என் தாலாட்டு

என்னுடைய முதல் மகன் பிறந்த பொழுது (நவம்பர் 2004 ), வீடு சென்றதிலிருந்து நிறைய பாட்டு பாடுவேன். அவனுடன் நிறையப் பேசுவேன். அப்பொழுது நானாக, என் சொந்த வார்த்தைகளால் தமிழில் அவனைக்  கொஞ்சி பாடிய தாலாட்டுப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன். எண்ணற்ற முறை பாடி அவனுக்கே இப்பாடல் நன்றாக தெரியும். 
பிறகு என் இரண்டாவது மகனுக்கும் இதைப் பாடியிருக்கிறேன், பெயரை மட்டும் மாற்றி... :-)
ஆழ் கடல் முத்தே
நீல் வான நிலவே
சோலை மலர் மணமே
மலைத்தேன் சுவையே
கானமயில் நடமே
கூவும் குயில் இசையே
வீசும் தென்றல் காற்றே
என் இதயத் துடிப்பே
என் செல்ல மகனே ....Haaaanikuttyyy .... :-)
இதைப் பாடினால் Hani முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அவன் கண்களில் தெரியும் பிரகாசிப்பையும் பார்க்க அவ்வளவு இனிமையாய் இருக்கும். :-)

என்னுடைய நண்பர்கள் சிலரும் அவர்களின் குழந்தைகளுக்கு இப்பாடலை பாடியுள்ளனர் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

இதை என்னுடையஆங்கிலத் தளத்தில் இருந்து இறக்குமதிசெய்து வெளியிடாமல் வைத்திருந்தேன், என்ன காரணத்தினாலோ. நேற்று பொங்கல் சிறப்பு நீயா நானா பார்த்தேன். அதில் தாலாட்டுப் பாடல்கள் பற்றி கோபிநாத் கேட்டபொழுது அட, நான் அங்கு இல்லையே என்று நினைத்தேன். ;-)
அதனால் என்ன, என்னுடைய தாலாட்டுப் பாடல் இங்கே உங்களுக்காக...

என் மற்றொரு தாலாட்டுப் பாடல்.

32 கருத்துகள்:

  1. :-) , thanks a lot Dhiyana :-)..nice to see such a quick comment .

    பதிலளிநீக்கு
  2. அழகான தாலாட்டு !! :-).
    "கானமயில் நடமே" - intha vari enaku romba pidachathu..normala use pannare 'நடனமே' use pannamae 'நடமே' use pannunathu super !! idha vari neeinga English'lai pola (may be athai vita) Tamilai'yum romba strong prove panniruchu :)

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    தாய் என்ற பெருமையை பறைசாத்தியுள்ளிர்கள் இன்னும் பல பாடல்கள் இயற்றி பாட எனது வாழ்த்துக்கள் தாலட்டு அருமை சகோதரி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்!
      உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. :) கோபிநாத் அவர்களுக்கு உங்க 'ப்ளாக்' மூலம் பதில் சொல்லிட்டிங்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அவரு எங்க என் ப்ளாக் பாக்கப் போறாரு..வலைத்தள நண்பர்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி!

      நீக்கு
  6. அருமையான தாலாட்டு பாடல். வாழ்த்துகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  7. அப்பாவின் தாலாட்டு பாடலை கேக்க இதோ அங்கு செல்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போய் தாலாட்டு கேட்டு நல்லா இளைப்பாறிவிட்டு புத்துணர்ச்சியுடன் வாருங்கள் சகோதரி!
      நன்றி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. மனமார்ந்த கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
  9. குடுத்து வாய்த்த பையன்...
    நல்லாருக்கு

    ஏன் பாடி பாட் காஸ்ட் செய்திருக்கலாம் நாங்களும் கேட்டிருப்போம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மது.
      பாடியிருக்கலாம், கேட்டுருப்பீங்க..அதுக்கு அப்புறம் என்ன ஆவிங்களோனு ஒரு பயம் தான்.. :)

      நீக்கு
  10. இனிமையான தாலாட்டு அழகாக இருக்குங்க தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சசிகலா..சிறு இடைவெளிக்குப் பிறகு நீங்கள் வந்தது மிகுந்த மகிழ்ச்சி!
      உங்கள் கருத்துரைக்கு நன்றி தோழி!

      நீக்கு
  11. இப்படித்தான் நான் பேரனுக்கு படுகிறேன்.
    சிறுவர் பாடல் தலைப்பின் கீழும்,
    வெற்றி எனும் தலைப்பின் கீழும் பதிகிறேன்.
    இனிய வாழ்த்துகள் கிரேஸ்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்விற்கு நன்றி கோவைக்கவி அவர்களே, பார்க்கிறேன்.
      கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  12. தாலாட்டு இனித்தது! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. குழந்தைக்கு தாலாட்டு மறக்க முடியாத ஒன்று .அம்மாவிற்கும் தான் .அருமை தோழி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அற்புதமான தாலாட்டுப் பாடல்
    படித்து மிகவும் ரசித்தேன்
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி ரமணி ஐயா!

      நீக்கு
  15. குட்டி Hani கொடுத்துவைத்தவன் !
    எவ்வளவு அருமையான தாலாட்டு !!
    செழுமையான தமிழ் ,வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி மைதிலி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...