ஆழி தந்த அணிகலன்



அலைகள் தாலாட்டும் ஆழி மருங்கில்
அடைந்த கரை வெண் மணலில்
அலைகள் காலை நனைக்க 
அரண்மனை கட்டும் என் தோழி

இது காண், ஆழி தந்த அணிகலன்
இதமாய் வருடும் கொலுசாய்க் கடற்பாசி 
இதழ்கொண்ட பூ அன்ன ஒரு கோடு மெட்டியாய்
இது காண் தோழி! ஆழி தந்த அணிகலன்!


கோடு   - சங்கு.

33 கருத்துகள்:

  1. ஆழி தந்த அணிகலன்கள் அழகு! சிறப்பான கற்பனை! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஆழிதந்த அணிகலன் சூழ்கால்கள் அழகு !

    பதிலளிநீக்கு
  3. இது காண் தோழி!.. ஆழி தந்த அணிகலன்!..

    அந்தப் பாரம்பர்ய அணிகலன்களே தொடர்ந்திருந்தால் -
    வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எவ்வளவு காலத்திற்கு முன்பு....கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  4. படமும் அழகு. கவிதையும் அழகு. பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  5. கவிதைக்களமும் புதிது, இனிது.
    அதைவிட “இதுகாண்“ எனும் சங்க இலக்கியச் சொல்லாட்சி நடை, கவிதைக்கே ஒரு புதிய கௌரவத்தைத் தருகிறது.“உதுக்காண்“ என்பதன் உகரச் சுட்டு இப்போது வழக்கிழந்துவிட்டது (அப்பக்கம், இப்பக்கம் சரி, உப்பக்கம்? அது புறமுதுகு என்கிறது திருக்குறள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'இதுகாண்' என்னும் சொல்லாட்சி முதன்முதலில் படித்தபொழுதே மனதை ஈர்த்துவிட்டது. உதுக்காண் என்பது அங்கே பார், இங்கே பார் என்ற இரண்டு அர்த்தத்திலும் வரும் என்று நினைத்தேன்..அதற்கு புறமுதுகு என்ற அர்த்தம் இருப்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி ஐயா. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
    2. அந்தப்பக்கம் - அ - தூரத்தில் இருக்கும்- சேய்மைச் சுட்டு,
      இந்தப்பக்கம் - இ - பக்கத்தில் இருக்கும்- அண்மைச் சுட்டு.
      உந்தப்பக்கம் - உ - இடைவெளியில் சற்றே அருகில் (முதுகுகாட்டி)
      இந்த உ இப்போதும் வழக்கிலிருப்பது ஈழத்தமிழரிடம் மட்டுமே ஆனால், முன்னர் தமிழகத்திலும் இருந்திருக்க வேண்டும் என்பதை இலக்கண நூல்கள் மற்றும் திருக்குறளால் (ஊழையும் உப்பக்கம் காண்பர்-குறள்-620) அறிய முடிகிறது. உதுக்காண் அரிய சங்க இலக்கியச் சொல் சகோதரி.

      நீக்கு
    3. உங்கள் விளக்கத்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா.

      நீக்கு

  6. வணக்கம்!

    ஆழி அளித்த அணிகலன் கண்டேன்
    வாழியென வாழ்த்துமே வாய்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆழி தந்த கவிதையும் அருமை :)

    பதிலளிநீக்கு

  8. ஆழி தந்த அணிகலன் மகிழ்ச்சியில்
    ஆழ்த்துகிறது..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  9. படமும் தங்கள் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. ஆழிதந்த அணிகலன்களை அணிந்த பாதங்கள் இன்னும் பல கவிதைகள் சொல்லும் போலிருக்கின்றனவே!
    கவிதை, அதற்குத்தக்க புகைப்படம் எல்லாம் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கம்மா..உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் அக்கா...

    மோனை நல்லா வசப்பட்டுருக்கு... நல்ல கவிதை. இப்படியே தொடருங்க.

    பதிலளிநீக்கு
  12. சகோதரிக்கு வணக்கம்
    ஆழி தந்த அணிகலன் அழகோ அழகு. ரசிக்க வைக்கிறது சகோதரி.

    பதிலளிநீக்கு
  13. தொடர்ந்து இது போல எழுதுங்கள்



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கத்தில் கண்டிப்பாக எழுதுவேன்,,உளமார்ந்த நன்றி மது.

      நீக்கு
  14. ஆழி தந்த அணிகலன் - நல்ல கற்பனை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...