Thursday, January 30, 2014

காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை

இன்று நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினம். துப்பாக்கிக் குண்டுக்குப்  பலியாகி உயிர்துறந்த காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நம் தேசத்திற்காக உயிர் துறந்த தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்து
மரியாதை செலுத்தவேண்டியது நமது கடமை.

பள்ளியில் படிக்கும்பொழுது பதினொரு மணிக்கு ஒரு மணி அடித்து அனைவரும் எழுந்துநின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்வோம். இப்பொழுது செய்கிறார்களா என்று தெரியவில்லை, மாலையில் பிள்ளைகள் வந்தவுடன் கேட்கவேண்டும். ஆனால் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வானொலியில் ஒரு செய்தியும் இல்லை, அஞ்சலி செய்வார்கள்  என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்.

இந்த நாளில் மதுரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தில் எடுத்த சில படங்களைப் பகிர்கிறேன்.
காந்தி நினைவு அருங்காட்சியகம்,மதுரை

காந்தி நினைவு அருங்காட்சியகம் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களால் ஏப்ரல் 15, 1959ல் திறந்துவைக்கப்பட்டது. ராணி மங்கம்மாள் அவர்களின் அரண்மனை வளாகம் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டது. இங்கு மகாத்மா காந்தி எழுதிய சில கடிதங்கள், முக்கியத்துவம் வாய்ந்த சில புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய சில பொருட்கள் அல்லது அவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.


காந்தியின் பதினொரு விரதங்கள்
உப்புச் சத்தியாகிரக வழி

காந்தி மதுரைக்கு வருகைதந்த தினங்கள்

காந்தி நினைவிடங்கள் உள்ள இடங்கள்


காந்தி அணிந்திருந்த துணி, இரத்தக்கறையுடன்
காந்தி சுட்டுக்கொல்லப் பட்டபொழுது அணிந்திருந்தாகச் சொல்லப்படும் இரத்தக்கரை படிந்த துணி கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இது காந்தி அணிந்திருந்த துணியின் மாதிரி என்றும் சிலர் சொல்கின்றனர். எப்படியோ, அந்த இடத்தில் நின்றபொழுது புல்லரித்தது. மெளனமாக அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்.


அட்லாண்டாவில் உள்ள மார்டின் லூதர் கிங் நினைவிடத்தில் உள்ள படம்
காந்தி குடில் என்று அவர் வாழ்ந்த ஆசிரமத்தின் மாதிரியாக அமைத்துள்ளனர்.  காந்தி அருங்காட்சியகம் அமைதியான சூழலில் அவரின் நினைவைத் தாங்கி நிற்கிறது.
இங்கு மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் யோகா, ஓவியம் வரைதல் போன்ற பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

காந்தி அருங்காட்சியகத்தின் இணைய முகவரி இதோ.


மதுரைக்குச் செல்லும்பொழுது மறக்காமல் காந்தி நினைவு அருங்காட்சியகம் சென்று பாருங்கள். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்குப்  பின்புறம் செல்லும் சாலையில் (தமுக்கத்திற்குப் பின்பாகவும்), ராஜாஜி பூங்காவிற்கு எதிரில் அமைந்துள்ளது.

24 comments:

 1. பலமுறை சென்றதுண்டு... இன்றைக்கு பகிர்ந்து கொண்டது சிறப்பு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.தனபாலன்.

   Delete
  2. தகவலுக்கு நன்றி கிரேஸ்! மதுரை செல்லும்போது அவசியம் பார்க்க வேண்டும்!

   Delete
  3. மகிழ்ச்சிம்மா, ஆமாம் கட்டாயம் சென்று பாருங்ககள்.. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 2. இதுவரை சென்றதில்லை. அடுத்த முறை மதுரை போகும்போது போட்டு வரேன். மௌனச்சாட்சிகள் பகுதிக்கு ஒரு பதிவை தேத்த ஐடியா கொடுத்திட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா போயிட்டுவாங்க ராஜி. ஆமாம், நானே உங்ககிட்ட சொல்லலாம்னு நெனச்சேன், அருமையா எழுதுறீங்க. அப்படியே திருமலை நாயக்கர் மகாலையும் பார்த்து எழுதிடுங்க :)
   நன்றி ராஜி!

   Delete
 3. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது
  தங்கள் பதிவைப் பார்த்ததும்
  நிச்சயம் போக முடிவெடுத்துள்ளேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி ரமணி ஐயா.
   கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

   Delete
 4. படிக்கும் காலத்தில் பதினோறு மணி அஞ்சலி செலுத்தியதுண்டு! இன்று பரபரப்பாக பயணத்தில் அமைந்தது பதினோறு மணி! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..ஆனால் எங்கிருந்தாலும் பதினொரு மணிக்கு எனக்கு நினைவு வந்துவிடும்..பள்ளியில் பலவருடம் பழகியதாலோ என்னவோ..
   வருகைக்கு நன்றி சுரேஷ்!

   Delete
 5. படங்களுடன் கூடிய நல்லதொரு பதிவு :)

  ReplyDelete
 6. ரத்தக்கறையுடன் கூடிய காந்திஜி அணிந்திருந்த துணி படத்தில் பார்க்கும்போதே புல்லரிக்கிறது.....

  ReplyDelete
  Replies
  1. புரிகிறது...
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்கூல் பையன்!

   Delete
 7. நேரம் பார்த்து நச் என்று ஒரு பதிவு ...
  குழந்தைகளை அவசியம் அழைத்து செல்லவேண்டிய முக்கியமான இடம்...
  பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மது!

   Delete
 8. காமராஜ் பல்கலைக்கழகத்தில் பி.எ படிக்கும் போது கிளாஸ் கட்டடித்து விட்டு சுற்றி பார்த்த இடம் ..ஞாபகம் வருதே ,ஞாபகம் வருதே .................

  ReplyDelete
  Replies
  1. ஓ..நீங்கள் காமராஜ் பல்கலைக்கழகத்தில் படித்தீர்களா? கிளாஸ் கட்டடித்து காந்தி அருங்காட்சியகம் :) கலக்கிட்டீங்க தோழி :)

   Delete
 9. அருமையான பதிவு கிரேஸ்!!

  பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த முறை மதுரை செல்லும் பொழுது, கண்டிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. தீக்ஷுவிற்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..
   நன்றி தியானா !

   Delete
 10. தில்லியில் இருக்கும் காந்தி நினைவிடங்களுக்குச் சென்றதுண்டு. மதுரை நினைவிடத்திற்குச் சென்றதில்லை. முடிந்தால் பார்க்கிறேன்.

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட்!

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...