ஆனைக்கும் அடி சறுக்கும்

ஆனைக்கும் அடி சறுக்கும்
ஆதியிலே சொல்லிச் சென்றார்

தவறு செய்யும்  மனித குணம் -அது
தவறி விட்டால் யாவரும் தெய்வம்

வலியவர்க்கும் பெரியவருக்கும்
வலியாக வருமே ஏதோ ஒரு தவறு

கட்டபொம்மருக்கு ஒரு எட்டப்பன்
திப்புவிற்கும் ஒரு காவலன்

தவறு நடப்பது உண்மையில்
தவறுவது இல்லை தரணியில்

ஆனாலும் சிலர் கேட்பார்
படித்தவர் எப்படித்  தவறினார்

படித்தவர் ஏன் செத்தார்
எனவும் கேட்பாரோ மூடர்?


12 கருத்துகள்:

  1. வணக்கம்

    தவறு நடப்பது உண்மையில்
    தவறுவது இல்லை தரணியில்

    குட்டிக்கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தவறு என்னும்போதே தவறி வந்து தவறுதலாக ஏற்படுவதுதானே...

    தெரிந்தும் தவறினைச் செய்ய முடியுமொ.. நல்ல கேள்வி..

    அருமையான வரிகள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    த ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, ஏன் தவறினாய் என்று கேட்டால் என்ன செய்வது? உங்கள் வாழ்த்துக்கு நன்றி இளமதி!

      நீக்கு
  3. //ஆனாலும் சிலர் கேட்பார்
    படித்தவர் எப்படித் தவறினார்
    படித்தவர் ஏன் செத்தார்
    எனவும் கேட்பாரோ மூடர்?//

    சூப்பர் சூப்பர்... அருமையான வரிகள்..
    எல்லாரும் மனிதர்கள் தானே.. தவறு என்பது இயல்பு தானே...

    "தவறு என்பது தவறி செய்வது
    தப்பு என்ப்து தெரிந்து செய்வது"
    என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன

    பதிலளிநீக்கு
  4. படித்தவர் ஏன் செத்தார்
    எனவும் கேட்பாரோ மூடர்?
    // சரியான கேள்வி..

    பதிலளிநீக்கு
  5. உங்கள் தளத்திற்கு முதல் வருகை...மெரினா படத்தில் ஒரு டயலாக் வரும் நெறையா ஃபரண்ட் புடிக்கனும் என்று..நானும் இப்போதுதான் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்..உங்கள் கவிதை கடுகுபோல் இருந்தாலும் காரம் குறையவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக கலியபெருமாள் அவர்களே! மிக்க மகிழ்ச்சி!
      உங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...