ஆழி சேர்ந்திடுவேனோ - நீரின் ஏக்கம்


அடர்ந்த முகிலின் அழுத்தம் மிகுந்து
அருமை மழையென நிலம் விழுந்து
அருவியாய் உயர் மலையில் பிறந்து
ஆறாய் மேடு பள்ளங்களில் விரைந்து
அழகாய் வளம்சேர்த்து துள்ளல் நிறைந்து
ஆழி சேர்ந்திடுவேன் மனம் மகிழ்ந்து

அருமை மக்களே கேட்பீர் செவிதிறந்து
அகற்ற வேண்டிய பொருள் நிறைந்து
அழியா நெகிழி(பிளாஸ்டிக்)  எங்கும் மிகுந்து
ஆபத்து உண்டே இடையில் மறைந்து  
அறிந்தும் அறியாமலும் என்வழித் தூர்ந்து
ஆழி சேர்ந்திடுவேனோ மனம் மகிழ்ந்து

23 கருத்துகள்:

  1. சமூக சிந்தனையுடன் கூடிய அருமை கவி... சூப்பர் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை தோழி. வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  3. நீரின் ஏக்கவரிகள் நம்முடைய மடமையை எண்ணி நாணச்செய்கின்றன. ஒவ்வொருவரும் தன்னாலான வரையில் தங்களை மாற்றிக்கொண்டாலே போதும். இயற்கை பாதுகாக்கப்படும். உணர்ந்து திருந்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள சொல்வது சரிதான் கீதமஞ்சரி..ஒவ்வொருவரும் தன் பங்கைச் செய்தால் அனைத்தும் வளமாகும்.
      நன்றி தோழி!

      நீக்கு
  4. வணக்கம்
    சிறப்பான விழிப்புணர்வு கவிதை ... தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்! கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. அழகான அருமையாக சொன்னீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. நீரின்றி அமையாது உலகு என்பதை என்று உணர்ந்து கொள்ளும் உலகு
    அருமையான சமூக சிந்தனை!

    பதிலளிநீக்கு
  8. நாம் (மக்கள்) மாறாத வரை நீரின் ஏக்கத்தைப் போக்க முடியாது! அருமையாக எழுதியிருக்கிறாய் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல சிந்தனை...

    கவிதை மிக நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...