'நீ குழல்' தெரியுமா?

எப்பொழுது பார்த்தாலும் போர் அடிக்கிறது, போர் அடிக்கிறது என்று ஒரே தொல்லை. இரண்டு நாட்கள் முன்பு, "நானும் என் உடன் பிறந்தவர்களும் இப்படி எங்கள் அம்மாவைத் தொந்திரவு செய்ததில்லை. அவர்களும் நான் உங்களுடன் விளையாடுவது மாதிரி விளையாடியதில்லை" என்றேன். "தொலைக்காட்சி கூட நான் கல்லூரி சேர்ந்தபின் தான் வாங்கினார் தாத்தா. நீங்கள் என்னவென்றால், டிவி, ஐபேடு, யூ டுயூப் என்று கேட்கிறீர்கள்" என்றேன். பெரியவன் பாவம் சாது, அமைதியாக இருந்தான். சிறியவன், "மதுரைல டிவி இருக்கே" என்றான். அதற்கு "இப்பொழுது இருக்கிறது, நான் உன்னை மாதிரி சிறியவளாய் இருந்தபொழுது இல்லை" என்றேன். "நீங்க இப்ப பிறந்திருக்கலாம்ல" என்றான்!!!!!

இன்று, இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்து வையுங்கள் என்றேன். மீண்டும் சிறியவனே தான்..."எங்க வைக்க" என்றான் வேண்டுமென்றே. நான் "என் தலையில்" என்றேன். அதற்கு அவன், "இவ்ளோ டாய்சையும் எப்படி உன் தலைல வைக்கிறது" என்று அப்பாவியாகக் கேட்டான்.
இப்படி அவனுடைய 'திறமை' அதிகம். :)

ஒரு மகிழ்ச்சி தரும் விசயம் என்னவென்றால், "அம்மா,  'நீ குழல்' பார்க்கவா" என்றான் பெரியவன். அதென்னடா என்று கேட்டால், "யூ டுயூப்" என்றானே பார்க்கலாம்...

தமிழ்த் தாய்க்கு வேறென்ன வேண்டும் :)

19 கருத்துகள்:

  1. குழலினிது யாழினிது என்பர் மழலைச்சொல் கேளாதவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலியபெருமாள்.

      நீக்கு
  2. ஹா... ஹா... ரசிக்க வைக்கும் திறமைகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஓ..............ஓ........... இரசிக்கவைக்கும் பதிவு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு திறமை... ரொம்பவும் ரசித்தேன் தோழி!

    நிச்சயம் குழந்தைகள் மிகப் பெரிய அளவில் அறிவுத்திறனோடு உங்களை இன்னும் ஆச்சரியப்படுத்தத்தான் போகிறார்கள்...

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கும் அன்பாய் குழந்தைகளை வாழ்த்தியதற்கும் உளம்கனிந்த நன்றி இளமதி!

      நீக்கு
  5. அட அட... கலக்குறாங்க பசங்க..

    //"நீங்க இப்ப பிறந்திருக்கலாம்ல" என்றான்!!!!! // அவன் கிட்ட பேசி Win பண்ண முடியுமா.. திரும்பியும் பல்பு வாங்கிட்டிங்களே :)

    //"அம்மா, 'நீ குழல்' பார்க்கவா" // --- சூப்பர் போங்க... உங்க காத்து பலமா வீசுது.. தொடரட்டும். தொடரட்டும்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொழுதும் நடப்பதுதானே ஸ்ரீனி :)
      ஆமாம், ரொம்ப மகிழ்ச்சியாயிட்டேன்.

      நீக்கு
  6. குட்டியிடம் உன்னால் பேசி ஜெயிக்க முடியுமா? உனக்கு எதற்கு வேண்டாத வேலை? :‍))

    குழல் தெரிவது ஆச்சரியம் தான் கிரேஸ்.. குட்டீஸீக்கு வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பண்றது? அப்படி ஆகுது தியானா :)
      எப்பொழுதோ சொல்லிக் கொடுத்தது.
      நன்றி தியானா!

      நீக்கு
  7. குழந்தைகள் எவ்வளவு
    இயல்பாக மொழிபெயர்க்கிறார்கள் !
    மனம் தொட்டப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா, உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  8. குழந்தைகளின் பேச்சுக்கள் அமுதம்! நான் இப்போது என் பேரன்களுடன் இதையெல்லாம் அனுபவித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதானம்மா! உங்கள் பேரன்களுடன் மகிழ்வது கேட்டு மகிழ்ச்சி! உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி அம்மா!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...