Thursday, April 24, 2014

பெண்ணின் இதயம் என்பதால் ...நிறுத்தலாமோ??

Image: babycenter.com/pregnancy

ஐந்து மாதம்
ஐந்திரண்டுஅங்குலம்
சின்னஞ்சிறு சிசு
சின்னஞ்சிறு இதயம்
நிறுத்தப்பட்டதாம்
பெண்ணின் இதயம் என்பதால்..
நிறுத்தென்ற பேச்சையும் கேட்டிருக்குமே
Image:Thanks google
நிறுத்த முடியாமல் தவித்திருக்குமே
...

எப்படித் தெரியும்
எவர் சொன்னார் பெண்ணென்று ?

என்றாலும் கொல்லலாமோ
எவர் செய்தார் அதையும்?
எத்தனை சட்டம்
என்ன செய்யும்?
எரிதழலிட்டப்  புழுவாய்த் துடிக்கும்
என் மனதை
எப்படி ஆற்றுவேன்?

50 comments:

 1. என் மனமும் துடிக்கின்றதே.. இதுவும் வன்கொடுமை அல்லவா..
  பெண்மை மலரினும் மெல்லியதாமே?.. யார் சொன்னது?..
  பெண்களுக்கு இளகிய மனதென்று இனியும் எவர் குறிப்பர்?..
  பெண்மையே பெண்மையைப் பேண வில்லையெனில்
  பெருந் தெய்வமும் - பேயர்க்குத் துணை வருமோ?...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா, தாயே இதற்குப் பொறுப்பு..பெண்மையே பெண்மையைப் பேணாவிடில் யாரைச் சாடி என்ன பயன்? முன்னரே அறிந்திருந்தால் தடுத்திருக்கலாமோ என்று துடிக்கிறது மனது...
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

   Delete
 2. பெண்ணாய் பிறந்து தான் படும் துயர் தன் பெண்ணும் படக்கூடாதுன்னு நினைக்குறாளோ என்னமோ!!

  ReplyDelete
  Replies
  1. என்னவோ ராஜி..
   உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..

   Delete
 3. வணக்கம்
  சகோதரி

  பதிவை படித்த போது.... என் தலை சுற்றியது....ஆதங்கம் புரிகிறது.... துரை ஐயா சொன்னது போலதான்
  பெண்மையே பெண்மையைப் பேண வில்லையெனில்
  பெருந் தெய்வமும் பேயர்க்கும் துணை வருமோ?


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்.
   உண்மைதான் சகோ..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete

 4. வணக்கம்!

  பெண்ணாய்ப் பிறத்தல் பெருந்தவம் என்பதெல்லாம்
  பண்ணில் இருக்குமெனப் பாடு

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா..
   அப்படித்தான் இருக்கிறதோ நிலைமை..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா

   Delete
 5. நல்லவேளை தொடர் பிரச்சாரங்களாலும்
  சட்ட அமலாக்கத்தாலும் இந்தக் கொடுமை
  கொஞ்சம் குறைந்துள்ளது
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உன்மைதா ஐயா, கொஞ்சம் தான் குறைந்துள்ளது
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete
 6. அருமை கிரேஸ்.. உணர்ச்சி மிகுந்த கவிதை...

  ReplyDelete
  Replies
  1. உள்ளக்கொதிப்பு ஸ்ரீனி
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete
 7. Replies
  1. மனிதரே இல்லை..இல்லையில்லை, விலங்கினம் அப்படி செய்வதில்லை..என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோதரரே

   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete
 8. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 9. மனதை கொல்லும் கொடூரம் ...

  ReplyDelete
  Replies
  1. உண்மை..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மது

   Delete
 10. படிச்சவங்க பலரே இப்படிதான் இருக்கிறாங்க!!
  இப்படி பட்ட சமுதாயத்தில் பெண்கள் தங்களை நிலைநிருத்திக்கொள்ளவேண்டும் கிரேஸ்! மனதை தொடும் வரிகள் கிரேஸ்!!

  ReplyDelete
  Replies
  1. படித்தவர் படிக்காதவர் என்ற பேதம் இல்லாமல் இக்கொடுமை நடக்கிறது தோழி. இப்பொழுது நான் சொல்லியிருப்பது படிக்காத ஒரு பெண்.
   சரியாச் சொன்னீங்க மைதிலி..இப்படிப்பட்ட சமுதாயத்தில் எப்படி வாழ்கிறேன் பார் என்று ஒவ்வொரு பெண்ணும் வீறு கொள்ள வேண்டும்.
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி

   Delete
 11. இன்னும் இந்த கொடுமைகள் தொடர்வதுதான் வேதனை! சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்! மனங்கள் மாற வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ..சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் மனங்கள் கண்டிப்பாக மாறியே ஆகவேண்டும்.
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 12. உணர்வுமிகு வரிகள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரரே

   Delete
 13. ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏட்டில் மட்டும் எழுதாமல் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் அழுத்தமாய்ப் பதியும்வண்ணம் ஏற்றவேண்டும். மனம் பரிதவிக்க வைக்கிறது செய்தி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழி..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 14. பெண்ணுக்குத்தான் எத்தனை தடைகள்?
  பிறக்கும் முன்னும், பிறந்த பின்னும்...
  உங்களைப் போலும் நல்ல உள்ளமும், திறனும், வாய்ப்பும் உள்ளவர்கள் இதனை முற்றாக ஒழிக்க முயலவேண்டும் சகோதரி. இந்தச் சமூகத்தின் சாபக்கேடு இது. நெஞ்சைத் தொடும் வகையில் இன்னும் இன்னும் எழுதுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா, தடைகளை சமுதாயம் விதித்துக் கொண்டேதான் இருக்கிறது. என்னால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்வேன். உங்கள் வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 15. அழுத்தமான வரிகள்.

  ReplyDelete
 16. “பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
  ....... பத்து மாதமா போராட்டம் - இதுவும்
  பொண்ணாப் பொறந்தா கொன்னுடு வேன்னு
  ....... புருசன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்“ என்னும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கலைஇரவுகளில் மனதைப் பிழியும் பாடல்... கேட்டிருக்கிறீர்களா கிரேஸ்?

  ReplyDelete
  Replies
  1. பாடல் வரிகள் தெரிந்தமாதிரி இருக்கிறது, ஐயா. முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கலைஇரவுகளில் பாடுவதா?
   பகிர்விற்கு நன்றி .

   Delete
 17. ஏன் இந்தக் கொடுமை. ஒரு பெண்ணுயிர்க்கு உரிமை இல்லையா உயிர் வாழ. வளர்த்து வீர மங்கை ஆக்கி இருக்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோதரி..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 18. மனதில் அதிர்ச்சி... இன்னமும் இக்கொடுமையா.....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் .. :(
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 19. சகிக்கவில்லை தோழி! சமூகமும் ஒரு காரணம் தான்.வறுமையும் காரணம் தான். யாரை நோவது என்று புரியவில்லை. ஆதங்கம் புரிகிறது. கவிதை அருமை !
  வாழ்த்துக்கள் ...!
  குழந்தையின் பாராட்டும் தாயின் தாலாட்டும் என்று ஒரு கவிதையில் குழந்தை இதை சொல்லி அழுகின்றது முடிந்தால் பாருங்கள்...!
  http://kaviyakavi.blogspot.com/2014_02_01_archive.html

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழி, சமூகத்தின் நம்பிக்கைகளும் வறுமையும் ..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி..
   இப்பொழுதே பார்க்கிறேன் இந்த இணைப்பை, பகிர்விற்கு நன்றி.

   Delete
 20. இரண்டாவது பெண் குழந்தை தன் மனைவிக்குப் பிறந்ததால் மனைவியை ஒதுக்கி வைத்த ஒரு டாக்டரேட் முடித்த ஒரு பேராசிரியர்... அந்தக் குழந்தை பிறக்க தானும் காரணம் என்பது அறியாத முட்டாளா?

  ReplyDelete
  Replies
  1. அவர் என்ன படித்து என்ன பயன்? இப்படிப் பல படித்த முட்டாள்கள் இருக்கத்தான் செய்கின்றனர்..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எழில்.

   Delete
 21. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 22. வளர்ந்துவிட்டோம் என்று சொல்கிறோம். ஆனால் எண்ணத்தில் இன்னும் பின் தங்கித்தானே இருக்கிறோம். தங்களது இப்பதிவு அனைவருடைய ஆற்றாமையுமே. வேதனைக்குரியதுதான். எப்போது திருந்தப்போகிறோம்?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்..அறிவியலோடு எண்ணங்களும் ஓங்க வேண்டும்..
   உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா

   Delete
 23. என்ன ஆச்சு சகோதரீ? ஒருமாதமாகப் பதிவுகள் எதுவும் இடவில்லை? உடல் நலத்திற்கு ஒன்றுமில்லையே? கோடை விடுமுறையில் விருந்தினர்கள் மற்றும் குட்டீஸ்களைச் சமாளிப்பதற்கே போதும் போதுமென்று உள்ளதோ? நாங்களும் இங்கு நடத்திய “இணையத் தமிழ்ப்பயிற்சி”யில் கரைந்து விட்டோம்.நேற்றுத்தான் முடிந்தது, விரைவில் உங்களின் அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். நன்றி

  ReplyDelete
  Replies
  1. முதலில் உங்கள் அன்பான விசாரிப்பிற்கு மனமார்ந்த நன்றி ஐயா. விருந்தினர், பயணம் என்று பதினைந்து நாள் ஓடினாலும், உடல் நலக் குறைவால் இணையம் வரமுடியாமல் போனது. இன்று தான் வருகிறேன். பதிவுகளும் தொடரும் ஐயா. மிக்க நன்றி.

   Delete
 24. என் வலைச் சகோதரி மைதிலி, எல்லாரிடமும் சொல்லிவிட்டு நீண்ட விடுப்பில் போயிருக்கிறார். இன்னொரு சகோதரி கிரேஸ் சொல்லாமலே விடுப்பில் போய்விட்டார்... அப்புறம் வலையுலகம் வண்ணமிழக்காமல் என்ன செய்யும்?

  ReplyDelete
  Replies
  1. சொல்லாமல் விடுப்பெடுக்க வைத்துவிட்டது சூழ்நிலை..உங்களின் அன்பும் ஊக்கமும் மகிழ்வு தருகிறது, உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 25. பெண் வயிற்றில் உருவாகி ,
  பெண் பாலுண்டு, பெண் துணையால் ,
  வாழ்கின்றாய் பெண்ணின் பெருமை உணர்.
  தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...