இரவின் வருதல் அறியான்

கருங்கண் தாக்கலை என்ற குறுந்தொகைப் பாடலைப் போலவே ஐங்குறுநூற்றில் ஒரு பாடல் படித்தேன். சங்க காலத்தின் இரு நூல்களில் வரும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஒரே கருத்தைச் சொல்வதைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன். அந்தப் பாடல் இதோ உங்களுக்காக.
 
"கரு விரல் மந்திக் கல்லா வன்பறழ்
அரு வரைத் தீந்தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே"

ஐங்குறுநூறு பாடல் எண் 272, பாடியவர் கபிலர், குறிஞ்சி திணைப் பாடல் – தலைவி (தலைவன் கேட்கும்படியாகத்) தோழியிடம் சொன்னது.

எளிய உரை: கரிய விரல்களை உடையப் பெண் குரங்கின் முதிர்ச்சியில்லாத வலியக் குட்டிக்குரங்கு மலையில் உள்ள இனிமையானத் தேன்கூட்டைக் கலைத்துவிட்டு அருகிலிருக்கும் அச்சமூட்டும் உயர்ந்த கிளைகளில் தாவும் நாட்டைச் சேர்ந்த தலைவன் இரவில் வரமாட்டான். (ஆனால்) தோழி! "வருகிறான், வருகிறான்" என்றே சொல்கிறாள் என் தாயே.

உட்பொருள்: கடினமான அச்சம் தரும் மலைப்பாதையில் இரவில் வருவதைத் (தன்னைக் காண) தவிர்த்துத் தன்னைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தலைவிக் குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் காதில் விழுமாறு இச்செய்தியைத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி. மந்தியைக் கருப்பொருளாகக் கொண்டு அழகாகத் தன் கருத்தைச் சொல்லும் பாடல். மலை முதற்பொருளாகும்.

சொற்பொருள்: கருவிரல் மந்தி – கரிய விரல்களையுடைய பெண் குரங்கு,  கல்லா – முதிர்ச்சியில்லாத, வன்பறழ் – குட்டிக்குரங்கு, அரு வரை – கடினமான மலை, தீந்தேன் – இனியத்தேன், எடுப்பி – கலைத்து,  அயலது – அருகிருக்கும், உருகெழு – அச்சம்தரும், நெடுஞ்சினை – உயர்ந்த கிளை, பாயும் – தாவும், நாடன் – நாட்டைச் சேர்ந்தவன், இரவின் வருதல் அறியான் – இரவில் வரமாட்டான், வரும் வரும் என்பள் தோழி– “வருகிறான், வருகிறான்” என்கிறாள் தோழி, யாயே – என் தாயே

23 கருத்துகள்:

  1. அருமை... உங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்...

    தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பொருள், சொற்பொருள் என விளக்கமாக கொடுத்தால் தான் எனக்கொல்லாம் புரியுதுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சங்கவி, சங்கப்பாடல்கள் சற்று கடினமாகத்தான் இருக்கின்றன..ஆனால் இனிமையானவை. எனக்குத் தெரிந்ததை அனைவரும் படித்து அறிய பகிர்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சத்ரியன் அவர்களே!

      நீக்கு
  4. நன்றாக சுவைக்கத் தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. தோழி! உங்கள் விளக்கவுரையால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிகிறது.
    இல்லையெனில் இப்படிப்பட்ட அருஞ்சுவைமிக்க சங்ககால இலக்கியங்ககளைச் சுவைக்கமுடியாமல் இருந்திருப்பேன்!

    மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி தோழி..என்னை மேலும் மேலும் சங்கப்பாடல்களைப் பகிர ஊக்கமளிக்கிறது உங்கள் கருத்துரை. வாழ்த்துக்கு நன்றிபல இளமதி!

      நீக்கு
  6. அழகு... உங்கள் தமிழ் ஆர்வம் எனக்கு வியப்பைத் தருகிறது தோழி. எனக்கும் தமிழ் சங்க இலக்கியம் மீது அதீத நாட்டம் உண்டு... நிறையவே பிடிக்கும்.

    ஒளவையாரையும் கிறங்கடித்தக் காதல்
    http://iravinpunnagai.blogspot.com/2012/07/blog-post.html
    http://iravinpunnagai.blogspot.com/2012/07/2.html

    படித்து எப்படி உள்ளது என்று கூறுங்கள், இலக்கிய பாடலை எளிய கவிதை நடையில் எழுத முயற்ச்சித்துள்ளேன்... தங்களுக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் சங்க இலக்கியம் மீது ஆர்வம் இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன் வெற்றிவேல்.
      நீங்கள் சுட்டியிருக்கும் பதிவுகளைக் கண்டிப்பாக படிக்கிறேன். பகிர்ந்ததற்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

      நீக்கு
  7. அருமை கிரேஸ். சங்கப் பாடலை படிப்பதோடு மட்டுமில்லாமல் அனைவரும் புரியும் வகையிலும், ரசிக்கும் வகையிலும் எளிய நடையில் தரும் உங்கள் திறன் வியக்க வைக்கிறது.

    என்றும் தொடரட்டும் உங்கள் பணி :)

    பதிலளிநீக்கு
  8. அழகான கவிதை அதற்கான விளக்கம் சூப்பர் அக்கா

    பதிலளிநீக்கு
  9. அழகான பாடல். எளிமையான விளக்கவுரையும் அருமை தோழி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா இது கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்தது போல் இருக்கிறது. பொருளோடு புரிய வைக்கும் கவிதை காண வருகிறேன் தொடர்ந்து.
    நன்றி ! வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  11. மிகவும் அருமை. தங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். சுவைக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...