இங்கேயுமா கள்ளநோட்டு?

எங்கேயும் களவு
அயர்ச்சி!

இங்கேயுமா?
அதிர்ச்சி!

அனுபவத்தைப் பகிர்கிறேன்
அலுக்காமல் கேட்பீர்

அறிந்து கொள்வீர்
அறிந்தவரிடம் பகிர்வீர்

தானியக்க வங்கி இயந்திரம் (ATM)
தானாய் பண நோட்டைத் தள்ளும்

தருமோ கள்ளநோட்டு?
தருகிறதேப்  புரட்டுநோட்டு!

அங்கேயே சரிபார்ப்பீர்
அல்லலைத்  தவிர்ப்பீர்

கள்ளநோட்டு கண்டால்
பாதுகாவலரிடம் தெரிவிப்பீர்

வங்கிக்குச் சென்று  உரைப்பீர்
மாற்றுநோட்டு வாங்கிக்கொள்வீர்

எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினாலும், நண்பர்கள் மற்றும் கடைக்காரர்கள் மூலமாகவும்  பெங்களூரில் இது பரவலாக நடக்கிறது என்று கேள்விப்படுகிறேன். பிற நகரங்கள் பற்றித் தெரியவில்லை, ஆனாலும் எங்கும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வங்கிக்கு வரும் பணத்தைப் பரிசீலனை செய்தபிறகே வெளிச்சுற்றுக்கு விட வேண்டும் என்று ரிசெர்வ் வங்கியின் உத்தரவையும்  மேலும் சில தகவல்களையும் இந்த இணைப்பில் பாருங்கள்! அவை நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்று தெரியவில்லை.



34 கருத்துகள்:

  1. அவசரத்தில் பணம் தேவைப்படும் போது இது போல் நடந்தால் சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி திரு.தனபாலன்!
      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான்.

      நீக்கு
  2. இந்த அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டிரிஉக்கு. 500 கள்ளநோட்டு தாளை ஏடிஎம்ல எடுத்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  4. ஐயோ... பகீரென்றிருக்கிறது எனக்கு...:(

    இதற்கு யார் பொறுப்பு... கவனிக்க வேண்டியவர்களிடமே
    கவனக் குறைபாடா...
    தலை சுற்றுகிறது.

    அனைவரும் அவதானிக்க நல்ல பகிர்வு தோழி!

    நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதிர்ச்சிதான் தோழி எனக்கும்...
      உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி தோழி, நன்றி!

      நீக்கு
  5. கொடுமையிலும் கொடுமை...
    தங்கள் அனுபவத்தை அற்புத கவியாக படைக்கும் திறன் அபாரம் கிரேஸ்

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான்! ஏடிஎம் மையங்களில் கள்ளநோட்டு வருகிறது என்று நானும் கேள்விப்பட்டேன்! நாம்தான் உஷாராக இருந்துகொள்ளவேண்டும் போல! நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்கள் சொல்வது போல கவனமாகத் தான் இருக்க வேண்டும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேஷ்!

      நீக்கு
  7. எனக்கும் இந்த அனுபவம் உண்டு சகோதரியாரே.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...எங்கும் இருக்கிறது போல இப்பிரச்சினை!!!
      வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சகோதரரே!

      நீக்கு
  8. நல்ல எச்சரிக்கைப் பதிவு
    கடந்த பதினைந்து தினங்களாக
    பெங்களூரில்தான் உள்ளேன்
    எச்சரிக்கை பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரமணி ஐயா! அப்படியா..பணி நிமித்தமா?
      உங்கள் கருத்திற்கு நன்றி ஐயா!

      நீக்கு
  9. அதிர்ச்சி தரும் தகவல் தோழி.

    இனி கவனமாக இருத்தல் வேண்டும்.

    பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  10. ஏட்டிஎம்-களில் பணம் நிரப்பும் பணி, வெளியாரிடம் தரப்பட்டுள்ளதால் இதுபோன்ற நிகழ்வுகள் சிலநேரம் ஏற்பட்டிருக்கின்றன. உடனடியாக போலீசில் புகர் தருவது அவசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதுகாவலரிடம் காண்பித்துவிட்டு வங்கிக்குச் சென்று சொன்னால் போதாதா ஐயா? போலீசிடம் சொல்ல வேண்டுமா?
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  11. அதிர்ச்சியான சம்பவம். வங்கியை தொடர்பு கொண்டாயா? மாற்று பணம் கிடைத்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தியானா. இல்லை தியானா, நாங்கள் பணம் எடுத்துக் கொடுத்து ஒரு வாரம் கழித்து அந்த நபர் அழைத்துச் சொன்னதால் இப்பொழுது அணுக முடியுமா என்று யோசித்தோம். ஆனால் ஒருவர் இரு வாரங்கள் கழித்து மாற்றி வாங்கினாராம்...அதனால் முயற்சிக்கப் போகிறோம்.

      நீக்கு
  12. ATM லுமா கள்ள நோட்டு .ஆள் பீபுள் அலெர்ட் .கவிதை அருமை தோழி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..அங்கேயே என்றால் என்ன செய்வது....உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிவதனா!

      நீக்கு
  13. வணக்கம்
    இவை எல்லாம் சர்வ சாதரணமாகிவிட்டது... பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      வருந்தவேண்டியச் சூழல் தான்!
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி..
    அதிர்ச்சி தான் சகோதரி. தங்கள் பதிவு மற்றவர்கள் விழிப்போடு இருக்க உதவும். அனைவருக்கும் பயன்படும் பதிவு. இனி கவனமுடன் இருப்போம். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ!
      ஆமாம், கவனமுடம் இருப்போம்,..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      நீக்கு
  15. சத்தமாக சிர்க்கிறேன் என் குழந்தை என்னப்பா என்கிறாள்
    எப்படி சொல்லவென் ஏ.டி.எம் அதிர்ச்சியை ...

    நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வாழும் சமுதாயம் இபப்டி இருப்பதை எப்படி சொல்வது குழந்தைகளுக்கு? உங்கள் கருத்துரையை ரசித்தேன்.
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மது.

      நீக்கு
  16. இதுபோன்ற அனுபவத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..அந்தப் பணத்தை ஒரு வங்கியில் கட்டமுயன்ற போது இது கள்ளநோட்டு என்று கூறிவிட்டார்கள்..ஆனால் ஏடிஎம்முக்குரிய வங்கியில் சென்று கேட்டபோது அது நல்லநோட்டுதான் என்று கூறிவிட்டார்கள்

    பதிலளிநீக்கு
  17. பல இடங்களில் இது நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் ATM-ல் எடுத்த பணம் கள்ள நோட்டு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்கிறார்கள் பல வங்கிகளில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம் அப்படிக் கேட்டால் என்ன செய்வது...நாடு போகும் போக்கு..
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...