இலை பல வடிவில்


இலை இல்லை என்றால் 
கலை இல்லை உலகில் 
இலை தனியில் திரளில் 
இலை பல வடிவில் 


வீட்டில் போரடிக்கிறது என்று தொந்திரவு செய்த மகனை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தேன். பத்தே அடியில் பல இலைகளைக் காட்டினேன். சிலவற்றைச் சேகரித்துக்கொண்ட அவன் வீட்டிற்குச் சென்று அதை வைத்து கைவேலை செய்யலாம் என்றான். உடனே வீடு வந்து நாங்கள் செய்ததுதான் படத்தில் உள்ளது. இலை மாதிரி வடிவம் வரைந்து "Leaves Show" என்று எழுதினான். பிறகு எங்கு சொன்னானோ அங்கு பசை போட்டேன், அவன் இலைகளை ஓட்டினான்.

அவன் மிகவும் ரசித்த தொட்டாச்சிணுங்கி இலை அவன் கொண்டுவரவில்லை, அதுதான் சுருங்கிக்கொண்டு விட்டதே. அது ஏன் அப்படி மூடிக்கொள்கிறது என்று என்னைத் துளைத்து விட்டான். அதன் அசைவைப் பார்த்து எந்த மிருகமும் பயந்துகொண்டு சாப்பிடாது, அதனால் என்றேன். உடனே அவன், "நான் ஒன்றும் செய்யமாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே தொட்டான். கேட்குமா அச்செடி? சுருங்கிக்கொண்டது. ஏன்? ஏன்? என்று நூறு கேள்வி கேட்டவனை சீக்கிரம் கைவேலை செய்யலாம் வா என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். :) அவன் தயவில் எனக்கு ஒரு கவிதை வந்தது! ஒரு நடையில் இரண்டு மாங்காய் :)

10 கருத்துகள்:

  1. அருமை...
    மகனின் தூண்டுதலால் மடைதிறந்த வெள்ளமாய்க் கவிவரிகள்...:)
    இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  2. அங்கும் உங்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டீர்களா? :-)))

    குட்டிப் பையனுக்குக் கேள்விகள் கேட்கச் சொல்லியா தரவேண்டும்? என் வாழ்த்துக்களை அவனுக்குத் தெரிவித்துவிடு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ஆமாம் தியானா, ஆனால் அங்கு மாதிரி அதிகம் இல்லை...பார்ப்போம். கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன், நன்றி தியானா!

      நீக்கு
  3. நீங்க சொன்ன விளக்கமும் அதற்கு அவன் சொன்ன பதிலும் ஹஹ இந்த காலத்து பசங்கள ஏமாத்த முடியுமா ? கவிதை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அவர்கள் புத்திசாலிகள்..வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சசிகலா

      நீக்கு
  4. வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் கலை நோக்கோடு கண்டு, அதன் விளைவுகளை தனக்கு சாதகமாக்கிக் கொள்பவர் தான் படைப்பாளி. அவ்வேளையை அழகாகச் செய்துள்ளீர்கள். தங்களுக்கும் தம்பிக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பாண்டியன் அவர்களே!

      நீக்கு
  5. அழகு...
    // "நான் ஒன்றும் செய்யமாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே தொட்டான். கேட்குமா அச்செடி? சுருங்கிக்கொண்டது. ஏன்? ஏன்? என்று நூறு கேள்வி கேட்டவனை சீக்கிரம் கைவேலை செய்யலாம் வா // -- அவனோட சிந்தனையே சிந்தனை :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...