கரைசேர்ந்த ஓடுகள்


பரந்து விரிந்து வான்தொடும் கடல்
பொங்கிப் பாய்ந்து தழுவும் அலைகள்

தம் இருப்புச் சொல்லி நொடியில்
துள்ளி முழுகும் மீன்கள்

வானில் பறந்து கூர்ந்த பார்வையில்
துல்லியமாய் மீன் பிடிக்கும் பறவைகள்

அழகாய் அமைதிதரும் நீர் பரப்பு
ஆழமாய் வைத்திருக்கும் செழிப்பு

பல விதமாய் பல வண்ணமாய்
நீர்த் தாவரங்கள் நீர்வாழ் பிராணிகள்

ஆழியின் அளவில்லா செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை

அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்

21 கருத்துகள்:

  1. ஆஹா..

    //தம் இருப்புச் சொல்லி நொடியில்
    துள்ளி முழுகும் மீன்கள்// - அழகு

    அழகான வரிகளைக் கொண்ட நிறைவான கவிதை கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  2. மனதின் ஆழமும் கடலின் ஆழமும் ஒன்றே மீண்டும் மீண்டு எழும்பும்

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. ***தம் இருப்புச் சொல்லி நொடியில்
    துள்ளி முழுகும் மீன்கள்***

    மீன்களோடு விளையாடும் "உயிரோட்டமுள்ள" உங்கள் கவிதை வரிகள்தான் எனக்கு இந்தக்கவிதையிலும் மிகவும் பிடித்த வரிகள்.:-)

    பதிலளிநீக்கு
  5. ஆழியின் அழகை
    ஆழமாய் மிகரசித்தே
    தோழி நீ எழுதிய கவிச்சித்திரம்
    சூழ என்நினைவு தமிழ்
    ஈழத்திலே மூழ்கியதே
    வாழி நீ!வளர்த்திடு வண்ணக்கவி!

    மிகவே ரசித்தேன்! கவிக்காட்சி மனதை நிறைத்தது.
    வாழ்த்துக்கள்!
    தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  6. "ஆழியின் அளவில்லா செழிப்பை
    வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை

    அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
    கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள் "

    ஒதுங்கிய கிளிஞ்சல்களும் கவியாகி உயிர்பெற்றனவே.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான். வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  8. @வருண்: மிக்க நன்றி வருண்.
    //மீன்களோடு விளையாடும் "உயிரோட்டமுள்ள" உங்கள் கவிதை வரிகள்தான் எனக்கு இந்தக்கவிதையிலும் மிகவும் பிடித்த வரிகள்.:-)// கவிதையை ரசித்து உயிரோட்டமுள்ள கவிதை வரிகள் என்றும், பிடித்த வரிகளைச் சொன்னதற்கும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. @இளமதி: உங்கள் கவியும் அருமை..வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி இளமதி!

    பதிலளிநீக்கு
  10. @மாதேவி: நன்றி மாதேவி! ஆமாம் கிளிஞ்சல்கள் உயிரோட்டமாய் மகிழ்ச்சி தந்தன.

    பதிலளிநீக்கு
  11. அழகான அருமையான வரிகள் கிரேஸ்.. வார்த்தைகளைக் கோர்க்கும் முறையை உன்னிடம் தான் கற்க வேண்டும் :‍))

    பதிலளிநீக்கு
  12. அழகான கவிதை... கடற்கரையின் அழகை இவ்வளவு அழகாக யாராலும் கூற இயலாது... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  13. முதன் முறை தங்களின் தளத்திற்கு வருகிறேன். கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. @இரவின் புன்னகை: வருகைக்கு முதல் நன்றி. மனம்திறந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  15. @கரந்தை ஜெயக்குமார்: வருகைக்கு நன்றி! கவிதை படித்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  16. மிக்க அழகான கவிதை. படித்து ரஸித்தேன் அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. கடற்கரையில் நின்று அலையையும் காற்றையும் அனுபவித்த சுகம் - தங்கள் கவிதையில் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  18. @காமாட்சி: வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  19. @சிவகுமாரன்: உங்கள் கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி பல.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...