மக்கியும் மரமாகும் மரம்

மக்கியும் மரமாகும்
புள்ளினத்தின் வாழ்விடமாகும்
புள்ளி போல எறும்பும் ஊரும்

தாவித்தாவியே அணில் விளையாடும்

தானாய் இலைகளும் காற்றிலாடும்

பொந்திலும் பறவை பாம்பு வாழும்
பொதி இறக்க முகிலை அழைக்கும்

பணியாய்க் காற்றைத் தூய்மையாக்கும்
பழமாய்க் கனிந்து பசிபோக்கும்

நிற்கும் இடத்தின் மண்வளம் காக்கும்
நிழலால் வழிப்போக்கரை ஆற்றும்

காலம் பல கடமையாய் நிற்கும்
காற்றைப் பதமாய்க் கொடுக்கும்

விண்ணைத் தான் தொட்டாலும்
மண்ணைத் தான் சேரும் 

மண் செழிக்க உரமாகும்
மக்கியும் மரமாகும் மரம்

37 கருத்துகள்:

  1. வணக்கம்...

    மரங்களின் பயனை விளக்கும் சிறப்பான பதிவு...

    மரம் மரணித்தும் பயன்படுகிறது, ஆனால் மனிதர்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெற்றிவேல்!
      கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!

      நீக்கு
  2. வணக்கம்

    இயற்கை வளங்களில் மரமும் ஒன்று தங்களின் பார்வையில் ஒரு வித்தியாசமான கவித்துவம் புலர்ந்துள்ளது.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்!
      உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. ''..மண் செழிக்க உரமாகும்
    மக்கியும் மரமாகும் மரம்...


    Sirappu vatikal. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர்ந்த வரிகள் சுட்டிக் கருத்திட்டமைக்கு கனிவான நன்றி கோவைக்கவி!

      நீக்கு
  5. இயற்கையின் எழில் வண்ணமாம்
    மரத்திற்கு அருமையான கவிதை சகோதரி..

    பதிலளிநீக்கு
  6. அழகு... சூப்பர்.. அற்புதமான ரசிக்கும் வரிகள் ...

    பதிலளிநீக்கு
  7. மக்கியும் மரமாகும் மரம்! உண்மைதான். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பயன் தரும் மரங்களையும் விலங்குகளையும் கீழான மனிதர்களோடு ஒப்பிட்டு அவற்றின் பெருமை குலைப்பது எந்த விதத்திலும் சரியன்று. மிக அழகான கவிதை. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்வது உண்மைதான்...மனிதன் சுயநலக்காரனாய் மாறிவிட்டானே...
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  8. மரத்தின் பயனை
    அழகுக் கவிதையாய்
    அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  9. அருமை...

    மரத்தைப் போல் இன்றைய மனிதன் ஆகவே முடியாது...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..
      உங்கள் கருத்துரைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  10. உலகத்தின் செழிப்பே மரங்களின் வாழ்வில் தான் .அருமையான
    படைப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !

    பதிலளிநீக்கு
  11. மரம் நமக்கு கிடைத்த வரம் என அறியசெய்யும் இனிய வரிகள்
    வாழ்த்துக்கள் கிரேஸ் !

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு. “இனியும் பயனற்ற மனிதரை மரம் என்று சொல்லாதீர் வள்ளுவரே!” என்ன வைரமுத்து நினைவுக்கு வருகிறார். வாழ்த்துகள் சகோதரீ! கடைசி வரியில் சிக்ஸர் அடித்திருக்கிறீர்கள். (இதில் என்ன சிரமம் என்றால், அடுத்த பதிவை இன்னும் நல்லாப் போடணுமேங்கறதுதான்... யான் பெற்ற துன்பம் நீங்களும் பெற வாழ்த்துகள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வைரமுத்துவின் அந்த கவிதையை நானும் படித்திருக்கிறேன். உங்கள் மனமார்ந்த கருத்து மகிழ்ச்சியும் ஊக்கமும் தருகிறது, உளமார்ந்த நன்றி ஐயா! அடுத்தப் பதிவுகளை என்னால் முடிந்த அளவு நன்றாகப் போடுகிறேன்..அந்தக் கோணத்தில் சிந்திக்கவே இல்லையே...குறிப்பிட்டதற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  13. ஆஹா அருமைம்மா.மரம் மரம்தான் மறந்தான் மனிதன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..உங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றி!

      நீக்கு
  14. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது மரத்திற்கு மட்டும் அல்லாது மரங்களுக்கும் பொருந்தும் என்று அழகாக எடுத்துரைத்திருக்கிறாய் தோழி! வாழ்த்துகள்! அருமையான கவிதை!!

    பதிலளிநீக்கு
  15. மரம்
    புவியின்
    வரம்
    என்பதை பதியனிட்ட கவிதை... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிமுகப்படுத்தியதற்கும் எனக்குத் தெரிவித்தமைக்கும் உளமார்ந்த நன்றிங்க மஞ்சுபாஷினி!

      நீக்கு
  17. வணக்கம

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...