நீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி?

காப்பி சூடாய்த் தான் பிடிக்கும்
குளிர்களி உருகாமல் தான் பிடிக்கும்

இட்லி மிருதுவாய்த் தான் பிடிக்கும்
முறுக்கு மொருகலாய்த் தான் பிடிக்கும்

மாங்காய் புளிப்பாய்த் தான் பிடிக்கும்
பலா இனிப்பாய்த் தான் பிடிக்கும்

மல்லிகை மொட்டாய்த் தான் பிடிக்கும்
ரோஜா மலர்ந்து தான் பிடிக்கும்

அனைத்திற்கும்  ஒரு 'தான்' இருக்க
நீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி?


சொற்பொருள்: குளிர்களி - ஐஸ்கிரீம் 

23 கருத்துகள்:

  1. அளவில்லா அன்பு 'தான்' காரணம் என்று நினைக்கிறேன் :)

    அழகும், அன்பும் நிறைந்த கவிதை அருமை கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    எளிய வார்த்தைகளில்
    அருமையாக சொல்லிப்போனது
    அதிகம் மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அதானே...?

    மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. தான் என்னும் எண்ணம் போய் எல்லாமே அவனானதால் அத்'தான்' என்னும் நிபந்தனைச் சொல்லின் தேவையற்றுப் பிடித்திருக்கிறது அத்தான் என்னும் அவனைத்தான். அழகிய ரசனையோடு ஆழமான காதல் வெளிப்பாடு. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  5. அழகான பொருள்!!!

    வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  6. எதுவும் பிடிக்கும் எப்பவு மென்றாய்
    அதுவும் தானாய் அமைந்த தில்லை
    இதுவும் அவையும் இணையா மோஅவன்
    பொதுவோ சொல்லு பெண் மனமே!

    அழகிய கவிதை. அர்த்தமோ ஆயிரம்.
    ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதுவும் அவையும் இணையா மோஅவன்
      பொதுவோ சொல்லு பெண் மனமே!//அருமை - இணையில்லைதானே தோழி :)
      ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி இளமதி

      நீக்கு
  7. காபி, ஐஸ்க்ரீம், இட்லி, முறுக்கு, மாங்காய், பலா, மல்லிகை, பலா எல்லாம் உணர்ச்சிகளற்ற உங்கள் உள்ளம் புரியாதவைகள். நீங்கள் சொல்லும் "நீ" உங்கள் சந்தோஷத்தில் சந்தோஷம் அடையும், உங்கள் துன்பத்தில் பலமடங்கு துன்பமடையும், உங்கள் மனதறிந்த உணர்ச்சிகளுடைய உன்னதமான ஓர் "உயிர்"னு நெனைக்கிறேன். :-) சரியா??

    ஆமா, நீங்க என்ன கேள்வி கேட்பதுபோலவே உங்கள் அன்பை "இப்படி"யெல்லாம் வெளிப்படுத்துறீங்க, கிரேஸ்? நான் ஒரு மக்கு, பதில் தெரிந்த உங்க கேள்விக்கெல்லாம் இப்படி சீரியஸா பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறேன்!:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நீங்கள் சொல்லும் "நீ" உங்கள் சந்தோஷத்தில் சந்தோஷம் அடையும், உங்கள் துன்பத்தில் பலமடங்கு துன்பமடையும், உங்கள் மனதறிந்த உணர்ச்சிகளுடைய உன்னதமான ஓர் "உயிர்"னு நெனைக்கிறேன். :-) சரியா??// மிகவும் சரியே!
      என்னை அறியாமலே கேள்விகளாக வந்துவிட்டதோ :)
      பதில் தெரியுமோ தெரியாதோ..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி வருண்!

      நீக்கு
  8. அழகான கவிதை ...வாழ்த்துகள் தோழி !!!

    பதிலளிநீக்கு
  9. I think one of my comments went into your "spam box". If that is the case please check out in your comments spam box. If it was filtered during your moderation for whatever reason, that's fine too! Take it easy, Grace!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks a lot for letting me know Varun. I discovered few comments in the spam folder..think those had landed in spam by mistake..thanks to touch screen technology in mobile :)I will be more careful hence, thanks again.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...