வினையோ பெயரோ


உயிரும் மெய்யும் கண்கட்ட
எதுகையும் மோனையும் ஒளிய

சொற்களைப் புரட்டித் தேடுகிறேன்
வினையோ பெயரோ
நிறையோ நேரோ
எதுவும் சேராமல்
என்கவிச் சோலை வறண்டதோ?

26 கருத்துகள்:

  1. முயற்சி திருவினையாக்கும் .சோர்வு எதற்கு ?..மேலும் மேலும்
    முயற்சியினால் இந்தப் பாலை வானமும் சோலை வனமாக
    வாழ்த்துக்கள் சகோ .

    பதிலளிநீக்கு
  2. கவிச் சோலை முழுவதும் ஒரே பெயர் நிறைந்திருக்க எங்கிருந்து தோன்றும் கவிதை...

    நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல ஆண்டுகளாய் அப்படித்தான்..ஆனால் கவிதை தோன்றும்.
      வாழ்த்திற்கு நன்றி!

      நீக்கு
  3. வணக்கம்

    ரசிக்கவைக்கும் வரிகள்......
    வாழ்த்துக்கள்

    தேடுகிறேன்.....தேடுகிறேன்.... கவிதையாக......என்பக்கம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      நன்றி..
      உங்கள் பக்கம் கண்டிப்பாக வந்துகொண்டிருக்கிறேனே..உங்கள் பக்கம் ஒரு கவிச்சோலை..

      நீக்கு
  4. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. என் கவிச்சோலை வரண்டதோ?? எனக்கு வறண்டிருப்பது போல் தெரியவில்லையே

    பதிலளிநீக்கு
  6. எங்கே வரண்டது....
    கவிதைகள்தான் ஊற்றெடுத்து கிளம்பி வருகின்றனவே...
    வாழ்த்துக்கள்...
    ஒலிநயம் என்று தோன்றுகிறது
    நன்னா இருக்கு பேஷ்பேஷ்!

    பதிலளிநீக்கு
  7. தூர் வாரவாரத்தான் தண்ணீர் ஊற்றெடுக்கும். அதுபோல தான் தாங்களும் சொற்களை புரட்டி புரட்டி தேடும்போது, அழகான,ரசனையான கவீதைகள் தோன்றுகிறதோ??

    பதிலளிநீக்கு
  8. ஹா ஹா.. கங்கையில் நீர் வற்றினாலும் வற்றும் ... உங்க கவி வற்றுமா?.. வெள்ளப் பெருக்கு வேணா வரும் .. கொஞ்சம் இந்த பக்கம் தள்ளி விடுங்க, இங்க தான் வறண்டு கிடக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா இது ரொம்ப மிகையா இருக்கே..
      உங்கள் இனிய கருத்திற்கு உளமார்ந்த நன்றி ஸ்ரீனி..
      'இங்க தான் வறண்டு கிடக்கு' இந்த வரியா வச்சே ஆரம்பிச்சுடுங்க ஸ்ரீனி :)

      நீக்கு
  9. உயிரே சிலிர்த்து எழும்போது
    எதுகையும் மோனையும் எதுக்குங்க ?
    சொல்லே சுவையாய் உதிர்கையிலே
    சிவக்கின்ற இதழ் மை எதுக்குங்க ?

    சுப்பு தாத்தா. .

    பதிலளிநீக்கு
  10. ஊற்றுக்கள் வற்றுவதில்லை சகோ! சில சமயம் உலர்ந்தாலும் மீண்டும் உருவாகிவிடும்! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. வற்றாத நதிகள் எல்லாம் கடலிடம் பொய் சேரும்
    கடலே வறண்டு போகுமா ?! ;)
    தேன்மதுர தமிழ்க்கடலே, அகம் பாடு
    அல்லது புறம் பாடு!!

    பதிலளிநீக்கு

  12. ரசிக்கவைக்கும் வரிகள்......
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...