Sunday, June 22, 2014

என் தமிழ்! என் அடையாளம்!

என் தாய்மொழியாம் செம்மொழி எனக்கு முக்கியமானது, அது என் அடையாளம். இது பற்றி ஒருகவிதை  என் தமிழ்! என் அடையாளம்! என்ற தலைப்பில் முன்னர் எழுதியிருந்தேன். அதை இன்று மீள் பதிவாக வெளியிடலாம் என்ற ஒரு எண்ணத்தில், இதோ


எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
என் தாய், என் தந்தை, என் தாய் மொழி,
என் ஊர், என் நாடு என்று
இவற்றில் எதை விட்டுக் கொடுத்தாலும் 
என் அடையாளம் அழிந்து விடும்
ஆனால் இன்று பெரிதும் ஒதுக்கப் படுவது
தாய் மொழியாம் தமிழ் மொழி!

நம் தாய் மொழி நம் நாவில் சீராக இல்லாவிட்டால்
நம் தமிழ்த் தாய் நம் வீட்டில் ஆட்சி செய்யாவிட்டால்
நம் தேன் தமிழை  நம் குழந்தைகள் ருசிக்காவிட்டால்
நம் ஓங்கு தமிழ் எழுத்துகள் நம் விரல்களில் ஆடாவிட்டால்
நம் செம்மையான தமிழ்க் கருவூலத்தை நாம் மறந்தால்
ஐயோ! வெட்கக்கேடு, தன்மானக் கேடு!

'நான்' என்பதை இழந்து பல செல்வம் திரட்டினாலும் என்ன பயன்?
மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?
சிந்திப்போம், செயல்படுவோம்!
தமிழ் மேன்மை அடைய உழைக்க வேண்டாம்
ஏன் என்றால் அதன் மேன்மை மிகப் பெரிது
அதனைக் கீழே இறக்காமல் இருந்தால்
அதுவே நாம் செய்யும் பெரும் பணி!

தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்க்கை!
எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை!
இதனை மறக்காமல் வாழ்வது என் கடமை!
இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை!இங்கு பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.

41 comments:

 1. உள்ளத்தோடு ஒன்றிய தமிழ் உணர்வுக் கவிதை!
  த.ம.2

  ReplyDelete
 2. காலத்திற்கேற்ற மீள் பதிவு..

  ReplyDelete
 3. அற்புதமான கவிதையை
  இப்போதுதான் படிக்கிறேன்
  மீள்பதிவாக அறியத் தந்தமைக்கு
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வணக்கம்

  இன்று தொலைக்காட்சிகளில் செய்தியை பார்த்தால் தமிழ் மொழியை பாடசாலையில் கற்பிக்க வேண்டுமா. வேண்டாமா என்ற நிலை தோன்றிக்கொண்டு இருக்கிறது இந்தியாவில். இப்படி நிலை இருக்கும் போது எம்முடைய தாய் மொழி எங்கே வளரப் போகுது....

  கவிதையில் நல்ல விடயங்களை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்,
   உண்மைதான்..சில மக்களுக்கு ஏன் தாய்மொழி இன்றியமையாதது என்று புரியவில்லை?

   உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. வணக்கம்
  த.ம 4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. //இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால்//
  தமிழ் வாழும் உலகை ஆளும்
  நன்றி சகோதரியாரே
  தம 5

  ReplyDelete
 7. அழகாகச் சொன்னீர்கள் கிரேஸ்.

  செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
  செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
  நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
  நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே.

   பாவேந்தரின் அருமையான பாடல்..இதை அனைவரும் அறிந்து உணர்ந்தால் நன்றாக இருக்கும். பகிர்விற்கு மிக்க நன்றி.

   Delete
 8. வரிகள் அனைத்தும் சிறப்பு...

  பாராட்டுக்கள்...

  ReplyDelete
 9. அருமையான கவிதையை வாசித்ததில் - மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 10. அழகான கவிதை அக்கா...

  உங்களது இக்கவிதையை வாசிக்கையில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது எனக்கு...

  எல்லா தமிழரும் இப்படியே இருந்தால் மகிழ்ச்சியே!!!

  ReplyDelete
 11. தமிழ் நாட்டிலேயே இன் நிலைமை என்றால் எம் நிலைமை வெளி நாட்டில் இன்னும் மோசமாக அல்லவா போகப் போகிறது. மனதை நெருடுகிறது தங்கள் அருமையான கவிதை நன்றி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டில், தமிழ் படிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று நினைக்கிறேன் தோழி..

   கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

   Delete
 12. அருமையாக சொன்னீர்கள்.
  கவிதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

   Delete
 13. அருமையான உள்ளத்துணர்வுடைக் கவிதை தோழி!

  உளமதில் என்றும் உணர்விதைத் தாங்க
  நலம்மிக காண்போமே நாம்!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. அன்புள்ள.

  வணக்கம்.

  தமிழைப் பேசாதவன் தமிழில் பேசாதவன் தமிழ்ப் பிறப்பாக இருக்க
  முடியாது,

  தமிழை மறந்தவன் மனிதனாகவே வாழமுடியாது.

  தமிழ் சுவாசக் காற்றுபோல சுவாசிக்கப்படும்போதுதான் ஒட்டுமொத்த தமிழினமும் காயசண்டிகையின் பசி நீங்கியதுபோல உய்வுபெறும்.

  உணர்வு கொப்பளிக்கும் கவிதை. சுவையும் பெருமிதமும் ஊட்டிய
  கவிதை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.
   உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 15. அருமையான கருத்துள்ள பகிர்வை மீள்பதிவாக தந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 16. தாமதமான வருகைக்கு மன்னிச்சுக்கோம்மா..
  “மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?“ அருமையான வரி.
  அதுகூட இல்லையெனில் இன்னும் சிறப்பு. கணிப்பொறி படித்தவர்க்குத் தமிழ் மேல் இவ்வளவு காதலா வியப்பும் மகிழ்ச்சியும் சகோதரி. நன்றி .. தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. எதற்கு ஐயா மன்னிப்பு என்று பெரிய வார்த்தையெல்லாம். உங்களின் பல பணிகளிடையே நீங்கள் வருவதே எனக்கு மகிழ்ச்சி, அது தாமதமாய் இருந்தால் என்ன ஐயா?

   ஆமாம், மீள்பதிவிடும்பொழுது நானும் யோசித்தேன், மேடைக்கும் எதற்கு முகமூடி என்று :)

   உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 17. அருமை கிரேஸ் ... தாய் மொழி மிக மிக முக்கியம்

  ReplyDelete
 18. தாய்மொழியின்மீதான ஆர்வமும் ஈடுபாடும் தற்போது குறைந்துவருவதைக் காணமுடிகிறது. தங்களது கவிதை தாய்மொழியின் முக்கியத்துவத்தை மிக சிறப்பாக எடுத்துரைக்கிறது. நன்றி.

  ReplyDelete
 19. மீள் பதிவு எனினும் சுவையான பதிவு.

  ReplyDelete
 20. நல்ல தாயிக்கும் தகப்பனுக்கும் பிறந்தவன் நீர் அதுதான் தமிழின் தீராத பற்று உமக்கு உன் போன்றோர்கள் இந்த மண்ணில் இருப்பதால்தான் தமிழின் பெருமை தெரிகிறது.......
  தமிழ் என் உயிர்....
  தமிழ் என் மூச்சு...
  தமிழ் என்அடையாளம்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...