பேசுவது தமிழா - 1

"தமிழுக்கும் அமுதென்று பேர்"...
தமிழுக்கு எதற்கு வடசொல்லில் பெயர்? ஆச்சரியமாக இருக்கிறதா?  இந்தப் பாடல் இயற்றிய கவிஞர் பாரதிதாசனை மிகவும் மதிக்கிறேன், எனக்குப் பிடித்த கவிஞரும் ஆவார். இந்தப் பாடலும் பிடித்தமானது தான். நான் இங்கு சொல்வது பாடலைப் பற்றி அல்ல, வடமொழிச் சொல் பற்றி மட்டுமே.
தமிழில் கலந்திருக்கும் வடமொழிச் சொற்கள் இன்று நேற்றல்ல, கடைச்சங்க காலத்தில் இருந்தே கலக்கத் தொடங்கிவிட்டன. தமிழ் மேல் உள்ள காதலால் இரண்டற இணைகின்றன வடமொழிச் சொற்கள் என்று கொள்ளலாமோ? அப்படிக் கலந்த வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையானத் தமிழ் சொற்களையும் பகிர்வதே என் நோக்கம்.

அமுது என்பது வடமொழியாம்
அதனிடத்தில் வருமாம்
அழகுத் தமிழ் சொற்கள்
அடிசில், இனிமை, சோறு


பேசுவது தமிழாவில் மீண்டும் பேசுகிறேன். அதுவரை அடிசில் உண்டு, இனிமையாக இருங்கள்.


40 கருத்துகள்:

  1. கிரேஸ் என்னும் சொல் ஆங்கிலம் . ஆம்.
    கிரேஸுக்குள்ளே ஓர் பெட்டகமாம்.
    அதனுள்ளே ஒரு புதையல் ஆம்.
    அதை திறந்துபார்த்தால் வியப்பாம்.

    ஆம்.
    கிரேஸ் என்னும் சொல்லுக்கு தமிழ் சொற்கள்:

    நயம் , பண்பு , கவர்ச்சிக்கூறு , இனிமைப் பண்பு , வனப்பு , அழகுக் கூறு , அணிநயம் , செயற்பாங்கு , செயல் வண்ணம் , அருள் , அருள்பாலிப்பு , அருட்பேறு , கடவுட்பேறு , அருட்கொடை , தெய்வ அருள், இறக்கம், தயவு , பரிவு , அருட்கனல்
    .

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சுப்புத்தாத்தா..உங்கள் ஆழமானக் கருத்திற்கு மிக்க நன்றி!
      ஆமாம், என்ன செய்வது என் முதல் பெயர் ஆங்கிலப் பெயர்..
      நயம் என்பது வடமொழி தாத்தா..நன்மை என்பதே தமிழ் :)
      என் பெயருக்குத் தமிழ் அர்த்தங்கள் எல்லாம் கொடுத்தமைக்கும் நன்றி தாத்தா!

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்னம் என்பது சரிதான்...ஆனால் ஏன் சோறு 'என்பதைவிட'... ? :)
      இரண்டு சொற்களும் நன்றாய்த் தான் உள்ளன.
      உன் கருத்திற்கு நன்றி கிருஷ்ணம்மாள்!

      நீக்கு
  3. தொடர்கிறேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் தொடர்வதற்கும் உளமார்ந்த நன்றி கோவைக்கவி அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. உங்கள் ஆர்வத்துக்கும் ஊக்கமளிக்கிறது சீனி..மிக்க நன்றி சீனி!
      மகிழ்ச்சியுடன் இன்னும் பல சொற்கள் அறியத்தருகிறேன்.

      நீக்கு
  5. அருமையான முயற்சி! நிறையத் தேடல்கள் செய்கிறீர்கள்..
    மிகவும் நன்றே! ஆவலுடன் நானும் வருகிறேன் தொடர்ந்து...

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊக்கமளிக்கும் கருத்திற்கு உளமார்ந்த நன்றி தோழி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. கண்டிப்பாகத் தொடர்கிறேன்...உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  7. நான் படித்துள்ளேன். இருதயம் என்பது வடசொல், இச் சொல்லை கவி பாரதி - இதயம் எனத் தமிழ்ப்படுத்தினாராம்.
    அதுபோல் அமிர்தம் எனும் வடசொல்லை அமுதம், அமுது எனத் தமிழ்ப் படுத்தினார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு நன்றி யோகன்.
      ஆமாம், இருதயம், இதயம் இரண்டுமே வடசொற்கள். நெஞ்சம், உள்ளம் என்று சொல்லலாம்..ஆனால் உறுப்புக்கு நெஞ்சம் எட்ன்று சொன்னால் சரியாய் இருக்குமா என்று தெரியவில்லை..நெஞ்சுப்பை என்றும் படித்தேன். வடமொழி சார்ந்து ஆனால் தமிழ் படுத்தியவற்றை தமிழ் என்றே கொள்ளலாமா என்றும் தெரியவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  8. /கடைச்சங்க காலத்தில் இருந்தே கலக்கத் தொடங்கிவிட்டன/
    மிக முக்கியமான வரிகள் கவிஞர் நன்மை...
    அப்போதுதான் தமிழனுக்கு சனி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது ...
    அனேகமாக அதற்கு முன்னால் .... இங்கு பல்வேறு மதங்கள் இருந்திருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் நன்மை என்பதைப் புரிந்துகொள்ள சில வினாடிகள் ஆனது.. :)
      முதலிரண்டு சங்க காலத்திலும் கலப்பில்லை...முற்காலத்தில் மதத்தை விட இயற்கையோடு ஒன்றி தான் வாழ்ந்திருக்கின்றனர்...
      உங்கள் கருத்துக்கு நன்றி மது!

      நீக்கு
  9. வணக்கம்
    தொடருங்கள் பணி சிறக்கட்டும்....வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்!
      மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும். கண்டிப்பாகத் தொடர்கிறேன்.

      நீக்கு
  10. தொடர்ந்து எழுது கிரேஸ்!! அறிந்து கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்!

    அமுதெனும் சொல்லும் அருமிதயச் சொல்லும்
    நமதுயிர் நற்றமிழ்ச் சொற்கள்! - இமையளவும்
    அச்சம் இலையென்பேன்! அந்தமிழ்ப் பற்றாளா!
    மெச்சும் புகழினை மேவு!

    மொழியறிஞா் ப. அருளியார் அவா்கள்
    அமுது, இதயம் தமிழென உரைப்பார்
    அவா் படைத்த அயற்சொல் அகராதியைக் கண்டு தெளிக!

    அமுது என்ற சொல்லுக்கு
    அடிசில், இனிமை, சோறு என்பன பொருத்தமான சொற்கள் அல்ல!

    அடிசில் - உணவு
    இனிமை - இனிக்கின்ற சுவை
    சோறு - அரிசி, கோதுமை, போன்ற தானியங்களில் சமைக்கும் உணவு

    அமுது என்பது பால் போன்று குடிக்கின்ற பொருள்

    ஆழ்வார்கள்
    பாயாசம் என்ற உணவைக் கண்ணமுது என்பா்

    பாவேந்தா் அவா்கள்
    தமிழுக்கும் அமுதென்று பேர்"...

    என்ற பாட்டின் பொருள்
    தமிழ் அமுதைப் போன்று சுவையுடையது

    அமுதைப் போன்றே தமிழும்
    நம்மை என்றும் இளமையுடன் இருக்கச்செய்யும்

    தமிழ்க்கு உழைத்தோர் நிலைத்த புகழுடன் வாழ்வார்

    தமிழ்க்கவிஞன் பாரதியும் செத்ததுண்டோ?
    பாவேந்தன் பாடிய கவிதை வழியாகவும்

    ஒன்றுமட்டும் உண்மையறி
    ஊற்றில் ஒருபாட்டெழுதும்
    செந்தமிழ் மாகவிக்கு மரணம் - அது
    வந்தபின்பு தான்பெருமை சனனம்
    என்று பாடிய கண்ணதாசன் கவிதை வழியாகவும் உணரலாம்.

    9 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் அவா்கள்
    வி்ஷ்ணு சித்தன் என்ற தன் பெயரை விட்டு சித்தன் என்றே
    தமிழாக்கம் செய்து தன் பாடல்களில் பாடுவார்!

    ஆழ்வா்கள் கொண்டிருந்த தமிழ்ப்பற்றை
    இன்றிருக்கும் அடியார்கள் கொள்ளாமல் இருப்பதும்
    தமிழா்கள் சற்றும் இல்லாமல் வாழ்வுதும்
    மிகக் கொடுமை! மிக மிகக் கொடுமை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!
      உங்கள் கருத்துரைக்கு முதலில் என் நன்றியைச் சொல்லிக்கொகிறேன்.

      அமுது, இதயம் இரண்டும் வடமொழி என்று சொல்கிறது தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளும் தமிழ்ப் பேராசிரியருமான நீலாம்பிகையம்மையார் அவர்கள் இயற்றிய வடமொழி அகர வரிசைச் சுருக்கம்.
      அமுது சங்க இலக்கியத்திலேயே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதயம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் இவையிரண்டும் வடமொழிச் சொற்களே.

      //அமுது என்ற சொல்லுக்கு
      அடிசில், இனிமை, சோறு என்பன பொருத்தமான சொற்கள் அல்ல! //
      அமுது என்பது நீங்கள் சொல்வது போல பால் போன்ற இனிய உணவைக் குறிப்பதாய் இருந்தாலும் அது இனிமையானது என்ற பொருளுடையதே. உணவு, இனிக்கும் சுவை உடையவை, சமைத்த அரிசி- இவற்றுக்கு அமுது என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அதன் இடத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும். அமுது என்னும் சொல் இனிமையைக் குறிப்பதே அல்லவா?
      பாரதியாரும் பாவேந்தரும் என்றும் வாழ்வார்கள் என்பது மகிழ்ச்சியான உண்மையே.

      வி்ஷ்ணு சித்தன் அவர்கள் பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா!

      ஆமாம், இன்று தமிழ்ப்பற்று இல்லாமல் இருப்போர் அதிகம் தான், அது மிகவே வருத்தத்தைத் தருகிறது.

      உங்களின் கருத்திற்கு மீண்டும் நன்றி ஐயா!

      நீக்கு
  12. இப்போதுள்ள பிரச்சினை, வடமொழிக் கலப்பு அல்ல. ஆங்கிலமொழிக் கலப்பே. அதை எப்படி நீக்கித் தமிழை மீண்டும் மக்கள் பேசும் மொழியாக ஆக்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். செத்த பாம்பை அடிப்பதில் தமிழர்களாகிய நாம் தான் முதலில் இருக்கிறோம். தெலுங்கு, கன்னட, மலையாள மொழியினர் இப்படியெல்லாம் நேரத்தை வீணாக்குவதில்லை. தம் மொழியில் புது இலக்கியம் படைப்பதன்மூலம் இருக்கின்ற வாசகர்களையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டுமே என்ற கவலையோடு செயல்படுகிறார்கள். அன்புகூர்ந்து தமிழை வாழவிடுவோம். ஆங்கிலமீடியம் படிக்கும் குழந்தைகள் எப்படித் தமிழைப் படிக்கப்போகிறார்கள் என்ற கவலை தான் இன்று முக்கியமானது. தமிழிலுள்ள பிறமொழிச்சொற்கள் அல்ல. ஆக்கபூர்வமான சிந்தனை உள்ள தங்களைப்போன்றவர்கள் இம்மாதிரி வெற்று விளையாட்டுக்களை விட்டு சுயசிந்தனைமிக்க புது இலக்கியம் படைக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!
      வடமொழி, ஆங்கிலம் இரண்டும் எவ்வளவு கலந்திருக்கின்றன என்பதை தமிழர் அனைவரும் உணர வேண்டும். வடமொழி கலப்பு எழுநூறு ஆண்டுகளாக நடந்துள்ளது. ஆங்கிலக் கலப்பு நடைபெறும் காலத்தில் நான் வாழ்கிறோம் என்பதாலேயே அது பெரிதாகத் தோன்றுகிறது நமக்கு.
      தூயத் தமிழ்ச் சொற்கள் இருக்க அவற்றை விடுத்துப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது எதற்கு?

      தமிழ் மொழி பற்றிப் பேசும்பொழுது செத்த பாம்பு என்றெல்லாம் நீங்கள் சொல்வது நன்றாக இல்லை ஐயா! பயன்படுத்தாத தூய தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்படுத்துவது செத்த பாம்பை அடிப்பது ஆகாது.

      நீங்கள் சொல்லும் மற்ற மொழியினர் தமிழ் போன்ற தொன்மை மொழியைத் தாய்மொழியாக அடையாதவர். நீங்கள் சொல்லும் மொழிகளெல்லாம் தமிழுக்குப் பின் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்தவை. அவர்களைப் பற்றி பேச வேண்டாம், அதே சமயத்தில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புது தமிழ்ச் சொற்களையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
      தமிழ்ச் சொற்களை அறியாமல் எப்படி புது இலக்கியம் படைப்பது?

      //ஆங்கிலமீடியம் படிக்கும் குழந்தைகள் எப்படித் தமிழைப் படிக்கப்போகிறார்கள் என்ற கவலை தான் இன்று முக்கியமானது// உண்மை தான்..அதற்கு பெற்றோர் தான் உணர்ந்து செயல்பட வேண்டும்.தமிழை வைத்து சொத்து வாங்க முடியுமா என்று நினைத்தால் வேதனைதான்!

      பிறமொழிச் சொற்கள் பிரச்சினை அல்ல என்று விட்டால் பல ஆங்கிலச் சொற்களே தமிழில் தங்கிவிடும், நம் இனியத் தமிழ்ச் சொற்களை இழந்துவிடுவோம். அதனால் இது வேற்று விளையாட்டு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
      நீங்கள சொல்வது போல புது இலக்கியம் படைக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

      உங்கள் கருத்திற்கு மீண்டும் நன்றி!

      நீக்கு
  13. அட கலக்குறிங்க கிரேஸ்... பணி தொடரட்டும் :)

    கேட்க ஆர்வமாக உள்ளேன் :)

    பதிலளிநீக்கு
  14. தங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான் !
    வடமொழி கலப்பு சம்பந்தப்பட்ட என் சிறிய பதிவும் ,கருத்துரைகளும் ...காண்க >>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_20.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பகவான்ஜி. உங்கள் பதிவும் பார்த்து வந்தேன், அருமை! பகிர்விற்கு நன்றி!

      நீக்கு
  15. தமிழா நீ பேசுவது தமிழா?என்ற பாடலை நினைவு படுத்துகிறது.நானும் நல்ல தமிழ் சொற்களை உங்களிடம் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி!
      உங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மைதிலி!

      நீக்கு
  16. தங்களின் தமிழார்வத்திற்கு என் தலைதாழ்ந்த வணக்கம். தங்களின் ஆழமிக்க கருத்துப் பதிவுகளும், விடாப்பிடியான விவாதமும், அதற்குள் இழையோடும் பெரியவர்களுக்கான மரியாதையும் தங்களின்மேல் மரியாதையை மிகுவிக்கிறது. தமழர்களின் இருவிதப் போக்கே இன்றைய தமிழின் நிலையாக நான் காண்கிறேன். இதுபற்றிய எனது தினமணிக் கட்டுரையைத் தங்களுக்கு நேரமிருக்கும்போது படிக்க வேண்டுகிறேன். http://valarumkavithai.blogspot.in/2014/01/blog-post_8560.html#more தங்களின் பதிவுகள் தொடரவேண்டுமென்பதே என் வேண்டுகோள்.வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா! உங்கள் பாராட்டைக் கண்டு எல்லையில்லா உவகை அடைந்தாலும் நான் அதற்குத் தகுதியுடையேனா என்ற ஐயமும் வருகிறது. உங்களின் இனிய ஆழமான கருத்துரைக்குத் தலைவணங்கி நன்றி கூறுகிறேன். உங்கள் கட்டுரையைக் கண்டிப்பாகப் படிக்கிறேன்.பகிர்விற்கு நன்றி ஐயா. உங்களைப் போன்ற சான்றோரின் வாழ்த்துகளுடனும் ஊக்கத்துடனும் என் பதிவுகளைத் தொடர்கிறேன். நன்றி!

      நீக்கு
  17. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன். பார்த்தேன்...தகவல் சொல்லி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  18. முதலில் உங்கள் பெயரை மாற்றுங்களேன். அதுவே தமிழ்ப்பெயர் இல்லையே. வடமொழி கலப்பாக இருக்கிறதே! வலைச்சரத்தில் ராஜி அவர்களின் அறிமுகத்தால் வந்தேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
      ஆமாம், என் பெயர் தமிழ் அல்ல என்று எனக்கு நன்றாகவேத் தெரியும். அதற்காக மாற்றவேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை..அது தேவையற்றது என்று நான் நினைக்கிறன்..என் பெற்றோர் இட்ட பெயர் அது, என் அடையாளமாக இருப்பது அது.
      //அப்படிக் கலந்த வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையானத் தமிழ் சொற்களையும் பகிர்வதே என் நோக்கம்//
      தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்துவது என்பது எளிதான காரியமும் இல்லை, அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் வேண்டும்...அதைச் செய்கிறோமோ இல்லையோ, தமிழ்ச்சொற்களை அறிந்தேனும் இருப்போம் என்பதே என் எண்ணம்..பயன்படுத்துவது வடசொல்..அதற்கு இணையாக தமிழில் இப்படி ஒரு சொல் இருக்கிறது என்பதே பலருக்கும்(என்னையும் சேர்த்துதான்) தெரியாது..அப்படி நான் அறிந்தவற்றை பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி. சொற்பயன்பாட்டை முடிந்த அளவு மாற்றுவேன், பெயரை மாற்றமாட்டேன்.

      நீக்கு
    2. சரியாக சொன்னீங்க கிரேஸ். பெயருக்கும் தமிழ் ஆர்வத்திற்கும் தொடர்பில்லை. பெயர் எனபது நம் பெற்றோர் கொடுத்த அடையாளம். உங்கள் தமிழ் ஆர்வம் அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து எழுதுங்க.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...