்ம கீழபோய் ஆறு, குளங்களை நிரப்புவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "மீதி தண்ணீர் என்ன ஆகும்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கடலில் விழுந்து திருப்பியும் மழை மேகமாகுவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "நம்ம எங்க விழப் போறோம்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கீழ போய் பாக்கலாம்"
சின்ன துளி என் சின்ன தலையில் விழுந்துச்சு
பெரிய துளி என் செடியில் விழுந்துச்சு"

drop na தமிழில் என்ன என்றும் million na தமிழில் என்ன என்பதையும் முதலில் கேட்டுக்கொண்டான். முதல் துளி என்பதை கேள்வி கேட்ட துளி என்றும் இரண்டாம் துளி என்பதை பதில் சொன்ன துளி என்றும் சொன்னான், நான் அதை முதல், இரண்டாம் என்று மாற்றிக்கொண்டேன்.

"மழையே வா ஆறை நிரப்பு
பார்டர்ல இருக்குற டாமை திற" என்றான். எனக்குப் புரியவில்லை. நான் கேட்டதற்கு அவன் சொன்னான், "அம்மா, கேரளா தமிழ்நாடு பார்டர்ல இருக்குற டாம்". முல்லைப் பெரியாறு அணையைச் சொல்லியிருக்கிறான், சிலிர்த்துவிட்டேன்.

52 comments:

 1. குட்டீசுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வணக்கம்

  தங்களின் குழந்தைகள் மழையைப்பார்த்து இரசித்த காட்சிகள் நன்றாக உள்ளது அதற்கு தங்களின் வரியமைப்பு உயிர்கொடுத்துள்ளது. பகிர்வுக்கும் தங்களின் குழந்தைக்கும் எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்.
   கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

   Delete
 3. வணக்கம்
  த.ம +2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மழைத்துளி ரசிக்ககூடியதே....
   Killergee
   www.killergee.blogspot.com

   Delete
  2. மிக அருமை!
   குட்டிகளிற்கு வாழ்த்துகள்.
   புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!
   எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்.
   வேதா. இலங்காதிலகம்.

   Delete
  3. மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.

   Delete
 4. வளரும் பயிர் முளையிலேயே தெரிகிறது...

  வாழ்த்துக்கள்...

  மழை கேரளா, கர்நாடகா முழுகற அளவுக்கு பெய்தாலும் தண்ணிய உட மாட்டானுக!!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெற்றிவேல்.
   அவங்க என்ன விடறது?..தானா வந்துரும்..:)

   Delete
 5. நல்ல முயற்சி ... ஊக்கம் தந்த உங்களுக்கு என் நன்றிகள்

  ReplyDelete
 6. நம்மைச் சுற்றிலும் நடப்பது என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொண்டு அதைப் பற்றி சிந்திப்பது நல்ல பழக்கம் . வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லித் தர வேண்டுமா என்ன? அருமையான சிந்தனையை படைத்த சுட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. குழந்தைகளின் கற்பனைகளுக்கு எல்லை இல்லை. அதனை ரசிக்கும்போது அதனால் நமக்கு கிடைக்கும் சுகத்திற்கும் எல்லை இல்லை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்...உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா

   Delete
 10. த.ம நான்கு
  குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்
  பார்டரில் இருக்கும் டாம் திறக்கட்டும்..
  http://www.malartharu.org/2014/06/rural-children.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி மது..ஆமாம் திறக்கட்டும்.

   Delete
 11. சிறந்த கருத்துப் பகிர்வு

  எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
  visit: http://ypvn.0hna.com/

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா.

   உங்கள் தளங்களைப் பார்த்தேன் ஐயா, பகிர்விற்கு நன்றி.

   Delete
 12. இன்றைய குழந்தைகளின் அறிவாற்றலையும் உணர்வுகளையும் பார்க்கும் போது
  நாங்கள் எந்த மட்டில் என்றே எண்ணத் தோன்றுகிறது உங்களுக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் தோழி அத்தோடு இன்று உலக வலைத்தள நாள் இன்றைய சிறப்புப் பகிர்வு தங்களின் வரவையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி .http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி. உலக வலைத்தள நாள் என்று நான் அறியவில்லை, தகவலுக்கு நன்றி சகோதரி. உங்கள் பதிவைக் பார்த்தேன், வலைத்தள உறவுகள் பற்றி அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.. பகிர்விற்கு நன்றி சகோதரி.

   Delete
 13. அடடா, குழந்தைதான் பெற்றோரின் தந்தை என்பது சரிதான். (பெண்கள் தன் குழந்தையைக் கொஞ்சும்போது என்னப்பெத்த ராசா என்பார்களே) “கோடித் துளிகள்“ என்பதே கவித்துவமான சிந்தனைதான்.அதிலும் இரண்டு துளிகள் பேசிக்கொள்வது போன்றது, அற்புதமான குழந்தைக்கே உரிய கற்பனை. கவிக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள் மா. (இந்தக் கற்பனையை நம் பள்ளிகள்தான் சாப்பிட்டுவிடுகின்றன என்பது என் மனத்தாங்கல் அல்ல, கவிக்கோ தன் பேரனைப் பற்றிச் சொன்னது) குழந்தைகளின் பல்வேறு ஆற்றலை இப்படித் தூண்டத் தெரிந்தால் அவர்கள் வளர்ச்சியைக் கண்கொண்டு காணலாம். டாம் பற்றி இந்தச் சிறுவன் அளவுக்கு நம் அரசுகள் கவலைப்பட்டால் நமக்குக் கவலை ஏது. அந்தப் பெரிய மனசுக்கு என் வணக்கங்கள். உனக்கும் என் வாழ்த்துகள் மா. மறக்க முடியாத பதிவாகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா, நான் அப்படிக் கொஞ்சுவேன், சிறியவன், "என்னது நான் தாத்தாவா?" என்று கேட்பான்.. ஆமாம் ஐயா, பள்ளியில் கற்பனைக்கும் ஓடி விளையாடுவதற்கும் இடமில்லை...என்னாலான முயற்சி செய்கிறேன், சிலநேரம் ஒத்துழைப்பார்கள், சில நேரம் இல்லை. உங்கள் அன்பான கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 14. ஹை! என்ன அருமையான முயற்சி! குட்டி கலக்கிட்டான். கவிதை போன்ற உரையாடலை மட்டும் சொல்லலை. அந்த முல்லை பெரியார் மேட்டர் .சூப்பர்.:)நீங்க சமூக அக்கறையோட இருக்கிறது இல்லாமல் இப்படி வளரும் சமுதாயத்தையும் ட்ரைன் பண்ணுறது நல்ல விஷயம் தோழி:) வாழ்த்துகள் !
  http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மைதிலி. சாலை சாட்சிகள் பார்த்து வந்தேன், மிக அருமை.

   Delete
 15. கம்பன் கைத்தறியும் கவி பாடுமாமே அது தான் பார்த்தீர்களா.
  அம்மாவை மிஞ்சு மளவுக்கு குழந்தைகள் வளரவேண்டும், வரவேண்டும் என வாழ்த்துகிறேன்....!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் இனிய பாராட்டிற்கும் அன்பான வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி.

   Delete
 16. தங்கள் குழந்தைகளுக்கு
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி சகோதரரே.

   Delete
 17. அழகு. "சின்ன துளி என் சின்ன தலையில் விழுந்துச்சு
  பெரிய துளி என் செடியில் விழுந்துச்சு" வரிகள் ரசிக்க வைத்தன. என்னைப் பொறுத்தவரை முல்லைப் பெரியாறு விடயத்தை விட மழைத்துளிகளின் உரையாடல் அற்புதமாகத் தெரிந்தது. த.ம.7.நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நானும் அவ்வரிகளை ரசித்தேன். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
   கல்யாண வைபோகம் கண்டிப்பாகப் படிக்கிறேன், பகிர்விற்கு நன்றி.
   உங்கள் தளத்தில் இந்த பதிவையும் பகிர்ந்துள்ளீர்களே, உளமார்ந்த நன்றி.

   Delete
 18. அட.. கலக்கிட்டான்.. முழுவதும் தமிழையே சொன்னானா? சூப்பர் சூப்பர் ... புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? ... :)

  அணை பத்தி எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறானே .. அற்புதம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீனி, கோடி, துளி இரண்டு வார்த்தைகளும் கேட்டுக்கொண்டான்.
   கேரளா சென்றபொழுது அவனுக்கு அணை பற்றி சொன்னேன்.
   நன்றி ஸ்ரீனி.

   Delete
 19. அழகான கற்பனை!
  பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. வாழ்த்திற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி.

   Delete
 20. முதலில் உங்களுக்கு என் பாராட்டுகள் கிரேஸ், குழந்தைகளை சிந்திக்கத் தூண்டும்படியான செயலில் இறக்கியுள்ளதற்கு. எவ்வளவு அழகான சிறப்பான சிந்தனை! இயற்கையும், அறிவியலும், சமூக நடப்பும், ரசனையும் பொதிந்த அற்புதமான படைப்பு... இப்படியே தொடர்ச்சியாக அவர்களை சிந்திக்கத் தூண்டினால் நாமே எதிர்பாராத வகையில் இன்னும் பிரமாதமான படைப்புகளைப் பெறமுடியும். குழந்தைகள் இருவருக்கும் என் நல்லாசிகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பான விரிவான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி. கண்டிப்பாக, நீங்கள் சொல்வது உண்மைதான், குழந்தைகளை சிந்திக்கத் தூண்டினால் நிறைய சாதிப்பர்.
   உங்கள் ஆசிகளுக்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி தோழி.

   Delete
 21. தாயைப் போல் பிள்ளை என சும்மாவா சொன்னார்கள், அருமை அருமை வாழ்த்துகள் சுட்டீஸ்களுக்கு!!

  ReplyDelete
 22. வணக்கம் தோழி நலம் நலமறிய ஆவல்.
  மழைப்பாட்டு பாடாமல் அவர்களையே சொல்லச்சொன்னது வெகு சிறப்புங்க. என்ன அழகான கற்பனை செல்வங்களுக்கு என் வாழ்த்தைச்சொல்லுங்க..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி. உங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி. நான் நலம், நீங்கள் நலமா?
   உங்க அன்பான பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றிங்க. கண்டிப்பாச் சொல்லிடுறேன்.

   Delete
 23. குழந்தையின் கற்பனை மிக நன்று.

  பாராட்டுகள்.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...