வழி மேல் மைகலைந்த விழிவைத்து

வெரு இன்றி தெவ்வர் முனை சென்ற தலைவன்
பருவரல் தன்னை அணுகாமல் வருவான் வெற்றியுடன்

என்றே நறு மாலை கையில் ஏந்தி
நன்றே வரவேற்றிட சிந்தையில் மயங்கி

வழி மேல் மைகலைந்த விழிவைத்து மெல்லிய
வளி கலைக்கும் கூந்தலை செவியின்பின் செருகிய

ஒண் தொடி அணிந்த மடந்தையின் குவளைக்
கண் இரண்டும் ஒளி பெற வருவானா வீரன் அவன்?

சங்க இலக்கியக் காட்சி மட்டுமா இது?
என்றும் நாட்டில் இயைந்த காட்சி இது!

முனை சென்ற தலைவனும் காத்திருக்கும் தலைவியும்
இருப்பதாலேயே
இருப்பதனால் மட்டுமே
சுனை போல கவி பாடிக்கொடிருக்கிறோம் நாம்!


எல்லை காக்கும் வீரர் அனைவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்!

சொற்பொருள்: வெரு - அச்சம், தெவ்வர் - பகைவர், முனை - போர்முனை,பகைவர் இடம், பருவரல் - துன்பம், நறு - நறுமணம், வளி - காற்று, ஒண் தோடி - ஒளிவீசும் வளையல், சுனை - ஊற்று 

9 கருத்துகள்:

  1. //எல்லை காக்கும் வீரர் அனைவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்!//

    அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு...

    எல்லை காக்கும் அனைவருக்கும் நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அழகான பாடல். அனைவருக்கும் சமர்ப்பணமாகட்டும்....

    பதிலளிநீக்கு
  4. சரியாகச் சொன்னீர்கள்
    அவர்கள் தூங்காது விழித்திருக்கத்தானே நாம்
    நிம்மதியாய் உறங்கமுடிகிறது
    அவர்கள் தியாகத்திற்கு எங்கள் வந்தனமும்...

    பதிலளிநீக்கு
  5. கலக்கல் கிரேஸ்... பல புது சொற்கள்... அருமையான கருத்து

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...