இனிக்கும் பண்டிகை உன்னுடனே

நான் செய்தது

எண்கோவை காஞ்சி வேண்டாம் அன்பே 
உன்தோளில் சாஞ்சி காப்பியம் படைக்கணும்

ஏழுகோவை மேகலை வேண்டாம் அன்பே
எழுகின்ற காலை உன்முகமேப் பார்க்கணும்

பொன் மதலிகை வேண்டாம் அன்பே
உன் மனமாளிகைப்  பொன்னாய் நானிருக்கணும் 

காதாடும் குண்டலம் வேண்டாம் அன்பே
காத்து மண்டலம் நம் அன்பால் நிறையணும்

குலுங்கும் வளையல் வேண்டாம் அன்பே
சிலுசிலுக்கும் தென்றல் உன்பெயர் சொல்லணும்

கால் சிணுங்கும் சிலம்பு வேண்டாம் அன்பே
காலமெல்லாம் உன்னன்பு என்னைச் சுற்றணும் 

மினுக்கும் கண்டிகையும் வேண்டாம் அன்பே
இனிக்கும் பண்டிகை உன்னுடனே வேண்டும்

பெண்கள் பயன்படுத்திய அணிகலன்களின் பெயர்களை வைத்து இக்கவிதை எழுதினேன்.
எண்கோவை காஞ்சி - எட்டு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
ஏழுகோவை மேகலை - ஏழு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
மதலிகை, கண்டிகை  - கழுத்தில் அணிவது
குண்டலம் - காதில் அணிவது
சிலம்பு - காலில் அணிவது
வளையல் - கையில் அணிவது

பெண்கள் அனைவரும் இக்கவிதையில் உள்ளது போலச் சொல்லிவிட்டால் தங்கம் விலை ஏறாது, ஏறினாலும் பாதிக்காது ;-).
பெண்களே அடிக்க வந்துடாதீங்க....என் பணி சொற்களைப் பகிர்வதே... :-)

20 கருத்துகள்:

  1. வணக்கம்
    பெண்களின் அணிகலன் பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள்
    பெண்களிடம் இருந்து எப்படிப்பட் எதிர்வினைகள் வருகிறது என்று பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன். ஆமாம், பொறுத்திருந்து பார்ப்போம்...
      உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!
      தீபாவளி வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. அந்த கால பெண்களின் அணிகலன்களை சுமந்த கவிதை வரிகள் அழகு! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அட.. அட. கலக்குறிங்க கிரேஸ்.
    தங்கள் கவிதையும், நீங்க செய்த அணிகலனும் சூப்பர்'ஒ சூப்பர்

    எப்படித் தான் தினம் ஒரு கவி படைக்க முடிக்கிறதோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! :) தினம் இல்லை ஸ்ரீனி, சில நாட்கள் பாலைவனமாகிவிடும் :)

      நீக்கு
  4. மிகவும் அழகு... அருமை... (கைவண்ணமும்) வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அழகான கவிதை...


    அணியும் நகைகள் வேண்டாம் அன்பிருந்தால் போதும் என்கிறீர்கள்... அரிது...!

    அழகான கவிதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், என்னைப் பொறுத்தவரை அப்படித்தான் :)
      உளமார்ந்த நன்றி வெற்றிவேல்!

      நீக்கு
  6. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நம்பள்கி..ஆனால் உங்கள் தளம் பார்க்க முடியவில்லையே...தளமுகவரியைத் தந்தால் நல்லது..நன்றி!

      நீக்கு
  7. பொன்னென்ன பூவென்ன கண்ணே உன்
    கண்ணாடி உள்ளத்தின் முன்னே... பாடல் நினைவில் வந்தது..

    அதுபோலவே இது ஒன்றும் வேண்டாம் நீதான் நீமட்டுமேதான் வேண்டும்
    என்ற அசத்தலான கவிதை படைத்தீர்கள் தோழி!

    கைவண்னம் உங்களதா..
    மிக அருமை அதுவும் உங்கள் கவி போல் ஜொலிக்கிறது..:)

    அன்பு வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு வந்தேன் தோழி..இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் :)
      ஆமாம் தோழி, நான் செய்ததுதான்,,ஆனால் உங்கள் கைவண்ணம் முன்னே இது ஒன்றுமில்லை.. உங்கள் அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. மிக்க நன்றி சௌந்தர்!

      உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  9. சகோதரிக்கு வணக்கம்,.
    அணிகலன்களோடு அழகிய கவியும் தந்த தங்களது திறனுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். அழகிய ரசனை உள்ளம் கொண்டவர் என்பதை தங்கள் கவிவரிகள் பறைசாற்றுகிறது. பகிர்வுக்கு நன்றி..
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாண்டியன்! உங்கள் மனமார்ந்த கருத்தைக் கண்டு மகிழ்கிறேன்! நன்றிபல!
      உங்கள் வாழ்த்திற்கும் நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  10. அணிகலன்கள் அவசியமே.
    அன்பின் வெளிப்பாடாக வரும் அதனை மறுக்க
    மனமில்லை. கண்டிகை , மதலிகை அணி பற்றி
    இப்போது தான் அறிந்தேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெளிப்பாடாக வரும் அணிகலன் உங்களுக்கு விருப்பமென்றால் மகிழ்ச்சிதான் தோழி...அணிகலனால் மட்டுமே அன்பு அமையும் என்பதில்லை என்பதே என் கருத்து!
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...