இருப்பதும் இல்லாததும்

தொலைவில் பார்த்தேன் ஒற்றை நட்சத்திரம்
தொலைநோக்கியில் பார்த்தால் கூட்டமாய்
இல்லை என்றே எண்ணுவது
இல்லை உண்மை, அறிவீரே
வெறுமை என்று நினைப்பதும்
நிறைவளியாய் இருக்கலாம் உணர்வீரே

இருப்பதாய்த் தோன்றும் வானம்
இருப்பதில்லைத் தொடவேப் போனால்
உண்டு என்று உள்ளுவதும்
உண்மை இல்லை, அறிவீரே
நிறைவு என்று நினைப்பதும்
வெறுவெளியாய் இருக்கலாம் உணர்வீரே

இருப்பதும் இல்லாததும் தோற்றமயக்கம்
இரண்டிலும் மகிழ்வதே வாழ்க்கைப்பாடம்


உள்ளுவதும் - நினைப்பதும்
வெறுவெளி - வெறுமை
வளி - காற்று 

தெளிவான வானத்தில் ஒரு நட்சத்திரம் தெரிந்தது. தொலைநோக்கியில் அதனைக் குவிமையமாய்  (focus) வைத்துப்  பார்த்தால் கூட்டமாய்  நட்சத்திரங்கள். அப்பொழுது எனக்குத் தோன்றியதே இக்கவிதையாய்  உருவெடுத்தது. தத்துவமாய் போரடிக்கவில்லை என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன். :)

21 கருத்துகள்:

  1. வணக்கம்

    இருப்பதும் இல்லாததும் தோற்றமயக்கம்
    இரண்டிலும் மகிழ்வதே வாழ்க்கைப்பாடம்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்!
      உங்கள் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  2. வாழ்க்கைப்பாடம் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சகோதரிக்கு வணக்கம்..
    இருக்கு ஆனா இல்லை பாணி. கண்டு ரசித்தவற்றை அழகாக கவியில் காட்சியாய் தந்த விதம் மிகவும் கவர்கிறது . தங்கள் ரசிப்புக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அழகான கவிதை வரிகளைப் பகிர்ந்தமைக்கு எனது நன்றிகள். தொடருங்கள் சகோதரி ரசிக்க காத்திருக்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ!
      அதேதான் :)
      உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  4. அருமை கிரேஸ்.. வாழ்க்கைப் பாடத்தை எளிதாக விளக்கிவிட்டாய்..

    பதிலளிநீக்கு
  5. எப்படி கிரேஸ்.. இப்படி எல்லாம்.. கலக்குரிங்க போங்க :).. அசத்தல் !!

    பதிலளிநீக்கு
  6. ''..இருப்பதும் இல்லாததும் தோற்றமயக்கம்
    இரண்டிலும் மகிழ்வதே வாழ்க்கைப்பாடம் ...''
    Sure...
    good .
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  7. கடைசி இரண்டு வரிகள்தான் கவிதையே...இரண்டு வரிகளும் இனிமை..

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கைப் பாடம் வசீகரிக்கிறது. அறிவியலைக் கொண்டு ஒரு அழகிய வாழ்வியல் கவிதை. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...