மாலில் தொலைந்த சிறுவன்


சனிக்கிழமை மாலையில் மால் சென்றிருந்தோம். ரிலையன்ஸ் டிஜிட்டல் அங்காடியில் என் பிள்ளைகள் 'எக்ஸ் பாக்ஸ்'ல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆறு வயதிருக்கும் ஒரு சிறுவனும் வந்து சேர்ந்து கொண்டான். அவனுக்கு என் பெரியவன் விளையாட்டைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அந்த சிறுவனை அவனுடைய அப்பா நேரமாகிவிட்டது என்று அழைத்துச் சென்றார்.
ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும், அச்சிறுவன் வந்து என்னிடம் பெற்றோரைக் காணவில்லை, எங்கு சென்றார்கள் தெரியவில்லை என்று சொன்னான். உள்ளே வந்தார்களா என்று பார்க்க வந்தானாம். நானும் என் கணவரும் சேர்ந்து பார்த்தோம், அவன் அப்பா உள்ளே இல்லை.
 அந்தச் சிறுவனின் தந்தையை நான் பார்த்திருந்ததால் என் கணவரை என் குழந்தைகள் அருகில் நிற்கச் சொல்லிவிட்டு நான் அங்காடியின் வாயிலுக்குச் சென்று இருபுறமும் பார்த்தேன், காணவில்லை. "நீ தான் அப்பாக்கூட போனியே, எப்படி தனியா வந்த", அப்படின்னு கேட்டேன். "தெரிலை ஆன்ட்டி, கூடதான் போனேன், காணோம்" என்றான்.

சரி, போன் நம்பர் தெரியுமா என்று கேட்டேன். தெரியும் என்று சொல்லி நம்பரையும் சொன்னான். என் அலைபேசியை எடுத்து அவன் சொன்ன நம்பருக்கு அழைத்தேன்.  அவன் அம்மாதான் எடுத்தார். உங்கள் பையன் உங்களைத் தவற விட்டுவிட்டான் போல, என்னுடன் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில்இருக்கிறான்" என்று சொன்னேன். அதற்கு அந்த அம்மா என்ன சொன்னார் தெரியுமா?

"தவறவிடவில்லை, நாங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் சொல்வதைக் கேட்காமல் ஓடுகிறான், அதனால். நான் போனை எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு தள்ளிச் செல்லுங்கள்"!!!????!!!!!

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாவம் அச்சிறுவன். அவனிடம் எங்கும் போகாமல் இங்கேயே இரு, உன் பெற்றோர் வருவார்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பார்த்துக் கொண்டிருந்தேன். இரு நிமிடங்களில் அவன் அம்மா  வெளியே வந்தவுடன் இவன் அவரிடம் ஓடினான். அவனை அங்கு உட்கார வைத்து பெற்றோர் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். நான் என் கணவரிடம் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தேன், எப்படி பேசுகிறது அந்த அம்மா என்று.. அப்பொழுது அவன் அம்மா வந்து, "நன்றி, (அட, இது கூட தோணுச்சா?) விளையாட விடவில்லை என்பதற்காக எங்கள் முன்னால் ஓடுகிறான். அதனால் பாடம் கற்பிக்க ஒளிந்து கொண்டோம். நீங்கள் வந்து தேடியதையும் அலைபேசியை கையில் எடுத்ததையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்." என்றார். நான், "பாவம் பயந்து விட்டான்" என்றேன். "பயப்படட்டும், எப்படி ஓடுகிறான்..சரி வருகிறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

அச்சம் விதைத்து அகம் மலருமோ?
பயம் ஊட்டி பிஞ்சு வளருமோ?

"அம்மா, பயமாருக்கு" என்று ஒரு குழந்தை சொன்னால், "ஒண்ணும் இல்லேடா, அம்மா இருக்கேன்ல.." என்று சொல்லும் அம்மாக்கள் யதார்த்தம். அனைவரும் அறிவோம்.

"பயமுறுத்தனும், அப்போதான் சரி வருவான்" என்று சொல்லும் அம்மாக்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை!

59 கருத்துகள்:

  1. அம்மாவா இது...? தூக்க மாத்திரை கொடுத்து ஆளில்லாத தீவில் விட்டுவிட்டு வரணும்... முக்கியமாக கையில் கைபேசி இல்லாமல்...

    பதிலளிநீக்கு
  2. என்ன செய்வது!.. நாளைக்கு இந்த பிஞ்சு மனதில் உண்மைகள் புரியும் போது - என்னென்ன எதிர் விளைவுகள் முளை விடக் காத்திருக்கின்றனவோ!?..

    தெரியாமலா சொன்னார்கள்... திரைப்படப்பாடலில் -

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்னில் பிறக்கையிலே.. அவர்
    நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்க்கையிலே!..

    - இதை அந்த சிறுவனின் தாய் தந்தையர்க்குப் புரிய வைக்க வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நாளைக்கு அவன் முதியோர் இல்லத்தில் கொண்டு விடுவான்..

      நீக்கு
  3. Tough Love! இங்கு அமெரிக்காவில் எங்கள் மகன் குழந்தையாக இருந்த பொது, பதினெட்டு மாதமாகியும் இரவெல்லாம் தூங்காமல் ஒரு முறையாவது எழுந்துவிடுகிறான் என்று டாக்டரிடம் சொன்னபோது அவர் சொன்னது, தனியறையில் அவனை படுக்க விடுங்கள். நடுவில் எழுந்தாலும் அழுது அழுது அப்படியே தூங்கிவிடுவான். அப்படி தான் எல்லோரும் செய்வார்கள் என்றாரே பார்க்கலாம்? அது எப்படி குழந்தையை விடமுடியும் என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..அழுது அழுது ஏதாவது ஆகிவிட்டால் பிடித்து விசாரித்து சிறையிலும் அடைப்பார்கள்..

      நீக்கு
    2. IMHO, That's how whites create serial killers! They dont love their children as the kids needed to be loved at young age. They look like they are liberal but they are NOT. They are very adamant when it comes to setting rules for their children (just like this stupid mom, Grace happened meet). When the children are NOT loved or cared properly, they grow up as violent and become a psycho and go to a school and kill young children heartlessly (newtown CT like cases). I am seeing how they create such kids!

      நீக்கு
    3. Thanks for your comment Varun. True, Unconditional love and care while instituting proper values will aid in creating a better society. But that's not understood and confusion in the name of discipline takes over...

      நீக்கு
    4. பாருங்க மக்களே....

      இங்கிலீசுல பதில் சொல்லிருக்காங்கலாம்....

      நீக்கு
  4. ஆம் விசித்திர அம்மாவாகத்தான் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  5. ஒரு லெவலுக்கு மேல வளர்ந்ததுக்கப்புறம் நான்லாம் வெளியே போனா பசங்கக்கிட்ட கொஞ்சம் பைசா கொடுத்து வைப்பேன். எங்காவது நம்மை மிஸ் பண்ணிட்டா ஃபோன் பண்ணவும், வீடு வந்து சேரவும்ன்னு. இந்த அம்மா புதுசா இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அக்கறையான அம்மா..
      அந்த அம்மாவ...எத்தனை பேர் இப்படி இருக்காங்களோ..

      நீக்கு
  6. ரிலையன்ஸ் டிஜிடல் மாலில் எக்ஸ் பாக்ஸ் விளையாட முடியுமா என்ன ?
    நீங்கள் சொல்வது சென்னையிலா?
    சென்னைக்கு எக்ஸ் பாக்ஸ் வரவில்லை என்று அல்லவா சொல்கிறார்கள்.

    எக்ஸ் பாக்ஸ் ஒன் விலை அமெரிக்காவில் 450 டாலர்.

    இது இந்தியாவில் ஆர்டர் புக் செய்தவர்களுக்கு செப்டம்பர் மாத துவக்கத்தில் ரூபாய் 55000 க்கு வரும் என்கிறார்கள். ஏற்கனவே மும்பை, தில்லி, போன்ற நகரங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பா அம்மாக்கள் இதற்கான ஆர்டர் செய்து இருக்கிரார்கள்.

    இதெல்லாம் இருக்கட்டும்.

    ஒவ்வொரு அம்மாவுக்கும் அவங்க குழ்ந்தை எதற்கு கட்டுப்படும் என்று நன்றாகவே தெரியும்.தெரிகிறது. இந்த விஷயத்தில், ஒவ்வொரு அம்மாவும், ஒவ்வொரு குழந்தையும் யுனிக். அதாவது ஒருவருக்கு செல்லுபடியாகும் யுக்தி இன்னொரு அம்மாவுக்கு பயன் இராது.

    நமக்கு தேவையற்ற அதிகப்படியான கண்ட்ரோல் என தோன்றுவது, இன்னொருவருக்கு குறைந்த பட்சம் என்று தோன்றலாம். அந்த மகனின் மகளின் வீட்டு / பள்ளி நடவடிக்கைகள், வெளி யிலே தெரியாததால், அவர்கள் செய்வது சற்று அதிகமாக தோன்றுவது இயற்கை தான்.

    என்ன தான் இருந்தாலும், தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கையாக ஆகிவிடக் கூடாது. இல்லையா ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூருவில் சுப்பு தாத்தா. ஆர்டர் பண்ண வேண்டியது பற்றி நான் அறியவில்லை.

      ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை உடையதுதான். என்னவாக இருந்தாலும் ஒரு குழந்தையை அப்படி விட்டுச் செல்வது தப்பு..அதன் மனதில் பெற்றோர் மேல் உள்ள ஒரு நம்பகத்தன்மை குறையாதா? விளையாட்டுப் பிள்ளை பத்தடி ஓடக்கூடாதா? பெற்றோர் பார்த்துக் கொள்ள இருக்கின்றனர் எனபது தானே அந்த மனதில் இருக்கும்? விளையாடவிடவில்லை என்று கோபத்தில் ஓடினால் அதற்குப் பின் வரும் சந்தர்ப்பத்திலும் விளையாடக்கூடாது என்று சொல்லிவிடலாம். அதைவிட்டு இப்படியா? இது ஒரு புறமிருக்க, பதறி நான் அலைபேசியில் அழைக்க அந்த அம்மா பேசிய விதம் இருக்கே..நாகரிகம் அறிந்த ஒருவரது வழக்கம் இல்லை அது என்பதே என் கருத்து.
      உங்கள் வருகைக்கு நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  7. அச்சம் விதைத்து அகம் மலருமோ?
    பயம் ஊட்டி பிஞ்சு வளருமோ?

    இயல்பாக மலரவைக்கும் திறமை இல்லாதவர்களோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் போல..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

      நீக்கு
  8. அப்றம் முதியோர் இல்லம் போக வேண்டியதுதான் அச்சுறுத்தும் பெற்றோர்.ஆமா உதவி பண்ண உங்கள என்ன நினைச்சாங்க?

    பதிலளிநீக்கு
  9. இப்படியும் அம்மாவா.. இங்க அம்மா குழந்தை மாதிரி நடந்துக்கிறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம்ம் அவங்க விளையாட விடலைன்னு அவன் ஓடுறான்..அவன் ஓடுறான்னு இவங்க ஒளியுறாங்க..

      நீக்கு
  10. We can protect & cuddle them and spoil or you can assist them learning the world. If the mom was watching out the kid's move(as she said in phone) then she is doing it right.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //We can protect & cuddle them and spoil// I don't agree with this..protecting and cuddling doesn't spoil, whereas it could be used to teach as well. Assist them learning the world is true..but I don't think this particular incident falls on the assisting side. Of course, she was watching, she knew her son was safe. But on the other hand will the son know that? Even if she tells later will he be able to comprehend? Let the kids run around and follow them, so when they look back they know you are there for them..In this case he didn't run a long way without waiting for the parents. As the mother told me, as soon as he started running they both moved aside to hide. The boy was near me in few minutes of leaving from the store..So he had turned back to look for his parents..
      She should have come atleast when I called..On the other hand she told me to move away in a rude manner..
      Anyways thanks for your comment.

      நீக்கு
  11. இதுதான் புது விதமான மால் கலாசாரம் போலிருக்கு !
    த ம +1

    பதிலளிநீக்கு
  12. இப்படியும் சில அம்மாக்கள்...

    பட்டறிவு என்று ஒன்று உண்டு.... பட்டால் தெரிந்து விடும் குழந்தைக்கு என நினைத்திருப்பார்களோ என்னமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நினைத்திருந்தால் குழந்தை தேட ஆரம்பித்த உடன் வந்து, பார்த்தாயா? ஓடியதால் எங்களைத் தவற விட்டாய், நல்ல வேளை பார்த்துவிட்டோம் என்று சொல்லி அழைத்துச் சென்றிருக்கலாம்.
      உங்கள் கருத்துரைக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  13. குழந்தைகள் ஒரு அளவுக்கு மேல் பயந்துவிட்டால் காய்ச்சல் வந்துவிட வாய்ப்புகள் இருக்கிறது. சில சமயத்தில் மனதளவில் நிரந்தரமான சிதைவுகூட ஏற்படலாம். எப்படியிருந்தாலும், ஒருவர் பதறிப்போய் குழந்தை இங்கே இருக்கிறது என்று தகவல் தரும்பொழுது, இது போல நடந்தால், அடுத்த தடவை புலி வந்த கதையாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..அடுத்து எப்பொழுதேனும் இச்சூழ்நிலை ஏற்பட்டால் யோசிக்கத்தானே தோன்றும்..இருந்தாலும் நம் கடமையைச் செய்துவிட்டுப் போக வேண்டியதுதான்..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. மிகவும் அடம்பிடிக்கும் குழந்தையை விட்டு நகரத் தொடங்கினால், நம் பின்னால் ஓடி வருமே அது போல் இது ஒரு முயற்சியோ என்னவோ? ஆனால் பயமுறுத்தினால் ஓட மாட்டான் என்று நினைத்தது தவறு. டைம் அவுட் என்று ஒரு தோழி தனி அறையில் ஆறு வயது குழந்தையை கால் மணி நேரத்திற்கு அடைத்து வைத்துவிடுவார்கள். சில பெற்றோர் இது போல் கடுமையாகத் த்ண்டிக்கிறார்கள். என்ன் சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகரத் தொடங்கினாலும் கண் பார்வையில் இருப்பாரே..வெங்கட் அவர்களுக்குச் சொன்ன பதில்தான் பொருந்தும்..குழந்தைத்தனம் புரிந்துகொள்ளப் படவேண்டிய ஒன்று.ஆனால்..
      . கருத்துரைக்கு நன்றி தியானா.

      நீக்கு

  15. வணக்கம்!

    தமிழ்மணம் 7

    நடந்த நிகழ்வை நவின்றுள்ளீா்! நெஞ்சுள்
    படா்ந்த துயரைப் படைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அம்மா என்றால் அன்பு என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. மாலில் நீங்கள் பார்த்தது, அம்மா என்றால் அம்மு. அதனால்தான் அந்த அம்மு குழந்தையை கும்முகிறார்..

      நீக்கு
    3. எதற்கு கும்முகிறாரோ...
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  16. இப்படியும் ஓர் அம்மாவா? படிக்க வேதனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் அணுகுமுறை மிகவும் தவறு.... பாவம் அந்த சிறுவன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்..
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  18. "அம்மா, பயமாருக்கு" என்று ஒரு குழந்தை சொன்னால், "ஒண்ணும் இல்லேடா, அம்மா இருக்கேன்ல.." என்று சொல்லும் அம்மாக்கள் யதார்த்தம். அனைவரும் அறிவோம்.-- ரொம்பச் சரியான கருத்து.
    அந்தப் பெண்மணியின் உளவியலில்தான் ஏதோ சிக்கல். இந்த நிலை தொடர்ந்தால் அந்தச் சிறுவன் மேலும் பிடிவாதக்காரனாவதும், எதிர்காலததில் பெற்றோர் தொடர்பே இல்லாமல் இருக்க விரும்பி (தான் உள்ளுரில் இருந்தாலும்) பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடத் தயாராவதும் நடக்கும் என்பதே எதார்த்தம். அன்பு உடனடிப் பலன்தராவிட்டாலும் பின்னால் நிச்சயம் புரியும். அச்சம் பின்னால் பெரும் பிரச்சினையாகவே வளரும். இது குழந்தை வளர்ப்பில் நிகழும் அதீதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல பெற்றோர் மேல் பற்றுதல் இல்லாமல் தான் மாறிவிடுவர், இப்படி இருந்தால்.
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  19. பயப்படும் குழந்தை எந்த புதிய முயற்சியிலும் இறங்காதே!
    இப்படி பட்ட பெற்றோர்களுக்கும் , கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கும் என்ன வித்யாசம்! இவங்க இப்படி இருந்தா பிள்ளைங்க மட்டும் எப்படியிருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தான்.
      அவங்க விளையாட விடலைன்னு அவன் ஓடுறான்..அவன் ஓடுறான்னு இவங்க ஒளியுறாங்க. அவனாவது குழந்தைத்தனம்...அவர்கள்?...
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி.

      நீக்கு
  20. காலம் கலி காலம்... ஆனால் அதே சமயம் அந்த அம்மா விளையாட்டுக்குக் கூட செய்திருக்கலாம், அக்கா... தன் மகனிடம் அகவி (செல் போன் ) நம்பர மனதில் பதிய வச்சிருக்காங்கள்ள... அது வரைக்கும் முன் எச்சரிக்கையா தான் இருக்காங்கன்னு தோனுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளையாட்டுக்கு இல்லை வெற்றிவேல்,,ரொம்ப கோவமா இருந்தாங்க..
      இங்க பள்ளியிலேயே முகவரியும் அலைபேசி எண்ணும் சொல்ல வச்சுடுவாங்க...

      நீக்கு
  21. அந்த தாயின் செயலை நினைத்து மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இப்படியும் இருப்பார்களா? குழந்தை உண்மையிலேயே தவறிக் காணாமல் போய்விட்டால் என்னாவது? இந்த நிகழ்ச்சி அவன் மனத்தில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்? இன்றில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் உண்மை தெரியவரும்போது அவன் உளவியல் ரீதியாய் எவ்வளவு தாக்கத்துக்குள்ளாவான்? என்ன பெற்றோர்களோ? வேதனைதான் மிஞ்சுகிறது. அவன் ஒருவேளை உங்களிடம் வராமல் வேறு தகாதவர்களிடம் சென்றிருந்தால்? கண்ணிமைக்கும் நேரம் போதுமே... கடத்திவிட! நினைத்தாலே பகீரென்கிறது... இப்பதிவின் மூலம் உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் கீதமஞ்சரி...நானும் அதையேதான் நினைத்தேன். தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்தாலும்.. இந்த காலத்தில் என்ன சொல்லமுடியும்?
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி.

      நீக்கு
  22. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
    வேதனைதான் மிஞ்சுகிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி சகோதரரே.

      நீக்கு
  23. பதில்கள்
    1. இந்த விசயத்தில் என்று கொள்ளலாம்..
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  24. மூளை சொன்னதை கேட்டிருக்கிறார்கள்

    மனம் சொன்னதை கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்...
    அப்புறம் நீங்கள் ஒரு பதிவர் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் இப்படி நடந்துகொண்டிருக்க மாட்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.
      ஹாஹா அதுவும் உண்மைதான்.
      கருத்துரைக்கு நன்றி மது.

      நீக்கு
  25. அன்புள்ள சகோதரி,

    நமது நாட்டில் விளையாட்டிற்குக்கூட இப்படிச் செய்யமாட்டார்கள்.
    நாடு விட்டு நாடு வந்து... நடப்பதைப் பார்த்தால் வியப்பாகத்தான் உள்ளது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு பயலஜிகள் ஈவன்ட்
    பெற்றோர் ஆவது அப்படி அல்ல

    என்னசெய்வது
    அந்தக் குழந்தை பின்னால் எப்படி வருவான் என்று இப்போதே பார்க்க முடிகிறது

    தம +

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...