ஐங்குறுநூறு 19 - மழை நனைந்த மலராய்

பாடல் தலைவியின் கண், மழை நனைந்த மலர்களைப் போல குளிர்நீர் உகுக்கிறது என்கிறாளே...ஏன் என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்...

ஐங்குறுநூறு 19, பாடியவர் ஓரம்போகியார் 
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம் மணங்க் கமழும் தண் பொழில்
வேழ வெண் பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண் பனி உகுமே"


எளிய உரை: மணற்குன்றில் நிற்கும் மாமரத்தின் புதிய பெரிய கிளை காதலரின் மணம் கொண்டிருக்கும். நாணலின் வெண்மையான மலர்கள் அக்கிளையில் உரசும் குளிர்ந்த சோலையை உடைய ஊரைச் சேர்ந்தவன் ஆதலால் கலங்கி மழைக்கால மலர்கள் போல கண் குளிர்ந்த கண்ணீர் உகுக்குமே.

விளக்கம்: மாமரத்தின் புதிய நீண்ட கிளைகளில் நாணலின் வெண்மையான மலர்கள் உரசுவது போலத் தலைவனும் பிற மகளிரை நாடிச் சென்று விடுவானோ என்று கலங்கி மழையில் நனைந்த மலர்களைப்போல குளிர்ந்த கண்ணீரை கண்கள் வடிப்பதாகத் தலைவி கூறுகிறாள். நாணல் பரத்தமைக்கு ஒப்பாக ஐந்குறுநூற்று வேழம் பத்து என அழைக்கப்படும் பதினொன்று முதல் இருபது வரையிலான பாடல்களில் அமைந்துள்ளது.

சொற்பொருள்: எக்கர் மாஅத்து - மணற்குன்றில் வளர்ந்த மாமரத்து, புதுப் பூம் பெருஞ்சினை - புது மொட்டுகளை உடைய நீண்ட கிளை, புணர்ந்தோர் மெய்ம் மணங்க - இணைந்த  காதலரின் மெய் மணம் கமழ, தண் பொழில் - குளிர்ந்த சோலை, வேழ வெண்பூ - நாணலின் வெண்மையான மலர், வெள்ளுகை சீக்கும் - உரசும், ஊரன் ஆகலின் கலங்கி - ஊரைச்சேர்ந்தவன் ஆதலால் கலங்கி, மாரி மலரின் - மழையில் நனைந்த மலர் போல, கண் பனி உகுமே - கண் குளிர்ந்த நீரை உகுக்குமே

என் பாடல்:
இணைந்த காதலரின் மணம் கமழும்
புதுமலர் பூத்த நீண்ட மாமரக்கிளைமீது
உரசும் நாணலின் வெண்மலர்கள் கொண்ட
ஊரன் ஆதலால் கலங்கி என் கண்
மழை நனைந்த மலராய் 
குளிர் நீர் உகுக்குமே

25 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி
    இலக்கியப்பாடலுக்கு... சிறப்பான விளக்கமும் எளிமையான உரையும்... அரும்பத சொற்களும் நன்றாக உள்ளது.. தொடர எனது வாழ்த்துக்கள்....த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அறிவுமதியின் தங்க தமிழ் போல் உங்கள் முயற்சியும்
    வெல்லட்டும் தோழி.செறிவான நடை ,எளிய மொழி அழகு கவிதை வாழ்த்துக்கள் கிரேஸ் !

    பதிலளிநீக்கு
  3. அறியாத பாடலை அறிய செய்த சகோ ''வுக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  4. மனம் இனிக்கச்செய்யும் அருமையான சங்கப் பாடல்..
    தேன் கலந்த தெள்ளமுதாய் அதற்கான விளக்கம்..
    மிகவும் அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு
  5. மனதில் தோன்றிய சிறு கலக்கத்தை எவ்வளவு அருமையாக சொல்லி உள்ளார்கள்... விளக்கமும், சொற்பொருள் விளக்கமும் மிகவும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இயற்கையில் யதார்த்தமாய் நிகழும் நிகழ்ச்சிகளில் பொருளை ஏற்றி அழகாகப் பாடியுள்ளார்கள்.
      உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  6. The red letters give shock...
    blue lines gave me back my breath ..
    good job...
    keep it up

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சரோஜா!

      நீக்கு
  7. பல புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன். சூப்பர் கிரேஸ். தொடர்ந்து கலக்குங்க

    பதிலளிநீக்கு
  8. என்னே கற்பனை அழகு அழகு பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. அழகிய கவிதை ! எளிய நடையில் பொருளும் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  10. தலைவியின் கண்ணீர் மாரிக்கால மலரை ஒத்ததாமே... என்னவொரு உவமை நயம்! அழகு. பகிர்வுக்கு நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதமஞ்சரி, எவ்வளவு அழகா இருக்கு..
      கருத்துரைக்கு நன்றி தோழி!

      நீக்கு
  11. நல்ல விளக்கம், அழகான உரை, அதைவிட அழகான தலைப்பு. அருமை சகோதரி. தொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம். (சுஜாதாவின் புறநானூறு புது உரை பார்த்தீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா! பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி!
      இல்லை ஐயா, சுஜாதா அவர்களின் புறநானூறு உரை இன்னும் பார்க்கவில்லை. கண்டிப்பாகப் பார்க்கிறேன். நன்றி!

      நீக்கு
  12. தலைவியின் கண்களை மலராகவும், அவளது கண்ணீர் துளிகளை மலரில் வடியும் மழை நீராகவும் உருவகப் படித்தியுள்ள பாடலை விளக்கஉரையுடன் வார்ப்பிலக்கியமாக வடித்துள்ளது சிறப்பு...

    பாராட்டுகள் அக்கா....

    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...