உனைக் கண்ட போதில் ரோசாவே

http://alsperiscope.blogspot.in/2013/10/nature.html

கோடையில் இதம் தரும் பன்னீரோ
களைப்பில் புத்துயிர் ஓட்டும் தென்றலோ

தொடுகையில் உவகை தரும் குழவிக்கன்னமோ
உள்ளத்தில் என்ன நினைத்தாரோ

எனைத் தான் நினைத்து ஏங்கினாரோ
உனைக் கண்ட போதில் ரோசாவே

என் கூந்தல் சேர்க்கவே நினைத்தாரோ
பத்திரமாய் படமும் பிடித்தாரோ

உன் நறுமணம் எப்படிக் கொணர்ந்தாரோ
என் நாசியில் உணர வைத்தாரோ

உள்ளம் உவக்கும் படி தந்தாரோ
உள்ளம் கொண்ட என் ராசாவே



16 கருத்துகள்:

  1. வணக்கம்

    இரு வரிக் கவிதைகள்
    பல இதங்களை நனையவைத்த விட்டது
    அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. கல்க்கல் கிரேஸ்...
    //என் கூந்தல் சேர்க்கவே நினைத்தாரோ
    பத்திரமாய் படமும் பிடித்தாரோ//
    ரசனை மிகுந்த வரிகள்

    பதிலளிநீக்கு
  3. அருமை கிரேஸ்.. படம் பிடிக்கும் பொழுது கண்டிப்பாக, அது ஒரு கவிதைக்கு வித்தாகும் என்று நினைத்திருக்க மாட்டார் :))

    பதிலளிநீக்கு
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்! எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் காரணம்.

      நீக்கு
  5. துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து மகிழ்ந்தேன் உங்கள் அருமையான பதிவை, பகிர்ந்தமைக்கு நன்றி!

      நீக்கு
  6. உணர்வோடு கலந்த உள்ளார்த்த வரிகள் தோழி!

    மழைத்துளி தாங்கும் மலரைப்போல
    மன உணர்வுத் துளிகளின் சில்லிட்ட வரிகள் சிறப்பு!

    வாழ்த்துக்கள்!

    த ம.3

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...