தீபாவளி நல் வாழ்த்துகள்!


குடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து
கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து
அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து 
ஒன்றாய் வாசலில் பல வண்ணக் கோலம் வரைந்து
குளித்து அலங்கரித்து மதுரை மல்லி சூடி 
வாழ்த்துகள் பரிமாறிப் பலகாரம் உண்டு
மத்தாப்பும் பூச்சாடியும் வைத்து மகிழ்ந்து 
தொலைபேசிக்கு ஓய்வு கொடுக்காமல் 
அனைவருக்கும் அழைத்து வாழ்த்துச் சொல்லி 
அன்பானவர்களின் இனிய விருந்துடன் உள்ளம் மகிழ்ந்து
இன்று பல ஊர்களில் வாழும் அண்டைத்
தோழிகள் வீடு வீடாய் குழு பெயர்ந்து 
தொலைக்காட்சியில் பட்டிமன்றமும் புதுப் பாடல்களும் பார்த்து
உருட்டிய லட்டையும் முறுக்கிய முறுக்கையும் நொறுக்கி 
உடைகளையும் நிகழ்ச்சிகளையும் விமர்சனம் செய்து 
இனிமையாகக் கழிந்த தீபாவளித் தினங்களின்
இனிய நினைவுகளுடன்
......
தீபாவளி நல் வாழ்த்துகள்!


வாழ்த்து அட்டையில் உள்ள இந்தப் படம்  என் சிறிய மகன் இரண்டரை வயதாய் இருந்தபொழுது
நானும் அவனும் செய்தது. நடுவில் ஒரு இலை வைத்துச் சுற்றிலும் பல்துலக்கும் தூரிகையால் வண்ணக்கலவையைத் தெளித்துச் செய்தது.




33 கருத்துகள்:

  1. வாழ்த்து அட்டை மிகவும் அருமை... செல்லத்திற்கு பாராட்டுக்கள்...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு.தனபாலன்! அவனிடம் சொல்லிவிடுகிறேன்.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சரவணன்.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  3. தெருவில் யார் முதலில் பாட்டாசு கொளுத்துவார்கள் என்று நண்பர்களிடம் போட்டி போட்டு கொண்டு வெடித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது

    மலரும் நினைவுகள்.!!..அழகாக சொல்லி இருக்கீங்க கிரேஸ் ...

    தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? நன்றி ஸ்ரீனி!
      உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும் இனியத் தலை தீபாவளி வாழ்த்துகள்! :)

      நீக்கு
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    நல்ல கவிதை....

    இப்போ உங்க பையன் என்ன படிக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெற்றிவேல்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
      இப்போ அவனுக்கு ஐந்து வயது, LKG படிக்கிறான்.

      நீக்கு
  5. அருமையான கவிதை. பல நினைவுகளை உள்ளத்தில் மலரச் செய்கிறது தங்களது கவிதை.

    தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தோழி !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி உஷா!
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  7. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    //நானும் அவனும் செய்தது.//
    I imagined differently.


    சுப்பு தாத்தா.
    subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் சுப்புத் தாத்தா!
      ஓ..நானும் என் கணவரும் என்று நினைத்துவிட்டீர்களோ... :)

      நீக்கு
  8. சிறிய வயதில் அதிகமாக எங்கள் வீட்டில் பட்டாசு வாங்கிக் கொடுக்க மாட்டார்கள்...விவரம் தெரியாத அந்த வயதில் பக்கத்துவீட்டுப் பிள்ளைகளைப் பார்த்து மனம் ஏங்கிதுண்டு...ஆனால் சுற்றுச்சூழலின் மீது ஆர்வம் ஏற்பட்ட பிறகு பணமிருந்தும் பட்டாசு வாங்க மறுக்கிறது மனம்..சத்தமில்லா சுத்தமான தீபாவளி கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள் தோழி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சுற்றுச்சூழல் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன் கலியபெருமாள்!
      சூழல் மாசுபடுத்தும் காரணத்தினாலும் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பிள்ளைகளின் துன்பம் தாங்கமுடியாமலும் நாங்களும் பட்டாசு வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்!
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  9. அழகான அட்டைப் படம்.
    மகனுக்கு ஒரு கைத்தட்டல்.
    கொண்டாடி மகிழ்வோம்.
    தீபாவளி வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரவாணி! உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  10. குழந்தையின் வரை ஓவியம் அழகோ அழகு...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேந்திரன்! அவனிடம் சொல்லிவிடுகிறேன்.
      வாழ்த்திற்கு நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோதரரே!

      நீக்கு
  11. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க ஜெயக்குமார்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி இனிய வாழ்த்துகள்!

      நீக்கு
  12. அழகான அட்டை! அசத்துகிறான் உங்கள் மகன்!

    குட்டிக்கு அன்பு முத்தங்கள்!

    உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

    உங்களும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி!

      கதவிடுக்கில் விரலை நசுக்கி நன்றாக இரத்தம் கட்டியிருக்கிறது அவனுக்கு.. அழுத அழுகை இருக்கே.. :(



      நீக்கு
  13. வாழ்த்து அட்டை வரைந்தவருக்கு என் இனிய பாராட்டுக்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. முதலில் வாழ்த்து அட்டைக்கே எனது பாராட்டுக்கள். நல்லதொரு படைப்பாற்றல் சகோ. தொடரவும்.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி பாண்டியன். கண்டிப்பாகத் தொடர்கிறேன்.
      வாழ்த்திற்கும் நன்றி!
      உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு

  15. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவிஞர் பாரதிதாசன் அவர்களே!
      உங்கள் வாழ்த்துக் கவிதை அருமை! நன்றி!

      நீக்கு
  16. அன்புள்ள கிரேஸ்...

    வணக்கம்.

    எதார்த்தமான கவிதை.

    பிடித்த வரிகள். ரசனை.

    உருட்டிய லட்டையும் முறுக்கிய முறுக்கையும் நொறுக்கி

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் தோழி.அருமையான வாழ்த்து அட்டை.மனம் நிறையும் நினைவுகள்.வாழ்த்துக்கள்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  18. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹரணி அவர்களே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...