பாவேந்தருக்கு மணிமண்டபம்

படம்: நன்றி இணையம்

"நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!
மாம் பழம் அடடா! மாம் பழம்
வாய்க் கினிக்கும் தமிழ் மொழி!
தீம்பால் செந்தேன் தமிழ் மொழி!
செங்க ரும்பே தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!

நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!
காம்பில் மணக்கும் மல்லிகை
காதில் மணக்கும் தமிழ் மொழி!
வேம்பா நஞ்சா தமிழ்மொழி?
விரும்பிக் கற்பது தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!"


தமிழ்மொழி தமிழ்நாடு 
என்றே இக்கவி படைத்த
பாவேந்தரே பாரதிதாசனே
நின் புகழ் மேலும் சிறக்க
நின் பாடல் பலரும் அறிய
நின்னையும் தமிழையும் 
நிறைவாய் உலகம் போற்ற சென்னையில்
நிறுவிட வேண்டுமே மணிமண்டபம்
நினைக்க வேண்டுமே அரசும் 
நின் நூற்றி இருபதாவது நினைவாண்டில்(2015)
நிறைவேறட்டுமே இந்த விருப்பமே!

நம் மொழியை நம் கவிஞரை 
நம் சிறப்பை நம் பெருமையை
நாம் போற்றாமல் யார் போற்றுவார்? 
நாம் பரப்பாமல் யார் பரப்புவார்?
நாமனைவரும் இணைந்திடுவோம்
நாடாள்வோருக்குச் சொல்லிடுவோம்

பாவேந்தரின் திருப்புதல்வரைச் சந்தித்த கரந்தை தமிழ்ச்சங்கப் பேராசிரியரின் அருமையான பதிவை இங்கே சென்று பாருங்கள்! நன்றி!

21 கருத்துகள்:

  1. கண்டிப்பாக மணிமண்டபம் நிறுவிட வேண்டும்...

    இனிய நண்பருக்கு சிறப்பு சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அருமை... உயர்ந்த நோக்கத்துடன் கூடிய பதிவு.. வாழ்த்துகள் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  3. எந்த ஊரில் மணிமண்டபம் அமையவேண்டும் என்பதைச் சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை என்று நினைத்தே எழுதினேன் ஐயா..சேர்த்துவிடுகிறேன். நன்றி.

      நீக்கு

  4. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    பாவேந்தா் பாடிய பைந்தமிழை எந்நாளும்
    நாவேந்தி நின்றால் நலம்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  5. தங்களின் கருத்திற்கும், இணைப்பிற்கும் நன்றி சகோதரியாரே
    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    சிறப்பான அறைகூவல் கவிதை நன்று... அனைவரின் விருப்பமும் அதுவே....வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. அண்மைய செய்தி ஒன்று கேள்விப்பட்டீர்களா. ? செவாலியர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் ஒரு சிலை எழுப்பி இருந்தார்கள். இப்போது அதனை அகற்ற நீதிமன்ற உத்தரவு. இப்படி சிலையெழுப்பி அகற்றுவதைவிட மக்கள் உள்ளத்தில் அவர்கள் உறைவதேசிறந்தது என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா. நீங்கள சொல்வது சரியானாலும், பாவேந்தருக்கு ஒரு மணிமண்டபம் வைத்து அதன்மூலம் பல நல்ல புத்தகங்களையும் தமிழையும் அனைவரும் அறியத் தருவது நம் கடமைதானே..வருங்கால சந்ததியினர் அறியாமல் போய் விடுவார்களே..அதற்காக நினைவிடம் அமைப்பது தேவை தானே?

    பதிலளிநீக்கு
  9. இதை ஏன் இன்னமும் செய்யாமல் இருந்தார்கள் என்பது பெரிய கேள்வி ..
    இந்த அரசிடம் எதிர்பார்க்க இயலாது

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான கவிதை தோழி...

    காம்பில் மணக்கும் மல்லிகை
    காதில் மணக்கும் தமிழ் மொழி!

    மிகவும் பிடித்த வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெற்றிவேல். ஆமாம் நானும் அவ்வரிகளை மிகவே ரசித்தேன்.

      நீக்கு
  11. நானும் இணைந்தேன் இந்த வேண்டுகோளில் ,

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி ஐயா. நடக்கும் என்றே நம்புவோம்.

      நீக்கு
  13. என் வேண்டு கோளும் அதுவே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...