இணைக்கும் இணையமாம்

இருவரும் இணைந்தே ஒன்றாய்
இறகுப் பேனா பிடித்தோம்
மூங்கில் நாணல் பேனாக்களிலும்
பாங்காய் மை தொட்டுத் தொட்டுப்
படைத்தோம் இன்றும் அழியாக்
காப்பியங்களும் காவியங்களும்
மைக் குடித்தப் பேனாவிலும்
படைத்தோம் கவிதைகளும் கட்டுரைகளும்

கரிப்பொருள் எழுதுகோலும்
கரையக் கரைய நம்மிடையே
கட்டவிழ்த்தே இலக்கியம் படைக்க
இணைந்து படைக்கும் இன்பத்தில்
இறுமாந்தே இருந்தப்  பொழுதில்
இடையில் நுழைந்தது தட்டச்சு
இன்னும் சேர்ந்தது கணினி
இணையாமல் தனித் தனியே
தட்டுகிறோம் தவிப்புடன் நாமே
இணைக்கும் இணையமாம் இது எப்படி?

--கட்டைவிரலும் ஆட்காட்டிவிரலும்


30 கருத்துகள்:

  1. ஆம் விரல்களைப் பிரிக்கும் இணையம்
    வித்தியாசமான அற்புதமான சிந்தனை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இனிக்கும் இணைக்கும் இணையம்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அட ஆமாம்.. இப்படிப் பிரித்து சதிசெய்துவிட்டதே இந்தக் கணினி...:(
    இணையம் இதயங்களையாவது இணைக்கட்டும்!

    நல்ல சிந்தனை! அற்புதம்! வாழ்த்துக்கள் தோழி!

    த ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, அதைச் செய்கிறது என்று நினைக்கிறேன். :)
      மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  4. வித்தியாசமான சிந்தனை! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அட.. இப்படியும் யோசிப்பாங்களா... ரசிக்க வைக்கும் ரசனை... சூப்பர் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  6. உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு... பாடல் நினைவுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அருமையான பாடல்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜனா!

      நீக்கு
  7. வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க கிரேஸ்.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. உனக்கு மட்டும் எப்படி கிரேஸ் இப்படி யோசிக்க முடியுது? :))

    இப்படி இருந்தாலும் எங்களுக்கு ஒரு அருமையான கவிதை கிடைத்ததே..அருமையான சிந்தனை கிரேஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தானா வருது தியானா :)
      மனமுவந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி தியானா!

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி..
    வித்தியாசமான சிந்தனை. விரல்களைப் பிரித்தாலும் இதயங்களை இணைக்கும் பணியை படு வேகமாய் செய்து கொண்டிருக்கிறது. பதிவிட்ட அடுத்த நொடியில் நமது எண்ணத்தை அனைத்து உள்ளங்களும் உவகையோடு படித்து கருத்திடுவது இணையத்தின் துணையாய் தானே... தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சகோ. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே! உண்மைதான், உலகின் பல இடங்களிலிருந்தும் நம் பதிவைப் படித்து வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் இணையத்தால் கிடைத்தனவே! உங்கள் வருகை மகிழ்ச்சியே சகோ, தாமதம் எல்லாம் ஒரு பொருட்டல்ல. பல பணிக்கிடையே வந்து இனிதாய்க் கருத்திட்டமைக்கு உளமார்ந்த நன்றி பாண்டியன்!

      நீக்கு
  10. இதுதான் பிரிவோம் சந்திப்போம் என்பதோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி சந்திக்க விடமாட்டேன் என்கிறதே..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலியபெருமாள்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...