பள்ளி இருக்கே தள்ளி - குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் - 2

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஒரு அலசல், அவற்றைப் பகிர்தலின் மூலம் கிடைக்கும் வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் தீர்வுகள் - அதனை மனதில் கொண்டு பூந்தளிர் தளத்தில் துவங்கியதுதான் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர் பதிவுகள். அந்த வரிசையில்நான் எழுதியுள்ள பள்ளி இருக்கே தள்ளி  பதிவைப் படித்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி!

17 கருத்துகள்:

  1. நல்லதொரு கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் அரசாங்கப்பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை..பந்தா காட்டும் தனியார் பள்ளிகளுக்கே ஏன் எல்லோரும் முன்னுரிமை கொடுக்கிறீர்கள்..அரசுப்பள்ளிக்கும் ஆதரவு கொடுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கி.மீ. தொலைவில் எந்த அரசுப் பள்ளியும் இல்லை. மற்றொன்று இங்கு அரசுப் பள்ளியில் சேர்த்து கன்னட வழிக்கல்வி எப்படி முடியும்?
      பதிவைப் படித்து கருத்திட்டதற்கு நன்றி கலியபெருமாள்!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி.
    உடல்நலமின்மையால் தங்களது தளத்தை சரியாகத் தொடர முடியவில்லை.தங்கள் வேதனை கொஞ்ச நஞ்சமில்லை. மொழி தெரியாத நகரில் எத்தனை தடுமாற்றங்கள்! எனக்கும் அரசு பள்ளி பற்றிய எண்ணம் வந்தது. தங்களது பதிலுரை தெளிவு படுத்தி விட்டது. கல்வி நிறுவனங்கள் வியாபாரமயமாகி விட்டதன் விளைவே இது, கல்வி அலுவலர்கள் தலையிட்டு சேர்க்கை விதிகளை வகுத்து முறையாகக் கண்காணித்து அந்தந்த பகுதியின் மாணவர்களின் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். நல்ல கட்டுரைக்கு நன்றீங்க சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே! இப்பொழுது உடல்நலம் நன்றாய் ஆகிவிட்டதா?
      //கல்வி அலுவலர்கள் தலையிட்டு சேர்க்கை விதிகளை வகுத்து முறையாகக் கண்காணித்து அந்தந்த பகுதியின் மாணவர்களின் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்// உண்மைதான், இது நடந்தால் நல்லது, பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி பாண்டியன்!

      நீக்கு
  4. நல்லதொரு பகிர்வு கிரேஸ்!! நேரம் எடுத்து எழுதியதற்கு நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தியானா. இப்படி ஒரு முயற்சியை யோசித்து செயல்படுத்தும் உனக்குதான் நன்றியும் பாராட்டுகளும்!

      நீக்கு
  5. வணக்கம்
    தொடருகிறோம்...தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...

    என் பக்கம் கவிதையாக-உயிரில் பிரிந்த ஓவியமாய்...(புதிய பதிவாக).
    என்வலைத்தள முகவரி தெரியாவிட்டால் இதோ http://2008rupan.wordpress.com
    வாருங்கள்......அன்புடன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்! தொடர்வதற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி! உங்கள் தளம் பார்க்கிறேன். நன்றி!

      நீக்கு
  6. ஒவ்வொரு நிகழ்வையும் ரொம்ப தத்ரூபமா சொல்லி இருக்கீங்க .. ஆனால் இதற்கு தீர்வு தான் என்னனு தெரியல :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! அந்த அதன் பகுதி பிள்ளைகளை அந்தப் பகுதி பள்ளிகள் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். பிடிக்கவில்லையென்று தூரம் செல்பவர்கள் சென்று கொள்ளட்டும்..

      நீக்கு
  7. நல்ல பதிவு; தமிழ்மணம் பிளஸ் +1 vote!

    பதிலளிநீக்கு
  8. அவசியமான அருமையான பதிவு
    மிக மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    கவனிக்கவேண்டியவர்கள் கண்ணில் இப்பதிவு படட்டும்
    நல்லது நடக்கட்டும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...