நாம் சிரிக்கும் நாளே திருநாள்


தின்பதற்குப் பலவித இனிப்புகள்
தான்செய்வது பாதி பிறர் தருவது பாதி
திகட்ட உண்டு திளைப்பதுவாத் திருநாள்?

மானம் மறைக்கத் துணி தேடும்
மாந்தர் தம்மைக் கவனியாமல்
மயங்கிக் களிப்பதுவாத்  திருநாள்?

ஏற்கெனவே ஓட்டைப் போட்ட சாரலியத்தை (ஓசோனை)
ஏகத்துக்கும் அழித்துவிட உறுதிகொண்டு
ஏவிவிடும் ராக்கெட்டும் வெடியுமாத்  திருநாள்?

விளையாட்டுப் பருவம் தொலைத்து
வினை செய்யும் நிலையொழிந்து  சிறுவர்
விளையாடிச் சிரிக்கும் நாளே திருநாள்

வன்முறையும் வன்கொடுமையும்
வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
வளமாய் வாழும் நாளே திருநாள்

மருந்துக்கும் உணவில்லா மாந்தர் சிலர்
குவளை உணவை மூவேளையும் பெற்றிட
நாம் சிரிக்கும் நாளே திருநாள்

நல்நெறி தழைத்து நயவஞ்சகம் வேரொழிந்து
நல்லதோர் உலகம் நயமாய் உருவாகி
நாம் சிரிக்கும் நாளே திருநாள்!


இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். கவிதை அனுப்புவதற்கான இறுதி நாள் 31-10-2013. மேலும் விவரங்களுக்கு மேலே கொடுத்துள்ள இணைப்பைப் பார்க்கவும், நன்றி!

53 கருத்துகள்:

  1. எல்லோரும் இன்புற்றிருக்க அன்றி வேறு ஒன்றும் நான்
    அறியேன் பராபரமே எனச் சொல்லும் கவிதை அருமை.
    போட்டியில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையைப் பாராட்டி வாழ்த்தியதற்கு உளமார்ந்த நன்றி ஸ்ரவாணி!
      உங்கள் பாராட்டே எனக்கொரு பரிசுதான். நன்றி!

      நீக்கு
  2. கருத்துள்ள வரிகள்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    தங்களின் மெயில் கிடைத்தது... கவிதையை நடுவர்களுக்கு அனுப்பி விட்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி திரு.தனபாலன்! இதுவே எனக்கொரு பரிசாகும்.
      இவ்வாய்ப்பளித்த உங்களுக்கும் ரூபன் அவர்களுக்கும் நன்றி! நடுவர்களுடன் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி!

      நீக்கு
  3. அருமையான அர்த்தமுள்ள ஆக்கம்.

    நாம் சிரிக்கும் நாளே திருநாள் !

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. கவிதை நன்றாக வந்துள்ளது நண்பரே! அர்த்தமுள்ள வரிகள். கவிதைப் போட்டியில் முதலிடம் பெற வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி பாண்டியன். உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!
      உங்களின் மனமார்ந்த பாராட்டே ஒரு பரிசுதான்! நன்றி!

      நீக்கு
  5. இதுபோல் நல்லொரு கவிதை இப்போட்டியில் வெற்றிபெறும் நாளும் நான் சிரிக்கும் திரு நாள் தான், கிரேஸ்!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி வருண்! இப்பாராட்டும் எனக்கொரு பரிசுதான்.

      நீக்கு
  6. சமூக உணர்வு உங்கள் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. //நல்லதோர் உலகம் நயமாய் உருவாகி நாம் சிரிக்கும் நாளே திருநாள்// அற்புதம்!
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மா! நீங்கள் பாராட்டியதே எனக்கொரு பரிசாகும். உங்கள் வாழ்த்துக்கு நன்றி அம்மா!

      நீக்கு
  7. அருமையான கருத்துள்ள கவிதை கிரேஸ்!! திருநாளில் நாம் மட்டும் இன்புற்று இருந்தால் போதுமா?

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தியானா! ஆமாம், கீழ்த்தரத்தில் இருப்பவரையும் நினைத்து செயல்படவேண்டும் தானே. வாழ்த்திற்கு நன்றி தியானா! உன் பாராட்டே ஒரு பரிசுதான்.

      நீக்கு
  8. அற்புதமான கருத்தாழம் மிக்க வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் பரிசாய்ப் பாராட்டும் வாழ்த்துக்கும் நன்றி தோழி!

      நீக்கு
  9. அழமான கருத்து கொண்ட அருமையான கவிதை கிரேஸ்
    போட்டியில் உங்களுக்கு பரிசு கிடைப்பது உறுதி. வாழ்த்துகள் !!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம

    கவிதையின் வரிகள் நன்று போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்! உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் பாராட்டி வாழ்த்தியமைக்கும் நன்றிங்க ஜெயக்குமார்.
      உங்கள் பாராட்டு அதுவும் தமிழாசிரியரின் பாராட்டே ஒரு பரிசுதான்! நன்றி!

      நீக்கு
  12. வன்முறையும் வன்கொடுமையும்
    வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
    வளமாய் வாழும் நாளே திருநாள்.. சிறப்பாக சொன்னீர்கள் தோழி.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு நன்றி தோழி! அதுவே பரிசு என்று மகிழ்கிறேன். நன்றி!

      நீக்கு
  13. சிந்தைதனை சீர்படுத்தும் சிறப்பான கருத்துகள்!

    மனம் நிறைக்கும் கவிதை!

    போட்டியில் வெற்றிபெற இனிய வாழ்த்துக்கள் தோழி!

    த ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் மனமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி இளமதி! இதுவே எனக்கொரு பரிசு :)

      நீக்கு
  14. சமதர்மம் வேண்டும் தீபாவளி கவிதை அருமை கிரேஸ் !!போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகிவதனா உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்.

      நீக்கு
  15. இயல்பாய் உரைத்த அந்த நாளே
    இனிதாய் இனிக்கும் உகந்த நாளே....
    அழகான ஆழமான கவி படைத்தீர்கள்...
    பரிசினை வென்றிட வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இணய கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளம்கனிந்த நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  16. //மானம் மறைக்கத் துணி தேடும்
    மாந்தர் தம்மைக் கவனியாமல்
    மயங்கிக் களிப்பதுவாத் திருநாள்?//
    சிந்தனை வீச்சு ஆகா .... வாசகனின் மனசை அசைத்தால் பெருவெற்றி ... யாருக்காவது ஒரு சட்டை எடுத்துக் குடுத்தால்தான் கவிதைக்கு மரியாதி...
    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் மனமார்ந்த ஆழமான கருத்திற்கு மிகவும் நன்றிங்க மது கஸ்தூரி ரங்கன். மிக்க மகிழ்ச்சி. என் கவிதையால் சிலருக்கு ஒரு சட்டை கிடைத்தால், அதை விட வேறு என்ன பரிசு இருக்கமுடியும்? மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நன்றி பல!

      நீக்கு
  17. அழகான கருத்தாழமிக்க மனங்கவர்ந்த கவி வரிகள். உண்மையில் ஒவ்வொருவரும் சிந்தனையில் ஏற்கவேண்டிய வரிகள். போட்டியில் பரிசு பெற இனிய வாழ்த்துக்கள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இனிய வருகைக்கும் மனமார்ந்த கருத்திற்கும் நன்றி பல கீதமஞ்சரி! உங்கள் அன்பான வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  18. வணக்கம்
    கிரேஸ்
    உங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
    தங்களின் கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. அழகான கவிதை...


    வெற்றிபெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி வெற்றிவேல்!

      நீக்கு
  20. பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்திரவீதிக்காரன் அவர்களே!

      நீக்கு
  21. பாட்டுக்கள் இப்படி ஒரு உலகம் வேண்டும் அருமை பாராட்டுக்கள் மட்டுமல்ல பரிசும் உங்களுக்கே கிடைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. தீபாவளிக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன? அப்படியா? இனிய அதிர்ச்சி தோழி! நீங்கள் சொல்லித்தான் அறிந்துகொள்கிறேன்..இனிமேல் தான் மின்னஞ்சல் மற்றும் என் டஷ்போர்டைப் பார்க்க வேண்டும்..தெரிவித்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பல தோழி!

      நீக்கு
  23. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மா. நடுவராய் இருந்து பல கவிதைகளையும் பரிசீலித்து என் கவிதைக்கு ஒரு பரிசைக் கொடுத்ததற்கு உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  24. ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில்
    வெற்றி பெற்றமைக்கு இனிய நல் வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  25. அருமை. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி நடராஜன்!

      நீக்கு
  26. கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் தோழி !!!

    பதிலளிநீக்கு

  27. வணக்கம்!

    தேமதுரச் செந்தமிழைத் தீட்டி, மனத்துள்ளே
    பூமலரச் செய்தாய் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!
      உங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கின்றன.
      உளமார நன்றிபல ஐயா!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...