Wednesday, July 24, 2013

தோட்டமும் தொட்டியில் என்றானபின்..

கடந்து செல்லும் மேகங்களும்
கருணை கொண்டு சில துளி தெளித்ததே
அவை பரிந்து தூதுவிட்ட மேகங்களும்
அணியாய் வந்து கனமாய்ப் பொழிகிறதே
துளிமழையோ கனமழையோ
நிலத்தின் உள்செல்ல வழி வேண்டுமே
எங்கும் உயரும் கட்டிடங்கள்
நடைபாதையும் முற்றமும் காரை
மரங்களை வெட்டி தார் ஊற்றிய சாலை
மேகம் பொழிந்தாலும் என் செய்ய
தோட்டமும் தொட்டியில் என்றானபின்
மழைத்துளியை உறிஞ்ச  மண் எங்கே
இடைவெளி சிறிது விடுங்களேன்
மழை வளமாக்க உதவுங்களேன் 

30 comments:

 1. சிந்திக்க வேண்டிய வரிகள் அருமை...

  இன்னும் வருங்காலத்தை நினைத்தால்...!

  ReplyDelete
  Replies
  1. பயம் தான்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.தனபாலன்

   Delete
 2. தோட்டமும் தொட்டியில் என்றானபின்
  மழைத்துளியை உறிஞ்ச மண் எங்கே
  இடைவெளி சிறிது விடுங்களேன்
  மழை வளமாக்க உதவுங்களேன்

  அருமையாகச் சொன்னீர்கள்
  தோட்டம் தொட்டியெனவே ஆனது எனச்
  சொன்னவிதம் அதிகம் மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  //

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்த வரி குறிப்பிட்டு கருத்துரைத்ததிற்கும் நன்றி ரமணி அவர்களே

   Delete
 3. தாய்நாட்டிலிருந்து முதல்ப் பதிவு! தாய்மண் மணக்கவில்லைனு சொல்வதுபோல இருக்கிறது! :)

  மண் எங்கே? மரம் எங்கே?னு கேட்டீங்கனா, "அமெரிக்காக்காரி இன்னும் ஜார்ஜியாலயே இருக்காபோல, நம்ம ஊருக்கு வா! விழித்துக்கொள்!"னு சொல்லுவாங்க! கவனம், கிரேஸ்! :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், சொல்வார்கள் என்றே நீங்கள் சொல்லிவிட்டீர்களோ :)
   தாய்மண்ணிலிருந்து பதிந்ததுதான், ஆனால் சொல்லியிருக்கும் நிலை உலகம் முழுவதும் ஆங்காங்கு இருக்கிறது வருண்..
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 4. பிடியளவு நிலம், மண்கூட இல்லாமல் தோட்டமும் தொட்டியிலானது வருத்தமே!

  நல்ல சிந்தனை! அருமையான வரிகள்!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி! நீங்களும் கடிதப்போட்டியில் களம் இறங்கியிருக்கிறீர்கள் போல..படிக்கவேண்டும் தோழி..

   Delete
  2. கடிதப் போட்டியா தோழி! எது?...
   சகோ சீனுவின் காதலி(லன்)க்கு... அதையா சொல்றீங்க... ஹையோ நான் அந்தப் பக்கமே வரலேங்க...:)
   தலை மறைவா இருக்கேன். எனக்கும் எழுத்திற்கும் அத்தனை நெருக்கம் அதனால்...:)))

   Delete
  3. சகோ.சீனு மின்னஞ்சலில் கடைசி வாரம் எழுதியவர்கள் பட்டியல் அனுப்பியிருந்தார்கள். அதில் இளமதி என்றொரு பெயர் கண்டு நீங்கள் என்று நினைத்து விட்டேன் தோழி. :)

   அவர் மற்றொரு இளமதி போல, அவருடைய கடிதம் இதோ...http://www.seenuguru.com/2013/07/blog-post_20.html

   ஆனாலும் உங்கள் எழுத்து அருமையோ அருமை தான் தோழி! :)

   Delete
 5. "மழைத்துளியை உறிஞ்ச மண் எங்கே
  இடைவெளி சிறிது விடுங்களேன்
  மழை வளமாக்க உதவுங்களேன் "

  மிகவும் இரசித்த வரிகள். இன்றைய நிலையில் அனைவரும் உணர்ந்து, செயல்படுத்த வேண்டிய கருத்து. வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி தமிழ்முகில்!

   Delete
 6. Replies
  1. என்ன சொல்லவரீங்கனு புரியல..திட்டலன்னு நினைச்சுக்கிறேன்.. :)

   வருகைக்கு நன்றி

   Delete
 7. சிந்திக்கட்டும் பலர்! அருமைக்கவிதை!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனிமரம் அவர்களே!

   Delete
 8. இங்கு எங்கு நோக்கினும் காடும் மரமும் செடியும் கொடியும்

  பொங்கி வழியும் ஏரிகள் நடுவிலும் மலர்கள் மொட்டுக்கள்.

  எங்கும் இது போல் ஏன் இல்லை என இறைவனை கேட்டேன்.

  தங்கு தடையில்லா மனிதரின் உள்ளமே காடுகள் என்றான்.


  சுப்பு தாத்தா.

  நியூ ஜெர்சி.
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுப்பு தாத்தா

   Delete
 9. வருக வருக பதிவுலகத்திற்கு மீண்டும் வருக !! :)

  ஒரு விசயத்தை சொல்ல பேச்சாளருக்கு பல மணி நேரம் தேவை. ஒரு கவிஞருக்கு ஒரு வரி போதும் :). பின்வரும் வரி ஒரு உதாரணம்..

  //தோட்டமும் தொட்டியில் என்றானபின்// -- என்ன ஒரு அழமான வரி.
  அருமையான கவிதை கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. அட :) மிக்க நன்றி ஸ்ரீனி

   Delete
 10. "மழைத்துளியை உறிஞ்ச மண் எங்கே
  இடைவெளி சிறிது விடுங்களேன்
  மழை வளமாக்க உதவுங்களேன் " சிந்தனைக் கவி அருமை.

  பலரும் செயல்படுத்தினால் நன்று.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி அவர்களே

   Delete
 11. //தோட்டமும் தொட்டியில் என்றானபின்
  மழைத்துளியை உறிஞ்ச மண் எங்கே
  இடைவெளி சிறிது விடுங்களேன்
  மழை வளமாக்க உதவுங்களேன் //

  மிக மிக அருமையான வரிகள் கிரேஸ்.. கலக்கிட்ட போ.. வாழ்த்துகள்!!

  ReplyDelete
 12. ##மழைத்துளியை உறிஞ்ச மண் எங்கே## வேதனையான உண்மை... கிராமப்பகுதிகளில் கூட வளர்ச்சிப் பணிகள் என்ற போர்வையில் காங்கிரீட் சாலைகள் ஆக்கிரமித்துள்ளதால் பெய்யும் மழைத்துளிகள் வீணாகித்தான் போகின்றன...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அழகு, பெயரில் இயற்கையை அழித்துக் கொண்டுதானிருக்கிறோம்.

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எழில்.

   Delete
 13. அழிந்துவரும் இயற்கையின் கொடுமைதான் ஆங்காங்கே சீற்றமாய் உருவெடுக்கிறதே.. அறிந்தும் இன்னும் அறியாமையில் உழன்றுகொண்டிருக்கிறோம் நாம். என்ன செய்ய? வனங்களை அழித்து, வீட்டைக்கட்டித் தோட்டம் அமைத்தோம். இப்போது தோட்டமும் தொட்டிச்செடிகளாகிவிட்டன. தொட்டிச்செடிகளும் மறைந்து செயற்கைச்செடிகளாகிவிடும் சிலநாளில். மனிதனும் வாழுமிடமற்று வாடிப்போவான் அந்நாளில். மனம் சொடுக்கிய கவிதை. அருமை கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. // தொட்டிச்செடிகளும் மறைந்து செயற்கைச்செடிகளாகிவிடும் சிலநாளில். மனிதனும் வாழுமிடமற்று வாடிப்போவான் அந்நாளில். // அந்நிலை வந்துவிடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது கீதமஞ்சரி. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 14. Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கவிதை அந்த தள தொகுப்பில் இருப்பதை
   தெரியப்படுத்தியதற்கு நன்றி திரு.தனபாலன்.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...