Monday, April 21, 2014

தமிழர் பெற்ற இளைஞர்காள்

"ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்;
தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்" என்றாய்; காதில்
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!" - பாவேந்தர் பாரதிதாசன்


பாவேந்தரின் பாடல் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துவதாய்த் தோன்ற, இப்பதிவு.

வாக்கினை இடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
இளைஞர்காள்! தமிழ் வாழ
தமிழர் வாழ, இமயம்வரை
செல்லட்டும் நம் முத்திரை!

26 comments:

 1. சமயத்திற்கேற்ப சரியான பாடல்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் திரு.தனபாலன், பாவேந்தரின் அழகின் சிரிப்பைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இதைப் படித்தவுடன் அட, பொருத்தமாக இருக்கிறதே என்று தோன்றியது..எவ்வளவு அழகான பாடல் :)
   உங்கள் உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 2. என்றோ கவிஞர் சொன்னது மாறவில்லையே என்ற வருத்தம்தான் ஏற்படுகிறது !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் என்றாலும் 'தமிழே, நீ நடுங்கவில்லை...கடல் முழக்கத்தைக் கேட்பாய்' என்று ஊக்கமும் தருகிறது..
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 3. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நினைவுநாளில் பொருத்தமான பாடல்.

  ReplyDelete
 4. வீரம் விளையாடும் வரிகள்..
  வறட்டுப் பாடல்களைக் கேட்டுத் திரிபவர் செவிகளில் ஏற வேண்டும் இந்த வரிகள்..
  ஆனால் - செவிப்பறை கிழிந்த நிலையில் - இன்றைய தமிழுலகம்!..

  இனிய பாடலினைக் கண்டு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. //செவிப்பறை கிழிந்த நிலையில்// .. உண்மைதான் ஐயா..எப்படியாவது சரிசெய்ய முடியுமா என்ற ஆதங்கம் தான்..பலர் அதற்காக உழைக்கின்றனர்..மாற்றம் வரும் என்று நம்புவோம்.
   உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 5. பாரதிதாசன் கவிதை காலத்தால் அழியாததுதான். அதற்கு அன்று தேவை இருந்து இருக்கு. அதான் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

  அவர் சொன்ன அந்தத் தமிழ இளைஞர்கள் எல்லாம் இப்போ இளமை இழந்துவிட்டார்கள், மறைந்துவிட்டார்கள். இருந்தாலும் புதிதாக வந்து இருக்கிற தமிழ் இளைஞர்களுக்கு அது உதவத்தான் செய்யுது. ஏன் என்றால் இவர்களும் அவர்களிப்போலவே பொறுப்பற்ற இளைஞர்களாக இருக்காங்க,

  ஆக, காலம் மாறினாலும் நம்ம தமிழ் இளைஞர்கள் மாறுவதில்லை. :)))

  சப்போஸ், இன்றைய தமிழ் இளைஞர்கள் முன்னவர்போலில்லாமல் பொறுப்புடன் இருந்து இருந்தால், அந்தக் கவிதை "கிளாசிக்" காக இருக்காது பாருங்க. :)

  அந்த வகையில் பாரதி தாசன் கவிதை இன்றைய இளைஞர்களுக்கு தேவையில்லாமல் போயி, அந்தக் கவிதை ஒரு "சென்கவிதை"யாக இல்லாமல் இருந்தால் நான் சந்தோசப்பட்டு இருப்பேன்.

  ஆனால், என்ன செய்வது? அதே நிலைதான் தொடர்கிறது.

  அப்புறம், அடுத்த ரெண்டு ஜெனெரேசன் போன பிறகும், உங்க பேத்தி, ஒரு குட்டி கிரேஸ் வந்து இதே பதிவை மீள் பதிவு செய்யவும் வாய்ப்பிருக்கு. ஏன் என்றால் அப்போ வரும் தமிழ் இளைஞர்களும் "இதேபோல்" தான் இருப்பாங்க, பொறுப்பில்லாமல். :) :(

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மன ஆதங்கம் புரிகிறது வருண், அதுவே பலரின் ஆதங்கமும். நீங்கள் சொல்வது உண்மைதான், இருந்தாலும் அன்று சில இளைஞர்களாவது இக்கவிதையால் தொடப்பட்டிருப்பர்.. அதுபோல இன்றும் இன்னும் சிலர் உணரட்டும், விழிதிறக்கட்டும் என்றே ஒரு ஆசை. மாற்றம் இல்லை என்று சொல்லி அப்படியே விட்டுவிட முடியுமா? செய்வதைச் செய்வோம்..நம்பிக்கையுடன்.
   ஹாஹா கிரேஸ் படுத்துறது பத்தாதுன்னு குட்டி கிரேஸ் வேற வந்து படுத்தணுமா? :)
   உங்கள் ஆழமான கருத்துரைக்கு நன்றி வருண்.

   Delete
 6. சரியான நேரத்தில் பொருத்தமான பாடல் கிரேஸ்

  ReplyDelete
 7. பாரதிதாசனின் பல பாடல்கள் நமக்கு உணர்ச்சியூட்டின. அன்று அதை மேடையில் சொன்னவர்களின் இன்றைய போலித்தனத்தால், பாரதி, பாரதிதாசனின் பாட்லில் ஒ்ன்றைச் சொல்லிவிட்டுத் தொடரும் எனது பேச்சுக் கூட கேலிசெய்யப் படுகிறது! ஆனால், கேலியைக் கிண்டலை நினைத்திருந்தால் பாரதியும் பாரதிதாசனும் காலம் கடந்தும் நிற்கமாட்டார்கள் கிரேஸ்! அருமையான பாடலை நினைவூட்டினீர்கள். மறந்துவிடுவது மக்கள் இயல்பு, நினைவூட்டுவது நமது கடமை! தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்லதைச் செய்யும்பொழுதும் சொல்லும்பொழுது பலருக்குக் கேலியாகத் தெரிகிறது..நீங்கள் சொல்வது போல கேலிக்குப் பயந்திருந்தால் உலகில் பல நல்லவை நடந்திருக்காது. நீங்கள் சொல்லும் பாடல்கள் சிலரையாவது கண்டிப்பாகச் சென்று சேரும், கேலி பேசும் சிலரைக் கண்டுகொள்ளாமல் தாங்கள் தொடர்வதற்கு நன்றி. புரட்சிக் கவியை நீங்களும் முனைவர் குணசீலன் அவர்களும் அவருடைய தளத்தில் சொல்லியதில் தான் நான் அறிந்தேன், அதற்கு முன் படித்ததில்லை...மிக்க நன்றி.
   ஆமாம், கடமையைச் செய்வோம். உங்கள் கருத்துரைக்கும் ஊக்கத்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete

 8. வணகக்ம!

  பாவேந்தன் பாடிய பைந்தமிழை எந்நாளும்
  நாவேந்திக் காத்தல் நலம்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   உங்கள் கவிக் கருத்திற்கு மிக்க நன்றி.

   Delete
 9. காலத்திற்கேத்த பதிவு
  ஆனால் இந்த வாட்டி என்னால் ஓட்டு போட முடியாது.. எங்களுக்கும் சேர்த்து ஒரு நல்ல அரசை ஆட்சியில் வச்சுடுங்க ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீனி.
   உங்களால் இம்முறை வாக்களிக்க முடியவில்லை, சரி...ஆனால் உங்களுக்கு சேர்த்து எல்லாம் நான் போட முடியாது, ஒவ்வொரு ஓட்டும் மதிப்புள்ளது :)

   Delete
 10. நேரத்திற்கு ஏற்ற சரியான பதிவு. மனதில் பதியும்படி உள்ளது. நன்றி. எனது பதிவைக் காண உங்களை அன்போடு அழைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. கண்டிப்பாகப் பார்க்கிறேன்

   Delete
 11. பாவேந்தர் பாடலுக்கேற்ற தங்களின் தற்கால கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. இந்த சமயத்தில் இப்படி ஒரு பாடல் தேவை தான் அதை இந்த நேரத்தில் தாங்கள் பகிர்ந்தது சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சரவணன்...

   Delete
 13. சமயத்திற்கேற்ப சரியான பாடல்...

  ReplyDelete
 14. பொருத்தமான பாடல் தான்....

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...