உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்

மதி மயக்கும் மதி
குளுமை குறையாத் திங்கள்
நிலம் ஒளிரச்செய்யும் நிலா
வளரும் தேயும் பிறை
புவி சுற்றும் சந்திரன்

பல பெயர்கள்
பல தோற்றங்கள்
மாறுவதில்லை  பொலிவு
தவறுவதில்லை ஈர்ப்பு
நித்தம்  கண்டாலும்
எத்துனை அழகு!

அலுப்பதில்லை அனுதினம்
அம்புலியின் அமைதி
போதவில்லைப்  பொழுதும்
பொலிவில் பொதிந்துவிட
மனதிற்கு மலர்ச்சி
மதியுடன் மௌன மொழிகள்

பயணங்களில் சில நாள்
பலகணியில் சில நாள்
தோட்டத்தில் சில நாள்
சாளரத்தில் சில நாள்
உப்பரிகையில் சில நாள்
உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்!



23 கருத்துகள்:

  1. வணக்கம்
    பல பெயர்கள்
    பல தோற்றங்கள்
    மாறுவதில்லை பொலிவு
    தவறுவதில்லை ஈர்ப்பு
    நித்தம் கண்டாலும்
    எத்துனை அழகு!

    உண்மையான வரிகள் இரசித்தேன் கவிதை அருமை வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. நித்தமும் பார்த்தாலும் அலுக்காது நிலவு
    நித்தமும் படித்தாலும் திகட்டாது உங்கள் கவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியாய் அன்போடு பாராட்டிய உங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரவாணி!

      நீக்கு
  3. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. மதியுடன் மௌன மொழிகள்
    Nanru.....
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  5. தமிழ் சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாடுபொருள் நிலவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..இன்று உங்கள் கவியிலும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நிலாச்சோறு சாப்பிட்டு நிலாப்பாடல்கள் எண்ணியிருக்கிறோம்...
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      நீக்கு
  6. நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறுட்டாத தாய் உண்டோ! அழகான வரிகளில் அமைதியாய் கவிபாடி விட்டீர்கள். அருமை சகோ. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறுட்டாத தாய் உண்டோ! // இல்லையென்றே நினைக்கிறேன். மனமார்ந்த கருத்திற்கு நன்றி சகோ.

      நீக்கு
  7. என்னமா ரசிச்சு எழுதுரிங்க.. விவரிக்க வார்த்தைகள் இல்லை.. சூப்பர் ஒ சூப்பர் :) .

    பதிலளிநீக்கு
  8. அருமை கிரேஸ்!! ரசித்து எழுதியிருக்கிறாய்.. நானும் ரசித்துப் படித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தியானா! நிலவு எப்பொழுதும் என்னை மயங்க வைத்துவிடும் :)

      நீக்கு
  9. என்னவொரு ரசனையும் கவி வரிகளும்..

    அசரவைக்கின்றீர்கள் தோழி! உங்கள் கற்பனையை எனக்கும் கொஞ்சம்
    கடனாகத்தாருங்களேன்...:)

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் மனமார்ந்த இனிய பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி!
      ஆனால் நான் என்ன தருவது, உங்கள் கற்பனையும் திறமையும் கவியாகவும் க்விளிங்காகவும் வடிவம் பெறுகிறதே :)

      நீக்கு
  10. மிகவும் அருமையான படைப்பு. அக மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். மனமார்ந்த கருத்திற்கும் நன்றி விவரணன். :)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...